வாட்ஸ் அப் சாட்டிலும் கால் பண்ணி பேசினாலும் சுஜி ஆதியுடன் பிரன்ட்ஷிப் என்ற லிமிட்டைத் தாண்டி வரவில்லை. ஆதி நிலமைத்தான் ரொம்ப பரிதாபமாகிவிட்டது. முழுமையாக நட்புடன் பழகவும் முடியாமல் முதல் காதலை சொல்லவும் முடியாமல் திணறினான். அவள் வேறு யாரையும் லவ் பண்றாலோ அதனால தான் நம்மலோட லிமிட்டா பழகுறாளோ? அவளிடமே கேட்டு க்கிளியர் பண்ணிட்டு அப்படி ஏதும் இல்லன்னா லவ்வ சொல்லிட வேண்டியது தான்.என்று எண்ணிக் கொண்டு சுஜி லேட் நைட்டில் ஆன்லைனில் இருந்தால் யார்கூட சாட்? என்று கேட்டால் என் பிரண்ட்ஸ் கூடத்தான் என்று அவள் சொன்னால் நா நம்பிட்டேனே! என்று ஆதி சொல்வான். அவளோ கடுப்பாகி என்னை பத்தி யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை. அது சரி நான் யார் கூட சாட் பண்ணினால் உங்களுக்கு என்ன? ஏன் சிஸ்டர் கூட பைட்டா அந்த கடுப்புல வந்து பேசுறிங்களோ! பை என கடுப்பாகி ஆப்லைன் போய்விடுவாள்.
இதனாலையே சில பல சண்டைகள் வந்தபின்னர் தான் தெரிந்தது அவள் யாரையும் லவ் பண்ணவில்லை என்பதும் அவள் அடிக்கடி சொல்லும் சிஸ்டரோட பைட்டா என்பதன் விளக்கமும்.அந்த சிஸ்டர் வேற யாரும் இல்லைங்க அது ஆதி லவ் பண்ற பொண்ணு அப்படினு சுஜி நினைச்சிட்டு இருந்திருக்காள். அவ்வளவு தெளிவு நம்ம சுஜி! அப்புறம் நம்ம ஆதி சில பல சிறு கவிதைகள் மூலம் தன் மனதை கோடிட்டு காட்ட அதுவும் அவள் புரிந்து கொள்ளாமல் போனது தான் கொடுமை.இதெல்லாம் வேலைக்கு ஆகாது நேரடியாக போய் சொல்லிட வேண்டியது தான். பீச்ன்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும் காலேஜ் பக்கத்துல உள்ள பீச்சுக்கு கூட்டிட்டு போய் சொல்லிட வேண்டியது தான் என்றெண்ணி அவளை மீட் பண்ண வேண்டும் பீச் போய் பேசலாமா? என்று கேட்டதுக்கு ஊருக்கு போகனும் டைம் இல்லை நீங்க ஹாஸ்டல் பக்கத்துல வாங்க பேசலாம் என்று கூற வேறுவழியின்றி ஒத்துக்கொண்டான்.
எப்படி எல்லாம் என் காதலை சொல்லனும்னு நினைச்சா அழுத்தக்காரி இப்படி ரோட்ல வைத்து சொல்லும் நிலமையாக்கிட்டாளே எண்ணிக்கொண்டு நிற்க இது எதுவும் அறியாத சுஜி சாரி அத்தான். லேட் ஆகிடுச்சா என்ன திடீர்ன்னு பீச்சுக்கெல்லாம் கூப்பிட்றீங்க என கேட்க அது வந்து சுஜி என்னன்னா ! சற்று தயக்கத்துடன் ( பின்ன ரோட்ல வைச்சி அரைந்தால் என்ன செய்வது என்ற கலக்கம் தான்!) சுஜி எனக்கு உன்னை ரொம்ம பிடிச்சிருக்கு. உன்னை கல்யாணம் பண்ணனும்னு ஆசைப்பட்றேன்.இது எப்போதிலிருந்து கேட்டா சரியாக தெரியலை. ஆர்த்தி மூலமாக உன்ன பத்தி தெரிந்தபிறகு நீ என்றால் அலாதி பிரியம்! உன்னை எந்த நிலமைலயும் கைவிடமாட்டேன்! உன் விருப்பம் என்ன? என்று தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தியே விட்டான்! சுஜி இதைக் கேட்டு சற்று தடுமாறினாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டாள்.
