அடக்கருமேந்துரா! சொந்த செலவுல சூன்யம் வைச்சிருக்கின்றேனே என நொந்துக்கொண்டே டேய் அம்மாகிட்ட சொல்லிடாத டா பிலிஸ்...அம்மா என்மேல ரொம்ம நம்பிக்கை வைச்சிருக்காங்க! தாங்க மாட்டாங்க டா! என் எக்ஸம் முடியட்டும். அப்போ அத்தான் வந்து பேசுவார். பிலீஸ் டா என சுரேஷிடம் கெஞ்ச அவனோ! நம்பிக்கை நட்சத்திரம் சீல்ட்டை தாறுமாற உடைச்சிட்டுட்டு இப்போ என்கிட்ட கெஞ்சிற நீ! சரி போகட்டும் ஆனாலும் சில பல கண்டீசன்ஸ் இருக்கு. நீ வீட்டில் இருக்கும் வரைக்கும் என் டிரஸ் வாஸ் அன்ட் அயனிங் இனி நீ தான் செய்யனும் என்ன முறைக்குற..! அம்மா அவங்கவங்க வேலைய தங்களாவே யாரையும் எதிர்பார்க்காம செய்யனும்னு சொல்லிதந்திருக்காங்கனு சொல்ல போறீயா? அதெல்லாம் நீ சொல்ல முடியாது! ஏன்னா அம்மா அது மட்டுமா சொல்லிதந்திருக்காங்க. நீ லவ் பண்றதை எந்த கணக்குல சேர்ப்பது என்று சுரேஷ் கூற ஏதும் பேசமுடியாமல் தலைக்குணிந்தாள்.
அப்புறம் அடிக்கடி ஆயிரமோ இரண்டாயிரமோ கேட்கும் போதெல்லாம் கொடுக்கனும் என்று அவன் கூற டேய் பணமெல்லாம் கிடையாது எனக்கே இன்கம் ஏதும் கிடையாது என சுஜி கூற பொய் சொல்லாத சுஜி உன்கிட்ட பணம் இல்லை என்றால் வேல்ட் பேங்லயே பணம் இல்லைனு அர்த்தம்! அப்பா உன் செலவுக்கு மீறி பணம் அனுப்புறது தெரியாது. சோ இப்போ இரண்டாயிரம் தா என வம்படியாக இருந்து வாங்கி விட்டு தான் சென்றான். ஆதியுடன் போனில் பேசும் போது புலம்புவாள். இந்த வானரத்துடைய தொல்லை தாங்கமுடியலை. ரொம்ப தான் வால் ஆட்டுறான். கடைசில பயமுறுத்தி பயமுறுத்தி கொத்தடிமை ஆக்கிட்டான். எனக்கு வார ஆத்திரத்துக்கு போய் சொல்லுனு ஒருநாள் இல்லை ஒருநாள் சொல்லப்போறேன் என்று சொல்ல ஆதி சிரிப்பான்.அவன் சொன்னால் பாதி வேலை முடிஞ்சது என்பான். ஒரு நாள் சுஜியிடம் சண்டை போட்டுக்கொண்டு அப்பாவிடம் சுரேஷ் சொல்லியே விட்டான்.இருந்தாலும் பாசக்கார தம்பியாச்சே ஆதியின் அருமை பெருமையெல்லாம் சொல்லி ஆதி தன் தாயுடன் வந்து பெண் கேட்டால் மட்டுமே கட்டிக்கொடுப்பேன் என்று அவராகவே சொல்லவும் வைத்துவிட்டான். அனைவருக்கும் மகிழ்ச்சி என்றாலும் தன் பெண் மேல் வைத்திருந்த நம்பிக்கை, தனக்கும் சுஜிக்கும் இடையில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்ற எண்ணம் பொய்யாய் போனதில் மீனாட்சிக்கு கொஞ்சம் வருத்தம் தான்! இருந்தாலும் தன் மகள் ஆசைப்படும் வாழ்க்கை கைக்கூட வேண்டும் என வேண்டிக்கொண்டார். சுஜியின் வீட்டில் சம்மதம் கிடைத்ததினால் ஆதியை அடிக்கடி கலாய்ப்பாள். ஆதி சார் சைட் தான் ரொம்ப வீக்!பாவம் சார் ரொம்ப பார்ஸ்ட் ஆச்சே! ஸ்ரைட்டா அறுபதாம் கல்யாணம் தான்! என அவள் பேச சுஜி பாட்டிக்கு சம்மதம் என்றால் அடியேன் தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற காத்திருக்கிறோம்! என்பான் ஆதித்யன்.
