(Reading time: 15 - 30 minutes)

“அதுக்கில்ல காவீ.. அப்பாக்கு நிறைய ஃபுட் ரெஸ்ட்ரிக்ஷன்லாம் இருக்கு.. அதுமட்டுமில்லாம அவங்க காம் ப்ளேஸ்ல இருந்தா நல்லதுனு தோணுது… ப்ளீஸ் நீ போயிட்டு வாயேன்..”

“ஐயோ தர்ஷூ நீ இல்லாம எனக்கு போர் அடிக்கும்..”

“அடி வாங்குவ… ரிஷி வருவார்ல.. கீர்த்தனாவும் வருவா அப்புறம் என்ன?”

“இல்ல ஆக்சுவலா..ரிஷி வர்ற மாதிரி தெரியல.. நான் கேட்டப்போ வேற ஏதோ முக்கியமான வேலைனு சொன்னாரு.. அப்புறம் கீர்த்திய பத்தி உனக்கு தெரியும்ல இப்பெல்லாம், அவ உண்டு வேலை உண்டுனு இருக்கிறா..அவ வீட்டுக்கு போனாலும் சரியா பேசுறதே இல்ல..ஐ திங்க் ஷீ ஹேஸ் சம் இஸ்யூஸ்..”

“காவீ நம்ம எல்லாத்தையும் விட பெரிய பிரச்சனைல இருக்கிறது அவ தான், இலா ஏதாவது சொல்றார..?”

“அதான் செல்வியோட எங்கேஜ்மென்ட் போனா தெரியும்னு தோணுது… இலாக்கும் கீர்த்திக்கும் ஏதோ பிரச்சனைனு கூட தோணுது.. ஆனா அவளா ஷேர்  பண்ணாம அவகிட்ட போய் என்னக்கேக்கிறது.. போதாததுக்கு இந்த விசயம் லீக் அவுட் ஆனா ரிஷி எப்படி பிகேவ் பண்ணுவானு தெரியாது.. அதனால கூட இரண்டு பேரும் சைலன்டா இருக்காங்களோ என்னவோ..”

“ம் ஆமாம்.. பாவம்டி அவ.. நல்ல பொண்ணு, கீர்த்தனாக்கு இலாவ ரொம்ப பிடிச்சிருக்கு, ஆனா இலா விலகிபோறார்னு தோணுது.. வீட்டுல தெரிஞ்சா பிரச்சனை ஆகும்னு நினைப்பாரா இருக்கும்..”

“உண்மையா லவ் பண்ணினா அவர் எல்லாத்தையும் ஃபேஸ் பண்ணிருப்பாருடீ, மனசில இருக்கிறதையும் மறைக்க மாட்டாரு இல்லையா?”

ஒரு சில நிமிடங்கள் மௌனம் தர்ஷினியிடம், “ஏன் காவீ.. நீ சிவாவ சந்தேகப்படுறீயா?”

“உனக்கு அது இப்பதான் புரியுதா என்ன? … நீயும் சரி கீர்த்தனாவும் சரி.. தெளிவா ஏன் எல்லாத்தையும் பேசி முடிவு பண்ணமாட்டுறீங்க.. நீங்க இரண்டுபேருமே எல்லாத்தையும் ரொம்ப நம்புறீங்க..”

“காவீ நேரடியா சொல்றீயா..”

“ஹான், அங்கிளுக்கு அட்டாக் வந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆச்சு எங்கடி போனாரு சிவா.. இங்கதான் இருக்காருனா ஒரு தடவை வந்து பார்த்திருக்காலாம்ல.. இல்ல உங்கிட்டயாவது, அட்லீஸ்ட் எங்கிட்டயாவது கேட்டுஇருக்கணும் இல்லையா?.. பெரிய தியாக செம்மல் மாதிரி.. இதென்ன வேஷம் உங்கிட்டயும் பேசல.. பேசவும் ட்ரைபண்ணல… அங்கிள சமாதானப்படுத்த எந்த ட்ரையும் பண்ணாம ஓடி ஒழுஞ்ச மாதிரி இருக்கு..”

“பேசி முடிச்சுட்டீயா இல்லையா..?”

