(Reading time: 14 - 28 minutes)

கியிடம் எப்படி நேரில் பேசுவது என்ற குழப்பத்தோடு தலையை காய வைத்தப்படி அருள்மொழி நின்றிருக்க, திடிரென ஹாய் என்ற சத்தம் கேட்டதும் அவள் திரும்பிப் பார்க்க, கதவை திறந்துக் கொண்டு இலக்கியா வந்திருந்தாள்.. அங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த மலர், மணியை பார்த்து தான் அவள் ஹாய் என்று கத்தினாள்.. மகியிடம் பேச இவளின் உதவியை தான் கேட்க வேண்டும் என்று அருள் நினைத்துக் கொண்டாள்..

“ஹே வாலு எப்போ வந்த..” திடிரென்று கத்திய இலக்கியாவை பார்த்து மலரும் மணியும் கேட்டனர்..

“ம்ம் வந்து 5 நிமிஷம் ஆகுது.. அங்க ஹாலில் உட்கார்ந்திருந்த எல்லோர்கிட்டயும் நலம் விசாரிச்சிட்டு, நேரா இங்கத்தான் வரேன்..  ஆமாம் என்ன அண்ணாவையும் மாம்ஸையும் விட்டுட்டு நீங்க ரெண்டுப்பேரும் ஜோடியா பேசிக்கிட்டு இருக்கீங்க.. பேசாம உங்க ரெண்டு பேர்ல ஒருத்தர் ஆம்பளையா பொறந்திருந்தா, உங்க ரெண்டுப்பேருக்கும் கல்யாணம் செஞ்சு வச்சிருக்கலாம்” என்றதும், இருவரும் எழுந்து அவளின் இரு காதுகளையும் திருகினர்.

“அய்யோ வலிக்குது விடுங்க விடுங்க.. ஆமாம் என்ன நீங்க ரெண்டுப்பேர் மட்டும் உட்கார்ந்திருக்கீங்க..  கல்யாண பொண்ணு எங்க என்று அவள் கேட்டதும்,

“மச்சி.. நான் இங்கத்தான் இருக்கேன்..” என்று சொல்லியப்படியே, பால்கனி பக்கம் இருந்து அருள் அங்கு வந்தாள்..

அருளை பார்த்ததும், ஹே டயானா என்று கூப்பிட வந்து, வெறும் ட வோடு இலக்கியா நிறுத்திக் கொண்டாள்.. இலக்கியா பூங்கொடியின் தங்கை மகளாக இருந்தாலும், முறையில் அருளும், இலக்கியாவும் அத்தை மகள், மாமன் மகள் என்பதால்.. மச்சி என்று விளையாட்டாக அழைத்து பேசிக் கொள்வர்.. ஆனால் வேறு ஒரு காரணத்தால் சில மாதங்களாக இலக்கியா அருள்மொழியை  டயானா என்று கேளியாக அழைப்பாள்.. அதே போல் இன்றும் வாய் வரை அந்த பெயர் வந்துவிட்டது.. இருந்தும் இனி அப்படி கூப்பிடுவது நல்லதில்லை என்று அதை நிறுத்திக் கொண்டாள். அருள்மொழிக்கும் இலக்கியா என்ன கூற வந்தாள் என்பது புரிந்தும், அதற்காக அவள் மீது  கோபப்படவில்லை.

“ஹேய் மச்சி.. என்ன இந்நேரம் ரெடியா இருப்பன்னு பார்த்தா, இப்போ தான் தலையை காய வைக்கிறியா?”

“அதுவா.. நீ வந்து என்னை ரெடிப் பண்ணுவன்னு வெய்ட் செய்றேன்..”

“நானா.. ஏண்டி நீ நிச்சயதார்த்தத்துல அழகா இருக்க வேண்டாமா?” என்று கேட்டுவிட்டு இலக்கியா சிரித்தாள். ஏனென்றால் இலக்கியாவிற்கும் மேக்அப்க்கும் ரொம்ப தூரம். மாணிக்கத்திற்கு இதெல்லாம் பிடிக்காத விஷயம்..

