இருந்த போதிலும் தாய் அறியாத சூல் உண்டோ! ஆர்த்தியின் மூலம் விஷயத்தை அறிந்த மீனாட்சி தன் கணவனிடம் நடந்தவற்றைக்கூறி ஆதியின் அம்மா மாப்பிள்ளைக்கேட்டு போக வேண்டும் என்று எதிர்பார்கலாம். அதனால் தான் மறுக்கின்றார் போலும் எதுஎப்படி இருந்தாலும் நம் மகளின் வாழ்க்கை நாம் தான் சீர்ப்படுத்த வேண்டும் என தெளிவுப்படுத்தினார்.அதனால் தம்பி ராஜு மூலம் ஆதியை சுஜிக்கு கேட்க அப்போதும் ஆதியின் தாய் மறுத்து விட ராஜுவும் தன் அக்காவோடு சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார்.
வேறு வழியேதுமின்றி சுஜிக்கு வேறு வரன்கள் வரவே அவற்றை ஏற்க சுஜியோ வரும் அனைத்து வரன்களையும் வேண்டவே வேண்டாம் என மறுத்துக்கொண்டே வந்தாள். மீனாட்சி போதும் போதும் என்றளவுக்கு அன்பாகவும் கோபமாகவும் அவளிடம் பேசியாயிற்று. அவள் பிடிவாதத்திலிருந்து மாறவே இல்லை. ராஜு சுஜியின் முடிவை அறிந்து ஆதியிடம் வேதனைப்பட்டார். அதனால் சுஜியை பார்த்து பேச வேண்டும் என்பதற்காக பெங்களூர் சென்று தான் வந்திருப்பது தெரிந்தால் சுஜி வரமாட்டாள் என்பதால் சுஜியின் அண்ணண் விஷ்வா வந்திருப்பதாக கூற விஷ்வா தான் வந்திருப்பதாக எண்ணி ஆபிசில் அனுமதி பெற்று வந்தாள்.
ஆதி சுஜியை ஆறு மாதங்கள் கழித்து பார்க்கிறான். சற்று மெலிந்து கண்களில் ஜீவன் துளைத்து இருத்தாள். அவளைக் கண்டதும் ஆதியின் மனம் வேதனையால் துடித்தது. சுஜி விஷ்வா தான் வந்திருப்பதாக எண்ணி வர ஆதியைக் கண்டதும் அவள் முகத்தில் அப்பட்டமாய் அதிர்ச்சி, அடுத்த கணம் அவனைப் பார்த்து உள்ளம் வலியில் துடித்தது. அப்போது புரிந்தது ஆர்த்தி கூறியது எவ்வளவு உண்மை என்பது.சுஜி ஆதியுடன் பேசாவிட்டாலும் அவன் நினைவுகள் அனுதினமும் வதைத்தது. அவன் நலம் அறிய நெஞ்சம் துடித்தது. அதனால் தான் ஆர்த்தியிடம் அவனைப்பற்றி அடிக்கடி கேட்டுக்கொள்வாள். சுஜிக்கா! ஆதி அத்தான் முன்னர் போல இல்லை. க்கிளீன் சேவ்ல ஹிந்தி பில்ம் ஹீரோ போல இருந்தவர் இப்போ தாடியோட பார்க்கவே சகிக்கலை. லாஸ்ட்டைம் ஊருக்கு போனப்போ அண்ணி சொன்னாங்க யார்கூடவும் முகம் கொடுத்து பேசுறதில்லையாம்! நேரத்துக்கு சாப்பிடுவதில்லையாம்! பாதிநாள் வீட்டுக்கே வாரதில்லையாம்! அத்தான் ரொம்ப பாவம்கா நீயாவது அத்தான் சொல்றதை கேட்க கூடாதா? நீயும் வேதனை பட்டு அடுத்தவங்களையும் கஷ்டப்படுத்துறாய்?ஆர்த்தி பேச்சினூடே அறிவுரை கூறினாலும் சுஜி அமைதியாக இருந்துவிடுவாள்!
