(Reading time: 15 - 29 minutes)

செந்திலை பார்த்ததும் வேலன் அடையாளம் கண்டு கொண்டவராக , தன் மகளை அனுப்பி எல்லோருக்கும் காபி எடுத்து வர சொன்னார்.

செந்திலும், செழியனும் அவரிடம் மறுத்தாலும்

“உங்கள பத்தி என் பொண்ணு நிறைய சொல்லிருக்கா .. உள்ள வாங்க.. இந்த நேரத்திலே என் பொண்ணுக்கு துணையா வந்து இருக்கீங்க.? எதுவும் கொடுக்காம அனுப்பினா நல்லா இருக்குமா?”

அதற்குள் வடிவு தன் பேத்தியிடம்

“என்ன கண்ணு.. இம்புட்டு நேரம்..இந்த வேலை உனக்கு வேணாம்தா.. “

“ஐயோ பாட்டி .. என் கூட வந்து இருக்கிறவங்களும் என் கூட வேலை பார்கிறவங்க.. அவங்க முன்னாடி இப்படி பேசினா என்ன நினைப்பாங்க.. ?”

“இரு .. நான் அவங்ககிட்டேயே கேட்டுக்கறேன்.. “ என்றபடி வேகமாக உள்ளே வந்தார். 

“நீங்களே சொல்லுங்க தம்பிகளா.. ஒரு பொம்பள பிள்ள.. இத்தாம் நேரங்கழிச்சு வந்தா நல்லவா இருக்கு.. அதான் வேலை விட சொல்லுதேன்.. நான் சொல்லுறது சரிதானே.”

அப்போதுதான் மலரின் அம்மா கொண்டு கொடுத்த தண்ணியை குடித்து கொண்டு இருந்தவர்கள், இதை கேட்டதும் அதிர்ந்ததில்.. இருவருக்கும் புரை ஏறி விட, செந்தில் அருகில் அமர்ந்து இருந்த வேலன் அவன் தலையை தட்டி செந்தில் இயல்பு நிலைக்கு திருப்ப, இதை கண்ட செழியன் ஆஹா தனக்கும் தலையை தட்ட மலர் வருவாள் என்று எதிர்பார்த்தான்.. ஏனெனில் அங்கே நின்று இருந்தவள் மலர் தான்..

அவன் எதிர்பார்த்தபடி ஒரு பெண் கைதான் தலையை தட்டியது.. ஆனால் அவன் எதிர் பார்த்த வளைகரங்களுக்கு பதிலாக சற்று சுருங்கிய தோலுடன் கூடிய கரம் தட்டுபடவே , நிமிர்ந்து பார்த்தவன் அங்கே பாட்டி நின்று இருக்க கண்டான்..

ஆஹா .. வட போச்சே என்ற லுக் விட்டவன், பிறகு பாட்டியின் கேள்வியில் சுதாரித்தவனாக,

“பாட்டி.. அப்படி எல்லாம் முடிவு பண்ணாதீங்க.. நாங்க எல்லாம் ஒரே குடும்பம் போலேதான்.. எங்க வீட்டு பெண்களுக்கு ஆபத்து வர விட்டுடுவோமா? எல்லா பெண் ஊழியர்களையும் இந்த மாதிரி தகுந்த துணையோடு தான் அனுப்பி வைப்பாங்க.. அதோட இந்த கஷ்டம் எல்லாம் இன்னிக்கு மட்டும் தான்.. நீங்க நாளைக்கு காலேஜ் வந்து பாருங்க .. எவ்ளோ பெரிய ஆளுங்க எல்லாம் வராங்க.. என்று.. அவங்க முன்னாடி உங்க பேத்தியா ..கம்பியரிங் பண்ண போகுது..”

“காம்பியரிங்ன்ன என்னப்பா ? “ என்று பாட்டி வினவ,

“அதான் பாட்டி .. டிவிலே எல்லாம் அடுத்து என்ன பாட்டு வர போகுதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி”  என்று மலர் கூற.

