ஆதிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அத்தையும் மருமகளும் பிடிவாதத்தை குத்தகைக்கு எடுத்தது போல் தங்கள் முடிவில் ஒற்றைக்காலில் நின்றால் எங்கு திருமணம் நடப்பது. யாராவது மலை இறங்கினால் தான் உண்டு. அது நடப்பது போல் தெரியவில்லை. நான் தானே நடுவில் ப்பிராப்ளம். உங்க பிடிவாதத்தை விட நான் வழிப்பண்ணுகிறேன் எனக்கூறி ஆதி கிளம்பி விட்டான்.
Situation song
Male:-
என்னைக் கொள்ளாதே!
தள்ளிப் போகாதே!
நேஞ்சை கிள்ளாதே கண்மணி..!
சொன்ன என் சொல்லில்
இல்லை உண்மைகள்..!
ஏனோ கோபங்கள் சொல்லடி..!
உன்னை தீண்டாமல்
உன்னை பார்க்காமல்
கொஞ்சி பேசாமல்,
கண்ணில் தூக்கமில்லை..!
என்னுள் நீ வந்தாய்..!
நெஞ்சில் வாழ்கின்றாய்..!
விட்டுச் செல்லாதே!
இது நியாயமில்லை..!
Female:-
கண்ணை மூடிக்கொண்டாலும்
உன்னை கண்டேன்.!
மீண்டும் ஏன்னிந்த ஏக்கம்..!
வெள்ளை மேக தண்டுக்குள்
எழும் மின்னல் போல்...
எந்தன் வாழ்வெங்கும் இன்னல்..!
என் இதழ் மேல் இன்று
வாழும் மௌனங்கள்..!
என் மனம் பேசுதே நூறு எண்ணங்கள்..!
சொன்ன சொல்லின் அர்த்தங்கள் என்னுள் வாழுதே..!
தூரம் தள்ளிச் சென்றாலும் உயிர்தேடுதே..!
ஆசை வார்த்தை எல்லாமே..!
இன்று கீறாலாய்..!
எந்தன் நெஞ்சின் ஓரத்தில் பாய செய்கிறாய்..!
என்னுள் நீ வந்தாய்! இன்றும் வாழ்கின்றாய்!
உன்தன் சொல்லாலே தூரம் துண்டாக்கினாய்..!
என்னை தீண்டாதே! என்னைப் பார்க்காதே!
ஒன்றும் பேசாதே! போதும் துன்பங்கள்..!
Male:
என்னை விட்டு செல்லாதே..! எந்தன் அன்பே..!
வேண்டும் உன் காதல் ஒன்றே..!
உன்னை மட்டும் நேசித்தேன்..! இது உண்மை!
இன்னும் ஏன்னிந்த ஊடல்..!
என் உயிர் காதலை உந்தன் காதோரம்..!
ஒருமுறையாவது சொல்ல.. நீ வேண்டும்..!
என் ஆசை முத்தங்கள் ! உன்னை சேருமோ?
இல்லை காதல் யுத்தங்கள்! இன்னும் நீளுமோ?
உன்தன் கண்ணில் நீ சிந்தும் ஈரம் ஏனடி..!
நெஞ்சில் பாரம் வேண்டாமே..!
என்னை பாரடி..! (என்னை கொள்ளாதே..!)
ஆதி தன்னால் எதுவுமே செய்ய முடியவில்யே என்று வேதனையில் தவித்தான்.இனி இங்கிருந்து வேலைக்கு ஆகாது! எதுவும் நடக்கப்போவதில்லை. எல்லோருக்கும் ஒரு டெமோ காட்ட வேண்டும் என்று எண்ணி ஆதி பரப்பரப்பாக us போவதற்கான ஏற்பாடுகளில் இறங்கினான்.
சுஜியை ஆதி சந்தித்துவிட்டு வந்து ஒரு மாதம் சென்றிருக்கும். அன்று மாலை ஏழு மணியளவில் தான் ஆப் ஆகிவிட்ட தன் மொபைலை சார்ஜிலிருந்து அகற்றி ஆன் பண்ணினாள் சுஜி. “யப்பா! என்ன இவ்வளவு மிஸ்ட் கால்ஸ். மொத்த பாமிலியே ஒருத்தர்விடாமல் எடுத்திருக்காங்க! காயத்திரியும் கால் பண்ணிருக்காள்! யாருக்கு என்னாச்சி என பதட்டத்துடன் எண்ணும் போதே காயத்திரியிடமிருந்து அழைப்பு வந்தது.