இப்போது ஆதியை பார்த்ததும் ஆறுதல் தேடும் குழந்தையாய் அவன் நெஞ்சில் சாய்ந்து அழவே அவள் இதயம் அனுமதி கேட்டு மன்றாடியது. மனம் கூறுவதை மறுத்தி மதி கூறுவதை முன்னிருத்துபவளிடம் எதை யாசிப்பது. அவளோ செல்ப் கன்ரோலில் அவளை மிஞ்ச யாருமுண்டோ என்பது போல் கண்ணில் துளிர்த்த கண்ணீரோடு சிலையாய் சமைந்து நின்றாள். ஆதிதான் பேச ஆரம்பித்தான்! என்ன மேடம் என்னை எதிர்பாக்கலை போல! எப்படியெல்லாம் அவாய்ட் பண்ணலாமோ அப்படியெல்லாம் என்னை அவாய்ட் பண்றீங்க. ரொம்ப சந்தோசம். நீங்க சுமக்கும் அதே வலி தான் எனக்கும்! அது உங்களுக்குத் தெரியலை.அப்புறம் எப்படி இருக்கீங்க? என்று ஏகத்துக்கும் மரியாதை கொடுத்து ஆதி பேசவும் சுஜி கவலையில் கரைந்தாள். நான் நல்ல இருக்கிறேன். நீங்க எப்படி இருக்கீங்க! என்ன விஷயம் என சுஜி கேட்க ஆதியோ பார்த்தா தெரியலை உங்களுடைய புண்ணியத்துல ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன்.
நான் சொல்றதை தான் கேட்க மாட்டேன்றீங்க! ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொன்னால் நீங்க பெரிய தியாக செம்மல் போல என்னால முடியாது! உங்கம்மா மனசை நோகடிச்சி அவங்களை வேதனைபட வைச்சி அமையும் லய்ப் வோண்டாம்னு சொல்லிட்டீங்க! இதனால் உங்களுக்கு யாரும் சிலை வைக்க போறதில்லை! லய்ப் ஒரு முறை தான் அதை நமக்கு பிடிச்சது போல வாழலாமேனு சொன்னாலும் புரிஞ்சிக்கமாட்டேன்றீங்க! இதெல்லாம் போகட்டும். எங்கம்மாவை பற்றி யோசிக்கும் நீங்க ஏன் உங்க அம்மா,அப்பா பத்தி யோசிக்க மறந்திட்டீங்க! நீங்க ஆசைப்பட்ட வாழ்க்கை தான் அமைய வாய்ப்பில்லைனு ஆகிடுச்சில்ல. ஏன் அவங்க ஆசைப்படும் வாழ்க்கையை அமைச்சிக்கொள்ளக்கூடாது என்று ஆதி சொன்னது தான் தாமதம். சுஜி கோபத்தில் கொதித்தெழுந்துவிட்டாள்!
ஸ்டாப் ஆதி! That's none of your business! நான் இப்படியே இருக்கேன் இல்ல சன்னியாசியாக போறேன்! நான் யாரை வெட்டிங் பண்ணணும்னு நீங்க எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்! நான் இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு பேசமாட்டேன். எனக்கு வெட்டிங்னு ஒன்னு நடந்தால் அது உங்க கூட மட்டும் தான். அதுவும் உங்க அம்மா சம்மதத்துடன் மட்டும் தான். அப்படி இல்லை என்றால் சுஜி எப்பவும் சிங்கல் தான்! என் லவ் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அது உண்மை என்றால் அது எங்களை சேர்த்து வைக்கும்னு நம்புறேன். புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். பேசுவதெல்லாம் பேசியாச்சில்ல! நான் போகலாமா? என சுஜி அடக்ககப்பட்ட ஆத்திரத்துடன் கேட்டாள்.