அத்தான் நான் எந்தவிதத்துல உங்களை பாதிச்சேன்னு தெரியலை. இப்படி ஏதும் நடந்து விடக் கூடாதுன்னு தான் நான் லிமிட்டா நடந்துகிட்டேன்.நம்ம பாமிலி இப்போ தான் பழைய மனக்கசப்புகள் மீறி ஓரளவுக்கு க்ளோஸ் ஆகிருக்காங்க.அதுல நம்மலால ப்ராப்ளம் வரனுமா? உங்கள எனக்கு பிடிக்கும் தான். அதுக்காக லவ் பண்றேனு அர்த்தமில்லை. அப்படியே இருந்தாலும் எங்கப்பா உங்க வீட்ல வந்து மாப்பிள்ளை கேட்கவே மாட்டாங்க. ஒருவேளை உங்க வீட்டில இருந்து கேட்டு வந்தால் Ok சொல்லலாம். பட் இது நடக்கும்னு தோனலை. நான் யாரையும் லவ் பண்றதாவும் இல்லை. அப்படி நடந்தால் அவரை தவிர வேறு யாரையும் மேரேஜ் பண்ணவும் மாட்டேன். சோ லவ் வேண்டாமே! என்னால என் குடும்பத்துக்கு தலை குணிவு வரக்கூடாது! நான் ஏதும் ஹர்ட் பண்ணி இருந்தால் சாரி அத்தான்! என்று அழகாய் காதல் வேண்டாமே என்று மறுத்துவிட்டு சென்று விட ஆதி தான் உடைந்து விட்டான். என்ன பெண் இவள். இவளை விட தனக்கு நல்ல துணையும் தன் குடும்பத்துக்கு நல்ல மருமகளும் கிடைக்க போவதில்லை என்பதையும் உணர்ந்துக்கொண்டான்.
கரைப்பார் கரைத்த்தால் கல்லும் கரையும் என்பதைப் போல ஆதி தான் உயிரிலும் மேலாக சுஜியை நேசிப்பதை உணர்த்த சுஜி ஆதி வசம் ஈர்கப்பட்டாள். ஆதி தன் விருப்பங்கள் அனைத்தையும் மறுக்காமல் நிறைவேற்றும் தாய் இதையும் மனமுவர்ந்து நிறைவேற்றுவார் என்ற எதிர்ப்பார்ப்பில் சுஜிக்கு வாக்கு கொடுத்தான். நீ எதற்கும் யோசிக்க தேவையில்லை. எங்கம்மாவோட வந்து மாமாகிட்ட பொண்ணு கேட்பேன். நீ பயப்படுவது போல் எ ங்கம்மா ஒத்துக்கலை ஓடி போலமா? னு கேட்வே மாட்டேன் என்று சிரித்துக்கொண்டே நடக்கப் போகும் குழப்பங்கள் அறியாமல் சொன்னான்.
முதல் முறையாக தன் தாயிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்பவள் , கலந்தாலோசிப்பள் தன் காதல் விவகாரத்தையே மறைத்துவிட்டாள். தன் தோழி காயத்திரியிடம் மட்டுமே இப்போது எல்லாவற்றையும் முதலில் பகிர்ந்து கொள்வது. அப்படி இருந்தாலும் சுஜி லீவில் ஊருக்கு போனால் தன் தாயோடு பேசும் போது தன் தாயிடம் மறைக்கின்றோமே என்ற குற்ற உணர்ச்சி அவளை துளைக்கத்தான் செய்தது. அதனால் என்னவோ ஆதியிடம் அம்மாகிட்ட நான் ஏதும் மறைச்சதில்லை.