(Reading time: 10 - 20 minutes)

"ஒன்னுமில்ல டீ, கரண்டு போச்சு, மாடில எதோ விழற சத்தம் கேட்டுது, சரின்னு பாக்கப்போயி கீழே விழுந்துட்டேன்." இந்த வாரம் ஜாஸன் சமாதிக்குப் போயி பாத்துட்டு வரனும்டி!! என்று கூறிவிட்டு, எமியின் தலைக்கோதி விட்டான் தாமஸ்.

எமிக்கு என்னவோ உறுத்தியது. தாமஸ் கண்களில் பயம் தெரிந்ததை, எமி கண்டிருந்தாள். 

பள்ளியிலிருந்து எபி வந்தவுடன் அவனைத் தனியாக அழைத்துச்சென்று விசாரித்தாள். ஒன்றும் இல்லை என்றான். 

ஒரு மிரட்டு மிரட்டி விசாரிக்க, பயந்தபடியே சொல்ல ஆரம்பித்தான்,

"அம்மா, நேத்து ஸ்கூல்லருந்து வந்து வேகமா வீட்டுக் கதவைத்திறந்தேனா, ஒரு குட்டி கருப்புப் பூனை ஒன்னு கதவுக்கிடுக்குல மாட்டிக்கிச்சும்மா, கழுத்து பாவம் நசுங்கிடுச்சு, செத்துப்போச்சுது. சரின்னு அதை எடுத்து கொல்லைப்பக்கமா போட்டேன், எடுத்துட்டுப் போகும்போது, வழியல்லாம் ரத்தம் ஆகிடுச்சு, துடைச்சுட்டே இருக்கும்போது, அப்பாவோட கேட் திறக்கற சத்தம் கேட்டுச்சா, சொன்னா அடிப்பாருங்கற பயத்துல, அதுக்கு மேல ஈரச்சாக்க போட்டுட்டேன். 

சிரில் சொன்னான்மா, செத்துப்போன எந்த விஷயமும் பூமிக்கு மேல இருக்கவே கூடாது, உடனே புதைச்சுடனும்னு பைபிள்ல இருக்குன்னு. சாயங்காலம் பைபிள்ல கூட இதைப்பத்தி தேடினேன். அதுக்குள்ள அப்பா படிக்கச் சொல்லி திட்டினாருன்னு போயிட்டேன். 

நைட்டு படுத்துட்டு இருந்தப்போ ரொம்ப ஸ்மெல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சும்மா, முதல்ல , செத்த பூனைய புதைக்கலாம்னு மாடிக்கு கத்தி எடுக்கப் போனேன்மா. அந்த நேரம்னு பாத்து அப்பாயி படம் கீழ விழுந்துடுச்சு. 

எமி முறைக்க

" சத்தியமா நான் தள்ளலம்மா" என்றான். 

"ம்ம்.. மேல சொல்லு" எமி!!

உடைஞ்சதும் அப்பா சத்தம் கேட்டுச்சா, அப்படியே விட்டுட்டுப் போயிட்டேன். 

அப்பா, என்னைத் தேடிட்டே இருந்தாரும்மா. சிக்கினா இன்னுமா  தூங்கலைன்னு உதைப்பாருன்னு, சிக்கவே இல்லையே அவர்கிட்ட!!" சிரித்தான். எமியும்.

"ஒரு வழியா அப்பா டோர் பக்கம் இல்லாதப்போ போலாம்னு நகர்ந்தேன். என்னைப்பாத்துட்டார். நடுங்கிட்டேன்மா. கொல்லைப்பக்கமா ஓடிட்டேன், பின்னாடியே வந்தாரு, போறவழில பாத்தா பூனை கிடக்கு. ஆனா நான் அதை நம்ம ஷெட் பக்கம்தான்மா போட்டுருந்தேன், பாத்தா இடம் மாறி தோட்டத்துப் பக்கம் கிடந்துச்சு. அப்பாதான் கொண்டாந்து போட்டுருப்பாருன்னு நினைச்சுட்டே திரும்பினேனா, அப்பா எதிர்த்தாப்ல நிக்கறாரு!! 

என்ன செய்யறதுன்னே தெரிலம்மா, அப்படியே மயங்கினாப்ல விழுந்தேன். அப்பாதான் தூக்கிட்டு உள்ள போனார். அப்புறம் என்னை பத்து செகண்டுக்கு ஒரு தடவ அப்பா அப்பான்னு கூப்பிடுடான்னு சொல்லிட்டு என்னோட "கணக்கு" புக்க தூக்கிட்டு மாடிப்பக்கம் போனார். விழுந்துட்டார்."! 

இதைக்கேட்ட எமிக்கு, அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஓரளவு நடந்த விஷயங்களை யூகிக்க முடிந்தது. தாமஸ் நல்லா பயந்துருக்காரு என்று மனதில் நினைத்தபடி, எபியை ஒரு முறை முறைத்துவிட்டு, வார்டுக்கு சென்றாள். அங்கே வாயைப்பிளந்தபடி தூங்கிய தாமசைப்பார்த்து "வெளிய விரைப்பா திரியறாரு, இவ்வளோ பயமா.. கணக்கு புக்க பைபிள்னு நினைச்சு தூக்கிட்டுத் திரிஞ்சுருக்காரே"  சிரிப்புதான் வந்தது எமிக்கு!! தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே. சந்தோஷம்!!

!!தாமஸ் வீடு!!

எல்லோரும் மருத்துவமனையில் இருந்ததால் வெறிச்சோடிக்கிடந்தது..

"ஏம்மா பேசமாட்ற,  நான் வாரிசில்லாம செத்துப்போனது போல தாமசுக்கும் வாரிசு இருக்க கூடாதுன்னு நினைச்சேன். என்னை மன்னிச்சுடும்மா, அதுக்காக என்னோட பேசாம இருக்காதம்மா.. நான் எபியைக் கொல்லப்போனது தப்புதான். அம்மா.. அம்மா.. ப்ளீஸ் மா. சாரிம்மா!! அதான் நீ கண்ணாடிய உடைச்சு தாமஸை அலர்ட் பண்ணிட்டியேம்மா." ஜாஸன் அம்மாவிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான்..

"அப்புறம் ஏன்டா தாமசைத் மாடீல இருந்து தள்ளின??" அம்மா முறைக்க..

"அது நாந்தான் அத்தை, ஜாசன் இல்லை" என்றபடி வந்து நின்றாள் ஜாசனின் மனைவி. கையில் தன்னுடைய செல்லப்ராணியான கருப்புப் பூனையுடன்.. 

பேச்சுச்சத்தம் தொடர்ந்தது.

ஹாலில், டிவிப்பக்கம் பறந்து விழுந்த சிடி கவர் சொன்னது!!

      "Jason Lives"

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.