எங்கே என்று அத்தனை நாள் அடக்கிய வேதனையும் தன் தாயின் வருடலினால் கண்ணீராய் துளிர்த்தது ஆதிக்கு! அதைக்கண்ட அவன் தாய் பதட்டமாகிவிட்டார்.
கண்ணா! என்னாச்சிப்பா...அம்மா உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல..உன் நல்லதுக்கு என்று தான் இந்த திருமணம் வேண்டாம்னு சொன்னேன். ஆனால் அதில் யாருக்கும் நன்மை பயிர்க்கப்போவதில்லைனு புரிஞ்சிகின்டேன்! என்று ஆதியின் தாய் கூற அம்மா! நான் தான் எல்லோரையும் வேதனை படுத்திட்டேன்.. மன்னிச்சிடுங்க என ஆதி தன் தாயின் கரம் பற்றினான். ஏய் ஆதி! அப்படி எதுவுமில்லை. என்ன சின்ன குழந்தை போல கண்ணீர் சிந்துவதை நிறுத்து! சுஜி ரொம்ப நல்ல பொண்ணு! அது எப்போவோ தெரியும். குடும்பத்திற்குள் திருமண பந்தம் செய்தால் இருக்கும் உறவும் இழக்க நேரிடலாம்! என் தம்பி செய்யாத தப்புக்கு தண்டிச்சி உறவே இல்லாமல் போய் இப்போ தான் சரியாகி இருக்கிறது. அதை மறுபடியும் இழக்க மனமில்லை அதுவும் ஒரு காரணம்! அடுத்து நெருங்கிய இரத்த பந்தத்தில் திருமணம் செய்தால் மூன்றாம் தலைமுறை பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம்னு கேள்விப்பட்டிருக்கேன். என் பிள்ளை நீ குடும்பம், குழந்தைனு சந்தோசமாக எந்தவித குறையுமின்றி வாழ வேண்டும்னு நினைத்து தான் அப்படி சொன்னேன். ஆனால் இப்போ தானே புரியுது சுஜி இல்லைன்னா என் பையனுக்கு வாழ்க்கையே இல்லை என்று! இப்போ எனக்கு பரிபூரண சம்மதம் என்று கூற ஆதியோ தன் தாயை கட்டிக்கொண்டான்.
அதன் பின்னர் எல்லாம் வேகமாக நடந்தது. அனைவரின் சம்மதத்துடனும் ஆசியுடனும் ஆதி,சுஜியின் உண்மைக் காதல் திருமணபந்தத்தில் இனிதே முடிவுற்றது! (“Everything happens for a reason! That reason causes change. Sometimes it hurts. Sometimes it's hard. But in the end, it's all for the best” என்ற கூற்று எவ்வளவு உண்மையானது. நிகழ்பவை அனைத்தும் ஏதோ ஒரு காரணத்தின் அடிப்படையில் தான் நிகழுகின்றது. அது நமக்கு பிடிக்காததாக கூட இருக்கலாம்.ஆனால் அதன் முடிவு சிறந்ததாக இருக்கும். ஆனாலும் அந்த நேரத்தில் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நம்மில் பலருக்கு இருப்பதில்லை! எமக்கென்று இறைவன் விதித்தது என்றும் எம்மையன்றி வேறு ஒருவரின் கைசேருவதில்லை. என்ற நம்பிக்கை இருக்கும் வரை எது நடந்தாலும் அவை எம்மைப் பாதிக்காது)
ஆனாலும் எப்படி ஆதி Usல அப்படினு நீங்க யோசிக்கிறது தெரியுது. சுஜி, ஆதியின் அம்மா இருவரும் பிடிவாதத்தை விடுவதாக தெரியவில்லை.தன்னால் எதுவுமே செய்யமுடியவில்லை,இங்கிருந்து என்ன செய்ய, (தான் ஒருவேளை பிரிந்து சென்றால் மனம்மாற வாய்ப்பு உள்ளதே எனும் நினைப்பில்) என்ற கடுப்பில் தான் Us போவதற்கான ஏற்பாட்டில் ஆதி இறங்கினான்.அன்னைக்கு நடந்த கலவரம், நிலவரம் எதுவும் அறியாமல் ஆதி சார் Us எம்பஸியில் தான் இருந்தார்.அது ஆதிக்கு நல்லதோ கெட்டதோ Usல வேலை கிடைத்துவிட்டது. அதுவும் திருமணம் முடித்து ஒருமாதத்திலே! ஆதி நொந்து நூட்டில்ஸ் ஆகிவிட்டான். ஆனாலும் கிளம்பியாகிய நிர்ப்பந்தம் மனமின்றியே சுஜியை விட்டு Us வந்தான். அதனால் தான் நாடுதிரும்புவதில் எல்லையற்ற மகிழ்ச்சி! (ஒருவழியாக பிளஸ்பேக் முடிஞ்சது)
