(Reading time: 34 - 68 minutes)

ஹாலோ!  காயு என்ன ஒருத்தர் மாற்றி இன்னொருத்தராக இவ்வளவு கால்ஸ்! என்னாச்சி என சுஜி கேட்க அது சொல்றேன். முதல்ல நீ எங்கே இருக்க? ஆபிஸ்க்கு கால் பண்ணால் நீ லீவுனு சொன்னாங்கலாம்! மார்னிங்ல இருந்து யார் கால்லையும் ஏன் அட்டர்ன் பண்ணலை? உண்மையை சொல்லுடி இப்போ எங்க இருக்கீங்க? ஆதி அண்ணா எங்கே என காயத்திரி கேட்க சுஜி கடுப்பாகிவிட்டாள்.

ஏய் என்னடி பேசுற நீ? என் பிரண்ட்  கவிதா இருக்கால்ல. அவளுக்கு ரொம்ப பீவர்.மார்னிங் ஹாஸ்பிடல் போகவும் எட்மிட் பண்ணிட்டாங்க! அவள் கூடவே இருக்க வேண்டியதாயிற்று. அதனால தான் ஆபிஸ் லீவு. அப்போ போனை சைலன்ட் மார்ட்ல போட்டேன்! கால்ஸ் வரவும் பட்டரி லோ என்பதனால ஆப் ஆகிடுச்சி போல.ஆமா அத்தானுக்கு என்னாச்சி! என்கிட்ட அத்தான் எங்கேனு கேட்கிறாய்? என்னத்தான் அங்கே நடக்குது! என சுஜி நடந்தவற்றை கூறிவிட்டு கேட்கவும் காயத்திரி சொன்னதைக்கேட்டு சுஜி  அதிர்ந்தே விட்டாள்.

சுஜி கலக்கத்துடன்  என்னடி இது! என்னால நம்பவே முடியலை எனக்கூற என்னாலையும் நம்பவே முடியலை. அப்படி ஏதும் நடந்திருக்காது அப்படி நடந்திருந்தாலும் சத்தியமாக எனக்கு  தெரியாதுன்னு நான் அவ்வளவு சொன்னேன் யாரும் என்னை நம்பலை ஆன்ட்டி உட்பட என காயத்திரி ஆதங்கப்பட அம்மாவுமா? ம்ம் முதல் விட்ட தவறு எங்க வந்து இடிக்குது. இப்போ உண்மையாக இருந்தும் உடைத்த நம்பிக்கையை மறுபடியும் கொண்டுவர முடியலை.ஊருக்கே தெரியும் உனக்கு தெரியாம எந்த ரகசியமும் என்கிட்ட இல்லைனு அதனால் தான் யாரும் உன்னை நம்பலை போலும்!  என சுஜி கூற அது என்னவோ சரி தான்! என காயத்திரி ஒத்துக்கொண்டாள்.

ஆமா இப்படியொரு புரளியை கிளப்பிவிட்ட புண்ணியவான் யாருடி? ஏற்கனவே எங்க அத்தைக்கு என் மேல் ரொம்ப நல்ல அபிப்பிராயம்! இப்போ இப்படி ஒரு வதந்தி! இப்படி ஒரு பெயர் எடுத்துவிடக்கூடாது என்று தான் இவ்வளவு வேதனையும் வலியும்! இப்போ எல்லாமே ஒன்னுமே இல்லைனு ஆகிடுச்சே! அதான் தாங்க முடியலை என சுஜி கூற ம்ம் இப்போ என்ன பண்ண போற எனக்கேnட்டாள். அத்தைக்கு கால் பண்ணி பேச போறேன். என் கேரக்டரை அடுத்தவங்க தப்பாக பேசுவதை  என்னால ஏற்றுக்கொள்ள முடியாது என்றாள் சுஜி.  அது தான்  அந்த நல்வர் யாருன்னு யாருக்கும் தெரியவில்லை!! ஏய் பார்த்து பேசு பெரியவங்க என ககாயத்திரி கூற நான் என்னைக்கும் நிதானம் தவற மாட்டேன்பா! அவங்க என்னை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனால் கெட்டவங்களாகிடுவாங்களா? பெற்ற தாயை விட யாரு பிள்ளைக்கு நல்லது நினைத்துவிட முடியும். சரி நான் அப்புறம் பேசுறேன் பை டா! என சுஜி அழைப்பை துண்டித்தாள்.

