இது தான் முதல் முறை. உறுத்தலாவே இருக்கு.அம்மா என் மேல ரொம்ம நம்பிக்கை வைச்சிருக்காங்க.பயமாக இருக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும் தானே அத்தான் என அடிக்கடி கேட்பாள். ஆதியோ ஏன் பேபி என் மேல உனக்கு நம்பிக்கையே இல்லையா? காலேஜ் முடிய இன்னும் சிக்ஸ் மன்த்ஸ் தானே இருக்கு கவலையே படாதே. முறைப்படி உன்னை வந்து கேட்பேன் என்பான்.
சில மாதங்களாக எந்தவித பிரச்சினையும் இல்லாமல் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. ஆதி சுஜியை வெளியே எங்கும் போய் வருவோமா என்றால் அத்தான் எல்லா லவ்வர்ஸ்உம் போறது போல பார்க், பீச், சினிமா போகனும்னு கடமையா என்ன? அதான் சனிக்கிழையான கோவில்ல மீட் பண்ணி பேசுவது பத்தாதா? என்பாள்! ஒருமுறை பட்டுப்புடவையுடன் தங்கச்சங்கியும் கிப்ட் பண்ணியதற்கு புடவை சுப்பரா இருக்கு.செய்ன் வேண்டாம் . அது கழுத்துல இருந்தா தேவையில்லாத கேள்வி வரும். ஆப்டர் மேரேஜ் எவ்வளவு வேணும்னாலும் வாங்கி குடுங்க! இப்போ வேண்டாமே. என்னை தர்மசங்கடத்துல ஆழ்த்திறாதீங்க பிலீஸ் என்று மனம் நோகாமல் மறுத்துவிட்டாள்.ஆதி சுஜியை வீட்டுக்கு அப்பப்போ வா என்றால் இல்ல அத்தான்! இப்போ வந்து போனால் உங்க வீட்டில உள்ளவங்கலை இம்பிரஸ் பண்ணறதுக்காக வந்தது போல இருக்கும். மருமளாகவே வந்த பின் ஆட்சி அமைத்துடலாம் என சிரித்துக்கொண்டே தவிர்த்து விடுவாள்.
ஒரு முறை ஆதியின் வற்புறுத்தலினால் ஆதியின் நண்பர்களோடு லன்ச் சாப்பிட ஒப்புக்கொண்டாள்.அப்போது ஒரு நண்பன் காதல் தோல்வியின் காரணமாக பெண்கள் அனைவரையும் பற்றி தவறான கண்ணோட்டத்தில் பேச சுஜிக்கு கடுப்பாகிவிட்டது. அண்ணா எல்லா பொண்னுங்களையும் தப்பா பேச உங்களுக்கு உரிமையில்லை. நீங்க பார்த்த பொண்ணுங்க அப்படி இருக்கலாம். அவங்க சூழ்நிலை என்னவோ என்று தெரியாமல் பேசுவதும் கூடாது. ஏன் உங்கள் பார்வையில் கூடபிழையிருக்கலாம்! உங்கள் கருத்தை மற்றவங்க மீது திணிக்காதீங்க. மனசை புண்படுத்தும் படி பேசி இருந்தால் சாரி. என்றாள் ஆதி ஒரு கணம் அவளைப்பார்த்து திகைத்துவிட்டான். அவளது வெளிப்படையான பேச்சு, இன்று வரை யாருக்காகவும் மாறாத குணம் , போன்ற பண்புகள் ஆதியை இன்னும் இன்னும் அவளை நேசிக்கத்தூண்டியது.
