(Reading time: 15 - 29 minutes)

மாஸ்டர் ஆப் செர்மணி மலரும், செழியனும் என்பதால் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்னும் கொடுக்க வேண்டிய முன்னுரைகளை தற்போது மாற்றி அமைத்தனர்.. அதோடு அவர்கள் தமிழ், ஆங்கிலம் மட்டுமே கம்பயர் செய்ய இருந்தவர்கள், தற்போது ஹிந்தியிலும் காம்பியரிங் தேவைப்பட்டது.. எனவே அதற்கான ட்ரான்ஸ்லேஷன் வேலைகள் என்று நேரம் போனேதே தெரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

பத்து மணி ஆனதும் முதல்வரே

“எல்லோரும் கிளம்பலாம்.. நாளைக்கு பார்டிசிபன்ட்ஸ் & ஸ்டாப்ஸ் எல்லோரும் மதியம் வந்து விட வேண்டும்.. மற்ற ஸ்டுடென்ட்ஸ் & கெஸ்ட் எல்லோரும் ஐந்து மணிக்கு வர சொல்லி அறிவிப்பு கொடுத்து விடலாம். நிச்சயம் இந்த விழா நல்ல படி நடக்கும்.. எல்லோரும் அவரவர் வீட்டிற்கு போகலாம்.. “ என , எல்லோரும் கிளம்பினர்.

வெளி வண்டியில் வந்தவர்களை கேப் புக் செய்து அனுப்ப, சொந்த வண்டியில் வந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் துணையாக ஒன்றாக கிளம்பினர்.

செந்தில், செழியன், மலர் மூவரும் அடுத்து அடுத்து வண்டியில் கிளம்ப.. சற்று தூரம் அமைதியாக வந்தார்கள்.

செந்தில் மெதுவாக “என்ன மச்சான் ? பங்க்ஷன் சாக்கு வச்சு நல்ல என்ஜாய் பண்ணுற போலே..”

“டேய்.. அடக்கி வாசி..”

செந்தில் வேகமாக “சிஸ்டர் “ என்று அழைக்க, மலர் ஆச்சர்யமாக திரும்பி பார்த்தாள். செந்தில் மலரை மேடம் என்று தான் அழைப்பான்.. அவனின் அந்த அழைப்பில் ஒரு சகோதர பாசத்தை அவள் உணர்ந்து இருந்தாலும், வெளிப்படையாக அவன் சிஸ்டர் என்று சொல்வது இப்போது தான்..

“என்ன அண்ணா..?” என்று வினவினாள்.

அவன் அவளிடம் ஏதோ கேட்க வர, செழியன் அவனை முறைத்து

“ஒண்ணுமில்லை.. மலர்.. வீடு இன்னும் எவ்ளோ தூரம்நு கேட்க வந்தான்..” என்றபடி கண்ணால் அவனை எச்சரித்தான்.

அவளும் “இதோ இன்னும் கொஞ்ச தூரம்தான் “ என்றபடி முன்னால் சென்றாள்.

“செந்தில்.. இப்போ என்ன அவங்க கிட்டே கேட்க போனே ?”

“ஒன்னும் இல்லைடா.. சிஸ்டருக்கும் உனக்கும் சம்திங் சம்திங் ஆ என்று கேட்க போனேன்”

“அது எதுக்கு உனக்கு இப்போ ?”

“டேய்.. நான் உன் பிரெண்ட்டா.. சம்திங்ன்னு இருந்தா என் ஹெல்ப் வேண்டாமா? அதான் டிடைல்ஸ் தெரிஞ்சிக்க முயற்சி பண்றேன்..”

“ஐயா.. சாமி.. நீங்க ஆணியே பிடுங்க வேண்டாம்.. இப்போ நீ எதாவது கேட்டு, அவ வெட்கத்திலே நாளை பின்ன பேசாமலே போயிடுவா.. இந்த வம்பே வேண்டாம். .உனக்கு என்ன சந்தேகமோ என்கிட்டேயே கேளு..”

“அப்படி வா வழிக்கு.. இப்போ சொல்லு.. எத்தனை நாளா நடக்குது.. இது ?”

“இந்த கதை எல்லாம் உனக்கு அப்புறம் சொல்றேன்.. இப்போ முதலில் அவளை வீட்டில் விட்டுட்டு வரலாம்..”

“இப்படியே எஸ்கேப் ஆகு..” என்று முணுமுணுக்கவும்,

“செந்தில். புலம்பாத.. உனக்காக ஒன்னே ஒன்னு சொல்றேன்.. எஸ். எங்களுக்குள்ளே நேசம் இருக்குதான்.. ஆனால் மற்ற விவரம் எல்லாம் பின்னாடி.. சொல்றேன் போதுமா?”

“ஹேய்.. வாழ்த்துகள் மச்சான்.. கூடிய சீக்கிரம் நீயும் இந்த சம்சார சாகரத்தில் குதிக்கும் நாளை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.”

“என்னே .. ஒரு உயர்ந்த உள்ளம்..” என்று செழியன் தாலியில் அடித்துக் கொண்டான்.

அதற்குள் மலர் வீடு வந்து விட, அங்கே அவள் அம்மா, அப்பா, ஆச்சி எல்லோரும் வாசல் வரண்டாவில் அமர்ந்து இருந்தனர்.

உள்ளே நுழைந்த மலர் , செந்தில், செழியன் இருவரையும் வீட்டிற்கு அழைத்தாள். செழியன் மறுத்துக் கொண்டு இருக்கும் போதே செந்தில் பைக் நிறுத்தி விட்டு வர, செழியனும் தன் பைக்கை நிறுத்தி விட்டு வந்தான்.

செந்திலுக்கு செழியன் மனது தெரிந்த பின் மலர் வீட்டார் பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. அதனால் தான் நண்பனின் முறைப்பை பொருட்படுத்தாமல் மலரின் பின்னே சென்றான்.

மலர் தன் வீட்டில் உள்ளவர்களிடம்

“அப்பா.. ஏன் இவ்ளோ நேரம் வாசலில் உட்கார்ந்து இருக்கீங்க.. ? பனி இன்னும் விலகாம இருக்குல்ல.. பாட்டியும் உன் உடம்புக்கு தான் பனி சேராதே.. பிறகு ஏன் வாசலில் உட்கார்ந்து இருக்க.?”

மலர் தன் ஆச்சியிடம் அவர்கள் ஊர் வழக்கப்படி பேசினாலும், மத்த பிரெண்ட்ஸ் மத்தியிலோ, வெளி மனிதர்களிடமோ அந்த மொழி வழக்கை தவிர்த்து, சாதரணமாக பேசுவாள். அது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும் என்பதால் இப்போதும் அதையே கடைபிடித்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.