அவர் இன்னும் அந்த காலம் போல், பாவாடை தாவணி, புடவை தான் உடுத்த வேண்டும் என்று நினைப்பார்.. ஆனால் சுடிதாருக்கு அவர் தடை சொல்வதில்லை, ஆனால் அதை தாண்டி இன்று நாகரீகம் என்று சொல்லப்படும் உடைகளுக்கு அவர் தடை சொல்வார்.. அதே சுடிதாரில் கூட கை சின்னதாக வைப்பது, பிறகு இந்த லெஹங்கா, லெகிக்கிங்ஸ் இதற்கெல்லாம் கூட தடை தான்.. முகத்தில் பவுடர் போடுவதோடு சரி, கண்ணுக்கு மை வைப்பதற்கு கூட அவர் தடை சொல்வார்.. சிறிய வயதில் இலக்கியா அதெல்லாம் விரும்பி கேட்டப்போது, இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதும்மா.. என்று ஒற்றை வார்த்தையில் அமைதியாக்கி விடுவார்.. தன் தந்தையின் குணம் தெரிந்து அவளும் அமைதியாகி விடுவாள்..

இங்கே சென்னைக்கு விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அருள் தான் அவளுக்கு அலங்கரித்து விடுவாள்.. தன்னுடைய உடைகளையும் போட கொடுப்பாள்.. ஏதாவது விஷேஷ தினங்களில் அருள் அவளது உடைப் போலவே இலக்கியாவிற்கும் எடுப்பாள்.. ஆனால் அதை போட்டால், தந்தை என்ன சொல்வாரோ என்று இலக்கியா பயந்தப்படியே அணிந்துக் கொள்வாள்.. ஆனால் மாணிக்கமும் அதை பெரிதாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்.. தந்தை தான் கண்டு கொள்வதில்லையே என்று அவளும் அலட்சியமாக இருக்கமாட்டாள்.

“அப்படியும் நான் தான் மேக்அப் போடடும்னா சொல்லு, போட்டு விட்றேன்..”

“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்… ஒரு நிமிஷம் வா, உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்..” என்று பால்கனி பக்கம் இலக்கியாவை அருள் அழைத்துப் போக, அதற்குள் மலர்கொடியோ..

“அருள்… இப்போ நீ ரெடியாக வேண்டாமா? இலக்கியா இங்க தானே இருப்பா.. அப்புறம் பேசிக்கோங்களேன்..” என்றாள்.

“இன்னும் டைம் இருக்குல்ல மலர்.. இதோ வந்துட்றோம்..” என்று சொல்லிவிட்டு, இலக்கியாவை அழைத்துச் சென்று அவளிடம் விஷயத்தை கூறினாள்.

ழிலரசி போன் செய்த போது சுடர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாள்.. எடுக்கலாமா? வேண்டாமா? என்று யோசித்தவள், பின் எடுக்கலாம் என்று முடிவு செய்தாள். ஆனால் இப்போது அவள் எடுத்திருக்கும் முடிவுகள் இப்போதைக்கு யாருக்கும் தெரிய வேண்டாமென்று நினைத்தப்படியே, தன் பேச்சில் தன் மனநிலையை காட்டிவிடக் கூடாதென்று தன்னை கொஞ்சம் சமன்படுத்த்திக் கொண்டு எழிலின் அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ..”

“ஹலோ.. சுடர்..”

“ம்ம் சொல்லுங்க..”

“என்ன பண்ற..? வீட்ல தானே இருக்க?”

“இல்லை.. எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் போக வேண்டியிருக்குன்னு, வெளிய வந்தேன்..”

“ஷாப்பிங்கா??” சுடர் இருக்கும் நிலைக்கு இப்போது ஷாப்பிங் செல்கிறாளா? என்ற கேள்வி மனதில் தோன்றியதால் அப்படி கேட்டாள்.

“ஆமாம்.. எதுக்கு அப்படி கேக்கறீங்க..?”

“ஒன்னுமில்ல. சும்மா தான் கேட்டேன்..”

“சரி வேற ஒரு விஷயமும் இல்லையே.. போனை வச்சிடட்டுமா?”

“ம்ம் சரி..” என்றதும் சுடர் அழைப்பை துண்டித்தாள்.

“என்ன எழில்.. அவ என்ன செய்யறாளாம்?”

“ஷாப்பிங் போறதா சொல்றா அண்ணி.. என்னால நம்ப முடியல..”

“இங்கப்பாரு… மனசை திசை திருப்பக் கூட அவ அப்படி செய்யலாமில்ல.. இப்போ சுடரைப் பத்தி கவலை பட ஒன்னுமில்ல.. வா போய் நிச்சயதார்த்த வேலையை கவனிப்போம்..” என்று எழிலை அறையிலிருந்து பூங்கொடி வெளியே அழைத்துச் சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.