(Reading time: 34 - 68 minutes)

அதுலயும் சொந்த அக்கா சந்தேகப்பட்ட வேதனை தாங்காம இனி எதுக்காகவும் உன்கிட்ட அக்கானு வந்து நிற்கமாட்டேனு கோவிச்சிட்டு வந்து புது பிஸ்னஸ் தொடங்கி  சுப்பரா பமிலியோட மதுரைல செட்ல்  ஆகிட்டார்.  அப்புறம் என் அக்காவோட வெட்டிங்கு மாமா பேமிலிய இன்வைட் பண்ணதால கொஞ்சம் டச் ஆச்சி.      விட்டு போன உறவு   ஐந்து வருடங்களாக ஓரளவு சரியாச்சி. ஆனாலும் நான் பெரிய மாமா வீட்டுக்கு போனது கிடையாது. இந்த நேரத்துல தான் வெர்க் எல்லாம் முடிச்சிட்டு ஊருக்கு கிளம்பலாம்னு  இருக்கும் போது எங்க சின்ன மாமா என்னை பெரிய மாமா வீட்டுக்கு கூட்டிட்டு போனார்.

அத்தை சுப்பரா என்னை உபசரிச்சாங்க.அரைமணி நேரத்துக்கு அப்புறம் தான் சுஜி  மாடில இருந்து வந்தாள். அப்போ தான் சுஜியை அவ்வளவு காலம் கழிச்சி கண்டேன்.  ஈவ்னிங் டைம்ல குளிச்சிருந்தா சாரில அதுவும் லூஸ் ஹயர்ல பார்க்கவே அவ்வளவு க்கியுட்டா இருந்தாள்.  

சித்தப்பா எப்போ வந்தீங்க? சித்தி ஆர்த்தி எல்லாம் வரவில்லையா? ஆர்த்தி கால் பண்ணப்போ கொஞ்சம் பிஸி! அப்புறம் கால் பண்ணா ரொம்ம தான் பிகு பன்றாள். நான் லீவ்ல வந்திருக்கேன்னு சொல்லுங்க சித்தப்பா. மேடம் தானா வீட்டுக்கு வருவாள்! சுஜியோ மூச்சி விடாமல் பேச வளர்ந்தும் இன்னும் சின்ன பசங்க போல சண்ட போட்டுகிட்டு இருக்கீங்க. ஆமா வந்திருக்க பையன் யார்னு நீ கேட்வே இல்லையே! என சுஜியின் சித்தப்பா ராஜு  கேட்க அப்போது தான் ஆதி இருப்பதையே பொருட்படுத்தினாள். அய்யோ சாரி ஆமா சார் யாரு என கேட்க உறவுகள் இணைப்பில்  இருந்து தொடர்பறுந்தால் அடுத்த தலைமுறை தன் வம்சம் தெரியாமல் வளரும்  துர்பாக்கிய சூழ்நிலை நிகழ்ந்துவிட்டதை எண்ணி ராஜு மனம் வருந்தினார். ஆதிக்கும் சற்று சங்கடமாய் ஆகிவிட்டது. சுஜி இது உன் அத்தை பையன் ஆதித்தியன் பிஸ்னஸ் விஷயமாக ஊருக்கு வந்திருக்கான். என ஆதியை அறிமுகப்படுத்த ஓ! ஆர்த்தியின் ஆதி புராணத்தின் ஹீரோவா இது! அவள் சொன்ன அளவுக்கு இல்லைன்னாலும் 85% மார்க் போடலாம் என நினைத்துக் கொண்டே சாரி  , சின்ன வயசுல பார்த்தது அதான் தெரியலை , என தொடங்கி இன்னபிற நலவிசாரிப்புகளின் பின்னர் சுஜி சமயலறை சென்று அம்மாவுடன் ஐக்கியமாகிவிட்டாள். சுஜியின் உற்ற தோழியாக தான் அவளது தாய் மீனாட்சி பழகினார். அதனால் தான் என்னவோ சுஜி எது நடந்தாலும் முதலில் பகிர்ந்து  கொள்வது தாய் அப்புறம் அவள் ஆருயிர் தோழி காயத்திரியிடமும் தான்.அன்று  இரவு உணவு ஆதிக்கும் ராஜுவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போதும் சுஜி ஆதியை  பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை என்பதே சுஜியோடு பேச வேண்டும் என்ற எண்ணத்ததை  தூண்டியது.