“என்னது.. தலைவிரி கோலமா, இல்லாட்டா முடிக்கு சாயம் பூசிட்டு லொட லொடன்னு பேசிட்டு இருப்பாங்களே.. ? அந்த மாதிரியா? எங்கன்னு.. சொல்லி குடுக்கிற நீங்களே.. இப்படி கண்டமேனிக்கு அலங்காரம் பண்ணினா , புள்ளங்கள எப்படி கண்டிக்க முடியும் ?” என்று வடிவு சகட்டு மேனிக்கு கலைத்து தள்ளினார்..

மலரோ பொறுமை சுத்தமாக போய் “பாட்டி.. இது அந்த மாதிரி எல்லாம் இருக்குது.. நீதான் நாளைக்கு நேர்லே வர போறே இல்ல.. அங்கே வந்து பார்த்துக்கோ “ என்றபடி செழியன் செந்தில் இருவரையும் பார்த்தாள்.

அவர்களும் கிளம்பினார்கள் .. இருவருக்கும் நன்றி சொல்லி வேலனும், மலரும் வாசல் வரை சென்று அனுப்பினார்கள்.

மலரின் வீட்டில்ருந்து கிளம்பிய உடன் செந்தில் செழியனிடம்

“மச்சான்.. இந்த ஒரு பாட்டிய நீ சமாளிச்சு அந்த புள்ளைய கல்யாணம் பண்ணிக்குரதுக்குள்ளே உனக்கு நாக்கு தள்ளிடும்.. பார்த்துக்கோ.. என்ன நக்கலு ?”

“அந்த பாட்டி கொஞ்சம் டேஞ்சர் தான் மச்சான். “ என்று செழியனும் ஆமோதித்தான்.. இருவரும் அவரவர் வீட்டிற்கு சென்றார்கள்.

வீட்டிற்குள் சென்ற மலர் பாட்டியை கொஞ்சி, மிரட்டி பேசாமல் போய் படுக்க வைத்தாள்.

பிறகு தானும் தன் அறைக்கு வந்தவள், அன்றைய வேலையின் அலுப்பில் உடனே உறங்கி விட்டாள்.

றுநாள் மதியம் ஸ்டாபஸ் எல்லோரும் சென்று விட, எல்லா ப்ரோக்ராம்க்கும் ஒரு சின்ன ரிகர்சல் பார்த்தனர்.

அதே போல் அன்றைய நிகழ்ச்சிகள் முழுக்க , முழுக்க மாணவர்களே பங்கேற்க உள்ளதால், அவர்களை ஒழுங்கு படுத்த, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய என்று ஆசிரியர்களுக்கு நேரம் சரியாக இருந்தது.

மாலையில் ஐந்து மணிக்கு விருந்தினர்கள் வர ஆரம்பிக்கவும், வாசலில் காலேஜ் பேண்ட் குருப் நின்று வாசிக்க ஆரம்பித்தனர்.. அவர்களுக்கு எதிர் புறத்தில் அழகான இலம்சிவப்பில் பச்சை பார்டர் வாய்த்த சேலை அணிந்து வரவேற்பு செய்தனர்.

அன்று காலேஜ் முழுதுமே பெண் ஆசிரியர்கள் இந்த நிற சேலையும், மாணவிகள் கடல் நீல சுரிதாரிலும் வந்து இருந்தனர்.

அதே போல் ஆண் ஆசிரியர்கள் சாம்பல் நிற பார்மல்ஸ் அணிந்து இருக்க, மாணவர்கள் மெரூன் கலர் பார்மல்சிலும் வந்து இருந்தனர்.

எல்லோரும் வர வர, செழியன் அம்மா, அப்பா, செந்தில் மனைவி, மலரின் வீட்டில் எல்லோரும்  வந்து சேர்ந்தனர். அவர்கள் கையில் இருந்த இன்விடேஷன் பார்த்து அவர்களை அமர வைத்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.