சுஜி ஆதியின் அம்மாவுக்கு கால் பண்ணினாள்! அவரும் வந்த வதந்தியில் கொந்தளித்திருந்தார்.  சுஜி என்று தெரியாமல் தான் அவர் கால் அட்டர்ன்ட் பண்ணி ஹலோ சொன்னார். பேசி தெளிவுபடுத்த வேண்டும் என்ற வேகத்தில் எடுத்த சுஜிக்கு அவரின் குரரலை கேட்டதும் கொஞ்சம் தடுமாற்றம் வரவும் பேசியாக வேண்டிய நிர்பந்தம் வேறு வழியின்றி பேச ஆரம்பித்தாள். ஹலோ நான் சுஜிகிதா பேசுறேன் என்றதும் அவர் குரலில் அதிர்ச்சி ,  வேதனை மண்டியிட ம்ம் என்ன சொல்ல பேற? அதான் எல்லாம் முடிஞ்சதில்ல! என்றார்.

அவள் மறந்தும் அத்தை என்று சொல்லவில்லை! அவசரப்பட்டு வார்த்தையை விட்டுறாதீங்க .நீங்க பெறியவங்க நிதானமாக கொஞ்சம் நான் சொல்றதை கேளுங்க . நீங்க நினைக்குறது போல எதுவும் நடக்கவில்லை. ஆதி அத்தானும் நானும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணவும் இல்லை எங்கேயும் ஓடி ஒளியவுமில்லை! அப்படி செய்வதாக இருந்தால் எப்போ என்னை வேண்டாம்னு சொன்னீங்களோ அப்போவே செஞ்சிருக்கலாம். பட் அவ்வளவு சுயநலமாய் எங்க வீட்டில என்னை வளர்க்கவில்லை. என சுஜி சொல்லும் போதே ஆதியின் தாய்க்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைவது போல இருந்தது. ஆதி அத்தான் கூட நீங்க எப்போ என்னை நிராகரிச்சிங்ளோ அப்போவே பேசுவதை விட்டுடேன்.  ஆதி இப்போ எங்கே இருக்காருன்னும் எனக்கு தெரியாது! அன்னைக்கும் எங்கப்பா செய்யாத தப்புக்கு உங்க பார்வையில் குற்றவாளியாக தெரிந்தார்.இன்னைக்கு நான்! ரொம்ம கஷ்டமாக இருக்கு! கடைசியாக ஒன்னே ஒன்னு சொல்றேன் உங்களுடைய சம்மதம் இல்லாமல் எங்க கல்யாணம் நடக்காது.  அதுக்கு நான் கேரன்டி! அதிகபிரசங்கி தனமாய் பேசியிருந்தால் மன்னிச்சிடுங்க!என கூறி அழைப்பை துண்டித்தாள்.ஆதியின் தாய் தனது முடிவு சரிதானா? என சிந்திக்க தொடங்கினார்.

இது எதுவுமே அறியாத ஆதி வீட்டிற்கு வரும் போது பத்து மணியைத் தாண்டிவிட்டது. அவனுக்காக அவன் தாய் காத்திருந்தார். அவரை கண்டும் காணதது போல் செல்ல எத்தணித்த ஆதியை அழைத்தார். ஆதி நில்லுப்பா! சாப்பிட்டியா? என கேட்க ஆதியோ பச்! பசிக்கல! தூக்கம் வருது! எனக்கூறி நழுவ முற்பட்டான்! ஆதி சாப்பிடாம தூங்ககூடாது இரண்டு சாப்பிட்டு போ! Refresh ஆகிட்டு வா!  உனக்காகத் தான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்றேன் என ஆதியின் தாய் கூற அதற்கு மேல் மறுக்க மனமின்றி ஆதியும் ரெப்பிரஸ் ஆகிவிட்டு சாப்பிட வரவு ம் அவன் தாயே பக்கத்தில் இருந்து பரிமாறினார். 'கண்ணா! இன்னும் இரண்டு இட்லி சாப்பிடுப்பா எனக்கூறி பாசத்துடன் தலையை வருடி விட்டார் !

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.