சுஜியின் படிப்பும் முடிந்து ஒருமாதம் ஆகிவிட்டது.இனி எந்த ப்பிராப்ளமும் இல்லை என்றெண்ணிய ஆதி தன் வீட்டில் சுஜியை தான் விருப்புவதாகவும் அவளை திருமணம் செய்து வைக்கும் படி கேட்க அவனது தாயை தவிர மற்ற அனைவரும் சம்மதித்தனர். அவன் தாயிடம் எவ்வளவு கேட்டும் ஒற்றை முடிவாய் அவர் மறுக்க அவனும் தன் முடிவையும் சொன்னான். என்னைக்கு இருந்தாலும் சுஜி தான் என் வைப். நீங்க என்ன சொன்னாலும் செஞ்சாலும் நான் என் முடிவிலிருந்து மாறவே மாட்டேன். அவளை போல ஒரு பொண்ணு கிடைக்கவே மாட்டாள். அவளை மிஸ் பண்ணிட்டோமேனு ஒரு நாள் பீல் பண்ணுவீங்க. அம்மா உங்க மேல உள்ள நம்பிக்கைல தான் அவளுக்கு நான் வாக்கு குடுத்தேன். என் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கிட்டிங்களே! என்று வேதனையுடன் கூறினான்.
ஆதி சுஜியிடம் இதைக்கூற அவள் மனதளவில் உடைந்து போனாள். உங்க வீட்டில் எல்லோரும் சம்மதிப்பாங்க என்று நம்பிக்கொண்டு இருக்காங்க இப்படி ஆச்சின்னு எப்படி எங்க வீட்டில சொல்லுவேன். சொன்னால் தாங்குவாங்களா? என்று கண்ணீர் கசிய கூற. ஏய் சுஜி அழாதடி தாங்க முடியலை நான் இருக்கிறேன்! என ஆதி மீண்டும் நம்பிக்கையூட்ட சுஜியை ஆத்திரம், தன்னை நிராகரித்த கவலை என்பன தாக்க போதும்! எல்லாம் போதும்! நான் இருக்கிறேன்! என் மேல நம்பிக்கையில்லையா? அப்படி சொல்லி சொல்லித் தான் இப்போ இந்த நிலமையில் வந்து நிற்குது. இப்போ உங்களால என்ன செய்ய முடிஞ்சது! மனிதன் என்னத்தான் தன் முடிவில் உறுதியாக இருந்தாலும் சூழ்நிலைக் கைதியானால் எதுவும் செய்ய முடியாது. இதனால தான் ஆரம்பத்துலையே வேண்டாம்னு அவ்வளவு சொன்னேன். நீங்க கேட்டீங்களா? என்னைச் சொல்லனும் என் முடிவில் ஸ்ரோங்காக இருந்திருக்கனும். என் மேல தான் தப்பு. என கவலையின் உச்சத்தில் கண்ணீர் சிந்த கூறிவிட்டு ஆதி கூப்பிட கூப்பிட அதை சட்டை செய்யாமல் அழுகையுடன் வீடு வந்து சேர்ந்தாள்.
அன்றிலிருந்து ஆதியை தவிர்க்கலானாள். அவனோடு பேசி இன்னும் ஏன் வலியை தேடிக்கொள்வானேன் என்பதால் தான். வீட்டில் இதை சொல்லவும் முடியாமல் அப்படியே விடவும் முடியாமல் கண்ணீரிலே கரைந்தாள்! என்னத்தான் கவலையில் கரைந்தாலும் பிறர் முன் தான் எப்போதும் போலவே இருப்பதாக நட(டித்து)ந்துக் கொண்டாள். இதிலிருந்து மீள வேண்டும் என்பதற்காக தனக்கான வேலையொன்றை பெங்ளூரில் தேடிக்கொண்டு யார் பேச்சையும் கேட்காமல் சென்று விட்டாள்.