“இல்ல.. எனக்கு உண்மையிலேயே சிவாமேல கோபம் தான்.. ரிஷி சொன்னது ஓகே.. பட் அவர் மேல விழுந்த பழிக்கு அவர் பதில்சொல்லனும் இல்லையா? இவர் தான் இப்படி இருக்கார்னா அங்க இலா அதுக்கு மேல.. தெய்வமே.. பாவம் அந்த லூசு கீர்த்தனா.. இலாவால எவ்வளவு பெயின்.. அவளுக்கு இது தேவையா..சம்டைம்ஸ் ரிஷிக்கிட்ட சொல்லி நாலு மொத்து மொத்தலாம்னு கூட  தோணுது.. சரியான அமுக்குனி… இவங்க லவ் பண்ணி வீட்டுல சொல்லி.. பிரச்சனைப் செஞ்சு கல்யாணம் நடக்க… “

“கொஞ்சம் வாய மூடு.. இலாவ பத்தியும் சரி சிவாவ பத்தியும் சரி உன்னோட புரிதல் தப்பு..

இலாவும் சரி..செல்வியும் சரி ரொம்ப கட்டுப்பாடான சூழ்நிலைல அப்பா இல்லாம கஷ்டப்பட்டு வளர்ந்தவங்க..சொந்தக்காரங்க உதவியோட படிச்சுட்டு, இல்லன லோன் ஏதும் வாங்கிபடிச்சுட்டு அந்த பொறுப்பெல்லாம் முடியுற முன்னால இப்படி ஒரு பெண்ண கல்யாணம் பண்ணீட்டேனு போய் நின்னா அது அவங்க அம்மாக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்.. பொறுப்புகள உணர்ந்த எந்த பையனும் இத செய்யாமாட்டான்.. இன்னும் செல்வியோட கல்யாணம் நடக்கல.. இல்லையா அதுக்கு முன்னாடி இந்த விசயம் வெளில தெரிஞ்சா அது செல்வியோட லைஃப பாதிக்கலாம்.. வனிதா ஆண்டி எவ்வளவு அன்பானவங்களோ அந்த அளவுக்கு கண்டிப்பானவங்களும் கூட, திடீர்னு இந்த விசயம் தெரிஞ்சா கீர்த்தனா மேல ஒரு கெட்ட அபிப்ராயம் வந்துட்டுனா அத மாத்திரது இன்னும் சிக்கல்.. போதததுக்கு உன் மாமனார் பத்தி ஊருக்கே தெரியும்.. பெரிய மனுஷன் கொஞ்ச கோபக்காரரும் கூட..எடுத்தோம் கவுத்தோம்னு பொண்ணு விஷயத்த ஒத்துக்க மாட்டாரு.. இதெல்லாம் யோசிச்சுதான் இலா விலகிப்போவாரா இருக்கும் இது நிச்சயம் கீர்த்தனாவுக்கும் தெரியும்.. செல்வி கல்யாணம் முடியுற வர எந்த பிரச்சனையும் வந்துரக் கூடாதுனு அவ நினைக்கலாம் அதான் அமைதியா இருக்கா…

எங்க விஷயத்தில…

சிவாவுக்கு அப்பாவோட கோபம் பத்தி நல்லா தெரியும் இந்த டைம்ல எங்கூட பேசினா அப்பா இன்னும் வருத்தப்படுவாரு.. இந்த நிலைமைல அவர் சொல்ற எதுவும் எதிர்மரையான விளைவுகளத்தான் உருவாக்கும்.. இவ்வளவு பிரச்சனைகிடையிலும் விஷ்ணு இங்க வரத்தான் செயிரா இல்லையா.. அவர் விஷ்ணுவ இங்க அனுமதிக்கிற வரைக்கும் எங்களோட உறவு இன்னும் சேதம் அடையல புரியுதா.. நாங்க பேசலனு யார் சொன்னது.. விஷ்ணுகிட்ட பேசுறதே எனக்கு அவர் கூட இருக்கிற உணர்வை கொடுக்கு.. காவீ.. தவறு செய்யுறது மனித இயல்பு.. இதெல்லாம் சின்னப் பிரச்சனைதான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.