இந்த இரண்டு நாட்களும் ஆமை வேகத்தில் செல்லவும் ஆதியோ பொறுமை என்ன விலை என எண்ணும் நிலைக்கு வந்துவிட்டான். ஆதி எதிர்பார்த்தது போலவே சுஜியின் பிறந்த நாளில் காலை ஆறு மணியளவில் வீட்டுக்கு சென்றுவிட்டான். சுஜிக்கோ அந்த பொழுது இனிதாய் விடிந்தது. அனைவரும் வாழ்த்தி தங்கள் பரிசுகளைக் கொடுக்கவும் அழகான உறவுகள் தனக்கு அமைந்ததை எண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினாள். அத்தை! உங்கள் வாழ்த்தே போதும்! எதற்கு இதெல்லாம் எனக்கூறி அவள் ஆதியின் தாயினைக்கட்டிக்கொள்ள! அவரோ ஏன்டா! புடவை பிடிக்கலையா?எனக் கேட்க அப்படி ஏதுமில்லை! சூப்பரா இருக்கு! அத்தை என உண்மையாக சுஜி கூறினாள். ஆமா! ஆதி கால் பண்ணி பேசினானா? என அவர் கேட்க உள்ளுக்குள் சற்று உறைந்து போன கவலை மீண்டும் உருக அதை மறைத்து ஆமாம் ! அத்தை! முதல் விஸ் அத்தானுடையது தான்! அப்புறம் கால் பண்றேனு சொன்னார் எனஆதியை அவன் தாயிடம் கூட விட்டுக்கொடுத்து பேச மனமின்றி பொய் உறைத்தாள்.
கண்ணில் துளிர்க்கின்ற கண்ணீரை மறைக்க வெளியே தோட்டத்திற்கு செல்லலாம் என எண்ணி ஆதிக்கு மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டே வாசல் வரை வந்தாள். பேசும் போது மட்டும் பெரிய காதல் மன்னன் அளவுக்கு கதைவிட வேண்டியது. கால் தான் பண்ணமுடியலைன்னாலும் ஒரே ஒரு மெசேஜ் விடிச்சி இவ்வளவு நேரத்துக்கு. கால் பண்ணட்டும் அப்புறம் இருக்கு சாருக்கு மொத்தமாக! என எண்ணிக்கொண்டே கதவை திறக்கவும் ஒட்டு மொத்த புன்னகைக்கு அவன் தான் சொந்தக்காரன் போல சிரித்துக்கொண்டே ஆதி நின்றான். சுஜி நம்ப முடியாமல் தன்னைக்கிள்ளிப் பார்க்கவும்! ஏய் மண்டு இது என்ன சின்ன குழந்தைப்போல! உன் அத்தானே தான் எனக்கூறியது தான் தாமதம் அவன் நெஞ்சில் அவள் சரணடைந்தாள்!பிராடு சொல்லவே இல்லை! இந்த நிமிடம் உலகத்துலயே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நான் தான்னு தோனுது! லவ் யு சோ மச் என சுஜி ஆனந்தத்தில் கூறினாள்! மீ டூ டா! ஐ விஷ் யு ஹாப்பி பர்த்டே செல்லம்!! No one can't take your place in my heart! My love is all for you எனக்கூறி சுஜியை தன் கையணைப்பிற்குள் ஆதி கொண்டுவந்தான். முடிவிலியாய் அவர்களின் காதல் பந்தம் இறுதிவரை தொடர நாமும் வாழ்த்துவோம்.
எழுத்து மற்றும் கருத்துப் பிழைகள் இருந்தால் என்னை மன்னிக்கவும்! தவறுகள் இருந்தால் உங்கள் கருத்துக்கள் மூலமாக சுட்டிக்காட்டவும். உங்கள் கருத்துக்கள் என் தவறுகளைத் திருத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும். சில்சீ குழுவுக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் பல!!!
By:- Sameera
{kunena_discuss:785}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.