(Reading time: 8 - 16 minutes)

“அய்யே மறுபடியும் ஃபீலிங்கா? முடிஞ்சது முடிஞ்சு போச்சு புகழ்.. சும்ம எதுக்கெடுத்தாலும் ஃபீல் பண்ணிட்டே இருக்காதிங்க.. மணி ஆச்சு.. வாங்க நான் ட்ராப் பண்ணுறேன்” என்று முன்னே நடந்தாள் ஆயிஷா. அந்த கார் பயணம் இருவருக்குமே ரம்யமானதாக அமைந்தது. இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. வானொலி மட்டும் வழக்கம்போல தன் வேலையை சரியாக செய்தது.

எந்தன் நெஞ்சில் பாகிமா

உன் எண்ணம் பாகிமா

நீயும் நானும் ஒன்றானோம்; வேறில்லையே!

லாவகமாக காரை செலுத்திக் கொண்டே புகழைப் பார்த்துக் கண் சிமிட்டினாள் ஆயிஷா. “அடிப்பாவி நான் பண்ண வேண்டியதை எல்லாம் நீ பண்ணுறியே” என்று கண்களாலேயே வினவினான்  அவன். “இப்போ அதுவா முக்கியம் ? பாட்டை கேளுங்க”என்று ஆயிஷாவும் விழிகளாலேயே பேசினாள்.

உன்னை மூடி மறைத்தாய் !

பூவின் பின்னால் ஒளிந்தாய்!

காதல் உன்னை உடைத்தபோது வாய் வெடித்தாய்!

உண்மை நீ உரைத்தாய்!

மீண்டும் அதே கண்சிமிட்டல்! பல நாள் காணாத மதிமுகமும் அது வெளிப்படுத்தும் சந்தோஷத்தையும் தெவிட்டாது ரசித்தான் புகழ்.

மாமா” தமிழின் குரலைக்கேட்டு மோகன், யாழினி, புகழ் மூவருமே தமிழைப் பார்த்தனர். இரவு உணவை முடித்துவிட்டு அனைவரும் அமர்ந்திருக்க,தமிழின் குரல் எதையோ அறிவிக்கவிருப்பதை போலவே ஒலித்தது.

“சொல்லுங்க”என்றார் மோகன். புகழை மீண்டும் அழைத்து வந்ததால் ஏற்பட்ட மனஸ்தாபம் அவருக்குள் குறைந்தபாடில்லை! எனினும் வெளிப்படையாக கோபத்தைக் காட்டவும் இல்லை. புகழின் வருகையை அவர் மனதும் விரும்பத்தான்  செய்ததோ?

“புகழ், நாளையில் இருந்து இங்க தங்க மாட்டான்..”.ஏற்கனவே தமிழ் தன்னிடம் சொல்லியிருந்தாலும், அது நிஜமென்று யாழினி நம்பவில்லை. தன்னை சீண்ட அவன் சொன்னதாகவே நினைத்தாள்.

“ ஓ!” என்றார் அவர்.வேறென்ன சொல்வது?

“ஒரு காரணமாகத்தான் மாமா. எனக்கு தெரியும் நான் செய்யுறது எல்லாமே உங்களுக்கு பிடிக்கல.. பிடிக்கலனு சொல்றதுவிட புரியல நினைக்கிறேன். ஆனால் எல்லாத்துக்கும் ஒரு காரணம் இருக்குனு மட்டும் நம்புங்க மாமா” என்றான் தமிழ்.

“உங்க இஷ்டம் மாப்பிள்ளை!” என்று பட்டும்படாமல் சொல்லிவிட்டு சென்றார் அவர்.

“நிஜமாவே அவன் இங்க இருக்க போறது இல்லையா? அப்பறம் ஏன் இங்க கூட்டிட்டு வந்தீங்க?” என்ற கேள்வியை அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கேட்டுவிட்டு நகர்ந்தாள் யாழினி. இரண்டடி எடுத்து வைத்தவள், தமிழ் தன்னை தொடரவில்லை என்று தெரிந்ததும்,

“நீங்க வரலயா?”என்றாள்.

“நீ போம்மா.. நான் புகழ்கிட்ட கொஞ்சம் பேசிட்டு வரேன்”என்று அவன் தன்மையாக சொல்லவும் யாழினி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவன் இல்லாமல் அவள் என்றுதான் தூங்கி இருக்கிறாள்?

“அவன் கூடவே குடும்பம் நடத்துங்க..!” கோபமாய் உரைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள். அடுத்ததாக தமிழை முறைக்கும் பணியை புகழ் எடுத்துக் கொண்டான்.

“நீயுமா புகழ்? இன்னைக்கு வரிசையாக எல்லாரும் என்னை முறைக்கனும்னு தீர்மானம் எடுத்துருக்கீங்களா?”

“ஏன் கேட்க மாட்டீங்க தமிழ்? என்னை தேடி கண்டுபிடிச்சு அவகிட்ட சேர்க்கிறேன்னு சொல்லிட்டு இப்படி வந்த ஒரே நாளில் அனுப்பினால் என்ன அர்த்தம்?”

“ எனக்காக நீ செய்யுற உதவி இதுன்னு நினைச்சிக்கோ புகழ் ப்ளீஸ்..”

“சரி போறேன்.. ஆனா எங்க?”

“ தமிழ் வரப்போறீங்களா இல்லையா?” பொறுமையிழந்த குரலில் அழைத்தாள் யாழினி.

“ நான் இல்லன்னா அவ தூங்க மாட்டா புகழ். பத்து பதினஞ்சு நிமிஷத்துல தூங்கிடுவா.. இரு வரேன்.”

“ஆச்சர்யமா இருக்கு தமிழ்.. யாழினியா இது? அவ செல்லம் கொஞ்சுற ஆளுதான் .. ஆனால் இந்த அளவுக்கு பண்ண மாட்டாளே.. அவ  என்ன கொழந்தையா உங்களுக்கு?” என்று சீண்டினான் புகழ்.

“ நீ போகாம இருந்திருந்தா இந்நேரம் எங்களுக்கே கொழந்த இருந்திருக்கலாம் புகழ். நீ போனதுனாலத்தான் அவ இப்போ இப்படி கொழந்தையா இருக்கா.. எனக்கு தெரியும் இந்த வார்த்தை உனக்கு கஷ்டமா இருக்குனு.. ஆனா இன்னொரு தடவை நீ போறது பத்தி யோசிக்கவே கூடாது.. அதான் அப்படி சொல்லிட்டேன்.” என்ற தமிழ் தன்னையே ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

“ நீ போன பிறகு யாழினி எப்படி இருந்தானு உன்னால யூகிக்க முடியும்.. ஆனா நான் எப்படி மாறினேன்னு உனக்கு தெரிய வேணாமா? புகழ் மாதிரி தமிழ் இருந்தாச்சு.. இனி புகழ் தமிழோட இடத்துக்கு வரணும்”என்று விடுகதை போட்ட தமிழ்,

“இரு, அவளை தூங்க வெச்சிட்டு வரேன்..”என்றான்.

தமிழ் என்ன சொல்ல போறார்? அடுத்த வாரம் பார்ப்போம்! :)

தொடரும்

Episode # 22

Episode # 24

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.