இப்படியே எவ்வித தலம்பல் இல்லாமல் வாழ்க்கை சென்று விடுமா? எவ்வளவு காலத்துக்கு தான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியும். பரீட்சைக்கு இரண்டு மாதங்கள் இருந்த நிலையில் வீட்டுக்கு வரும் போது சுரேஷிடம் இருந்து அழைப்பு வந்தது. ஹலோ! சுஜி இன்னும் வீட்டுக்கு வர எவ்வளவு டைம் ஆகும் என ஆர்வம் பொங்க கேட்க என்னடா? அக்கா மேல பாசம் பொங்குது! இன்னும் வன் ஹவர்ல வந்துடுவேன். ஆமா! வீட்டில வார் இல்லாம போர் அடிச்சுட்டோ என வம்பிழுக்க அவனோ ஐய்யோ சுஜி இனி சண்டை எல்லாம் கிடையாது நீ சரன்டர் தான் என்க சுஜியோ புரியாமல் சரன்டர் ஆ என்னடா சொல்ற என்றாள். அப்படியா சொன்னேன்! சமாதானம்னு சொல்ல வந்தேன் டங் சிலிப் ஆகிடுச்சி. சரி வீட்டுக்கு வந்துசேர். பை என சுரேஷ் அழைப்பை துண்டித்து விட்டான் . பயபுள்ள ஒரு மார்கமாக பேசுறான் இது சரியில்லையே (அலாட் ஆகிகோடா ஆறுமுகம்னு மூளையில் அபாய சங்கு ஒலிக்க) போய் தான் பார்போம் என எண்ணிக்கொண்டாள்.
வீட்டிற்கு போனதன் பின் தான் புரிந்தது சுரேஷின் பேச்சின் அர்த்தம்.அவள் குளித்து விட்டு வரும் போது அவன் அவளின் போனை நோண்டிக்கொண்டிருந்தான். பதறிப்போன சுஜி ஏன்டா போனை எடுத்த! ஆமா எப்படி அன்லாக் பன்ன என்று மாட்டிவிடுவோ என்ற பயத்தில் அலர ஏய் சுஜி வை இவ்வளவு பதட்டம்.நிதானம் சுதானம் ரொம்ப முக்கியம் .ஆமா ஏதும் திருட்டுதனம் பன்றியா என்ன? லாக் எல்லாம் போட்டு வைச்சிருக்க. பட் நோ யூஸ் நான் போனை நோண்டுவேனு பாஸ்வேர்ட்ஆ உன் பேரை போடாம என் பேரை போட்ட உன் கிரிமினல் மைண்ட் என்கிட்ட வேலைக்கு ஆகலையேமா என்ன பன்றது என சிவாஜி சார் போல பேச தன் மடமையை எண்ணி சுவற்றில் முட்டிக்கொள்ளலாம் என்று இருந்தது. டேய் போனை குடு முதல்ல என போனை பிடுங்குவதிலே சுஜி முனைப்பாக இருக்க சுரேஷ் சிரித்துக்கொண்டே செல்லக்குட்டி, இன்னும் முடியலை அமைதி. அத்தானுக்கு உன் மேல எவ்வளவு அக்கறை. டேடா ஆன் பண்ணது தான் தாமதம் பாசம் கொட்டோ கொட்டோனு மெசேஜ் ஆ கொட்டிச்சி என்று கூற அடப்பாவி இப்படியா சிக்க வைப்பாய். அதுவும் இவன் கிட்ட என்னபாடு படுத்தப்போறானோ? என்றெண்ணியவாறே டேய்! உனக்கு எப்படி தெரியும் என சுஜி பரிதாபமாக கேட்க இன்னைக்கு கன்பார் பண்ணது தான் ! எப்போவோ தெரியும். சிஸ்டர் என்ன லுக்! எப்படினு யோசிக்குற நீ. கொஞ்ச நாள் முன்னாடி என் பிரன்ட்டுடைய சிஸ்டர்க்கு ரெபர் பண்ண உன் புக்ஸ் கேட்டேனே நீ கூட எடுத்து குடுனு சொன்னியே! அப்போ தான் சில புக்ஸ்ல உன்னையும் ஆதி அத்தான் பெயரையும் சேர்த்து கிண்டல் எல்லாம் பண்ணி எழுதி இருந்தது. அப்போ தான் சுஜி Perfect ஆபிசராச்சே புக்ஸ்ல எல்லாம் எழுதமாட்டாளேனு நினைச்சேன்.அப்புறம் தான் புரிஞ்சது உன் வானர சேனையின் வேலைனு. எப்படியோ மேட்டர் உண்மை தானே! என்று சுரேஷ் நீளமாய் பேச சுஜிக்கு தான் மூச்சு முட்டியது.