(Reading time: 15 - 29 minutes)

இந்த வேளைகளில் பாதுகாப்பு அதிகாரிகளோடு கல்லூரி மாணவர்கள் சிலரும் இணைந்து இருந்தார்கள்.

சரியாக ஐந்தரை மணிக்கு கடவுள் வாழ்த்து, மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழாவை ஆரம்பித்தனர்.

அதன் பின் மேடை இருபுறமும் மைக் இருக்க, செழியன் , மலர் இருவரும் அங்கிருந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க ஆரம்பித்து இருந்தனர்.

அந்த யூனிபோர்ம் புடவையும் மலருக்கு பொருத்தமாக இருந்ததை கண்டு செழியன் ரசிக்க தொடங்கினான்..

இப்போது விழா ஆரம்பிக்க, செழியன், மலர் இருவர் குரலும் இணைந்து ஒலித்ததில், கல்லூரியே நிசப்தமாகியது.

இருவரின் குரலும் அத்தனை ஆளுமையாகவும், அதே சமயம் கூட்டத்தை கட்டிப் போடும் தன்மையும் இருப்பதை பார்த்த இருவரின் பெற்றோர்கள் முகமும் பெருமிதத்தில் மின்னியது.

அடுத்து அடுத்து மேடையில் நடக்கும் நிகழ்ச்சிகளை வரிசையாக இருவரும் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் உள்ளூர் பெரியவர்கள் சிலரும் கலந்து கொண்டு இருக்க, அவர்கள் கையில்தான் மைக் கிடைத்து விட்ட ஆவேசத்தில் பேசி தள்ளினர்.

சரியாக ஆறரை மணிக்கு பள்ளிக்குள் நுழைந்த பிரதமரை பேண்ட் வாத்தியங்கள் முழங்க வரவேற்றனர் . பிறகு பிரதமரை மேடைக்கு அழைத்து செல்ல ஆரம்பித்தனர்.

அப்போது மேடையில் ஒருவர் பேசி கொண்டு இருக்க, அவர் முடிக்கும் வரை கீழே நின்று விட்டு, பிறகு மேடை ஏறினார் பிரதமர்.. முதல்வரும் பிரதமரோடு எஸ் என்றபடி கிளம்பினேன்.

பிரதமர் வாழ்த்து உரை முடித்து, ஆண்டு விழா மலர் வெளியிட்டு, முதல்வர உரை எல்லாம் முடிய , பிரதமர் சொன்ன நேரத்திற்கு கிளம்பி விட்டார்.. பாதுகாப்பு கருதி முதல்வரும் உடனே கிளம்பிவிட, கூட்டம் கொஞ்சம் சாதாரண நிலைக்கு திரும்பியது.

அடுத்து அடுத்து கலை நிகழ்ச்சிகள் நடக்க, அதில் நடந்த எல்லாவற்றிலும் பர்ஸ்ட் வந்த ப்ரோகரம் மட்டுமே மீண்டும் நடத்த பட்டது.

அதில் தமிழ் சமூக நாடகமும், மயில் பரத நாட்டியமும், மோனோ அக்டிங் என்று சொல்லப்படும் ஓரங்க நாடகமும், தமிழ் பிரபல சினிமா வசனங்கள், பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நாடகம் போடுவதும் எல்லோரின் பாராட்டையும் பெற்றது.

இந்த ஒவ்வொரு நிகழ்ச்சிக்கு முன்னும் அந்த நிகழ்ச்சியை பற்றிய சிறு குறிப்புகளை கொடுத்த செழியனும், மலரும் பல பேரின் பாராட்டை பெற்றனர்.

இது எல்லாம் முடிந்து கடைசியில் தேசிய கீதம் பாடியவுடன் எல்லோரும் அமைதியாக கலைந்து சென்றனர்.

இந்த நேரத்தில் மலரின் பாட்டி வடிவு “ஏலே .. வேலா.. இன்னிக்கு வந்தது அம்புட்டும் நாட்டிலே பெரிய பதிவில் இருக்கிறவங்க எல்லோர் முன்னாடியும் உதறாம நம்ம புள்ள பேசினது.. ரொம்ப ஆச்சரியம்தான் ..” என்று அவர் விகசிக்க, அவர் முகம் பிரகாசமா இருந்தது.

அப்போது அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டு இருந்த செழியனின் அம்மா பார்வதி, மலரின் பாட்டியிடம்

“அம்மா.. நீங்களும் தெற்கு பக்கம் தானா.. அந்த மலர் புள்ளையோட உறவுக்காரங்களா?”

பாட்டி உடனே

“ஆமாம் தாயி.. உங்கூட்டு பொண்ணும் இங்கே படிக்குதா, வேலைக்கு வருதா?”

“மேடையில் உங்க பொண்ணு கூட இன்னொருதரும் தொகுத்து பேசிட்டு இருந்தாங்களே அவன் தான் என் பையன் அம்மா..

இப்போது வேலன் முன்னே வந்து

“செழியன் சார் அம்மா , அப்பாவா நீங்க..? ரொம்ப நல்ல பையன் மா. உங்க புள்ள “

செழியனின் பெற்றோர் முகம் விகசிக்க வேலனிடம் கை கொடுத்து நட்பாகி கொண்டனர்.

அப்போது செழியன் அம்மா,  வள்ளியிடம் “உங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்கறீங்களா? என்று வினவ, அதற்கு பதில் சொல்ல விளைந்த வள்ளியை பேச விடாமல் பாட்டி கிளம்ப சொன்னாள்.

இதற்கு பதில் செழியன் அப்பா “தம்பிக்கு ஏற்கனவே பொண்ணு ரெடி ஆக இருக்கும்மா.. “ என்ற பதிலில் மலரின் மனம் சுருங்கி விட்டு இருந்தாலும், ஏனோ அவனால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

இவர்கள் பேசியது மேடையில் இருந்தாலும் ,அவர்கள் கண்கள் முழுக்க தங்கள் பெற்றோரிடமே நிலைத்து விட்டு நின்று விட்டன. இவர்கள் பேசியது புரியா விட்டாலும், இனி என்ன நடக்க போகும்? 

தொடரும்!

Episode # 30

Episode # 32

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.