துரை சென்று   வந்து இரண்டு மாதங்களாகி விட்டது.   சுஜியின் நியாபகங்கள் அப்பப்போ வந்து   போவதுண்டு. ஆதி தன் மொபைல் நம்பரை கொடுத்தாலாவது அவள் நம்பர் தருவாள் என்றெண்ணிய போது  அவள் அது தேவையற்றது என்பது போல் அமைதியாக இருந்து விட்டாள். எப்படியோ ஆர்த்தியிடம் இருந்து அவள் நம்பரை வாங்கிவிட்டான். கால் பண்ணினால் பேசுவாளா? என்ற எண்ணத்தில் அமைதியாக இருந்து விட்டான்.  இப்படியிருக்க வாட்ஸ் அப்பில் ஹாய் அத்தான்! போனது போனிங்க ஒரு கால்,அட்லீஸ் மெசேஜ் இல்லை என சுஜியின் நம்பரில்  இருந்து மெசேஜ்வர ஆதி படு ஜோராகி சற்று தாமதித்து சில பல பிட்டுக்களையும் சேர்த்து ரிப்லை பன்ன சுஜியின் பதிலை பார்த்து வாங்கிய பல்பை எங்கே மாட்டுவது என்ற நிலையாகிவிட்டது.”   சாரி அத்தான் சுரேஷ் தான் மெசேஜ் பண்ணிருக்கான் நான் கவனிக்கலை. அவன்  நல்லா சாப்பிட்டு நாளுக்கு நாள் தர்பூசணி மாதிரி வளர்ந்துட்டே போறான். அவனோட பேசனும்னா அவன் நம்பருக்கு எடுக்கலாம்”என்பதே அந்த குறுஞ்செய்தி. இந்த சம்பவத்திற்கு பின்னர் ஆதி அடிக்கடி சுஜியோடு வாட்ஸ் வழியே தொடர்பு கொள்ள சில மாதங்கள் செல்ல இருவரும் நல்ல நெருங்கிய தோழர்கள் ஆகிவிட்டனர்.

சுஜி சென்னை காலேஜ்ல தான் MBA படிக்கிறாள் என்றாலும் ஆதித்தியன் வீட்டுக்கு சென்றதில்லை. வீட்டில் அத்தை வீட்டுக்கு போய் வா கூப்பிட்றாங்கல்ல என்றாலும் போறேன் போறேன் என்று போக்கு காட்டிக்கொண்டே இருந்தாள். ஆதியின் அக்கா பல்லவி தடாலடியாக ஹாஸ்டல்லுக்கு சென்று சுஜியை கூட்டிவரும் படி அனுப்ப வந்த வாய்ப்பை ஏன் விட வேண்டும் என்று  ஆதி சார் பைக்கில் போய் என்ட்ரி கொடுக்க சுஜியோ அதிர்ந்து விட்டாள். தன் அண்ணண் , தம்பியுடன் மட்டுமே பைக் ரைட் சென்று வந்திருப்பதால் ஆதியுடன் பைக்கில் செல்ல அவள் மனம் இடம் கொடுக்கவில்லை. அதனால் ஏதேதோ காரணங்கள் சொல்லி தவிர்க்க முயல ஆதியிடம் எதுவும் ஆகாது என்பது போல் பிடிவாதம் பிடித்து பைக்கிலே கூட்டிகொண்டு வந்துவிட்டான்.  சொல்லவா வேண்டும் ஆதிக்கு அந்த நாள் திருநாளாய் அமைந்து விட்டது. சுஜிக்கு ஆதியின் வீட்டில் ராஜ உபசரிப்பு தான். பல்லவி சுஜியுடன் மிகவும் அன்பாய் பழக அண்ணியுடன் சுஜியும் ஐக்கியமாகிவிட்டாள். ஆதியின் அம்மாவும் தம்பி மகள் என்ற பாசத்தில் அனுசரணையாய் நடந்து கொண்டார். அப்போது தான் சுஜிக்கு புரிந்தது எவ்வளவு அழகான உறவுகளையும் சந்தோசங்களையும் தவறவிட்டிருக்கின்றோம் என்பது. நடந்தது நடந்து விட்டது இனி எதற்காகவும் உறவுகளை விட்டு பிரிந்து இருக்க கூடாது என எண்ணிக் கொண்டாள்.அன்றைய பொழுது அழகாய் கழிய மறுநாள் மாலை தான் ஹாஸ்டல்  வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.