(Reading time: 14 - 28 minutes)

கி குளித்து விட்டு இடுப்பில் டவல் கட்டியப்படி, கை பனியனை மாட்டிக் கொண்டே வெளியே வந்தவன், கண்ணாடி முன் நின்று, இன்னொரு டவலால் தன் ஈரத் தலையை துவட்டிக் கொண்டிருக்க, இலக்கியாவிடம் பேசிய பின், ஏதோ வேலையாக அறையை விட்டு வெளியே போயிருந்த அறிவு திரும்ப வந்தான்..

“மகி குளிச்சாச்சா..?? ஒரு முக்கியமான விஷயம் உன்கிட்ட பேசனும்டா..”

“என்ன??” ஷேவ் செய்தது சரியாக இருக்கிறதா?? என்று கன்னத்தை தடவியபடி, இப்படியும் அப்படியும் முகத்தை திருப்பியப்படி பார்த்துக் கொண்டே கேட்டான்.

“நம்ம அருள் உன்கிட்ட பேசனுமாம்… அதுவும் பங்ஷன் ஆரம்பிக்கிறதுக்குள்ள..” என்று சொன்னதும், மகியின் முகத்தில் சிந்தனை குடிக் கொண்டது..

“என்னவாம்..?? ஏதாச்சும் சொன்னாளா?”

“அதெல்லாம் சொல்லல.. ஆனா உன்கிட்ட முக்கியமா ஏதோ பேசனும் போல..”

“ஆனா இப்போ எப்படி டா..’

“ அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.. பின்னாடி தோட்டத்து பக்கம் தான் இப்போதைக்கு ஆள் யாரும் வரமாட்டாங்க..  நான் அதெல்லாம் சமாளிச்சுக்கிறேன்.. நீ ஏதாவது பேண்ட், ஷர்ட் போட்டுக்கிட்டு முதல்ல வா” என்று அழைத்தான்.

“ஹே இப்போ மகிக்கிட்ட பேசனும்னு என்ன அவசியம்??” மலர் கேட்டதும்,

“என்ன ஃப்ளவர்? அவங்க கல்யாணம் செஞ்சுக்க போறாங்க.. அதுக்கு முன்னாடி பேசிக்க வேணாமா?” என்று இலக்கியா அதற்கு பதில் சொன்னாள்.

“அதுக்கு இப்போ தான் நேரம் கிடைச்சுதா..?? இன்னிக்கு நிச்சயதார்த்தம்னு முடிவு செஞ்சு 3 நாள் ஆகுது.. மகி என்ன வேறெங்கேயோவா இருக்கான்.. இதே வீட்ல தான இருக்கான்.. அப்போல்லாம் பேசறதுக்கு என்ன?” என்று மணி அடுத்த கேள்வியை கேட்டாள்.

“எங்கே, இந்த நிச்சயதார்த்தம் முடிவான நாளிலிருந்து மகி இவளது கண்ணில் படவேயில்லையே, அதனால் தானே, அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று தவிக்கிறாள்..” மனதுக்குள் சொல்லிக் கொண்டவளாக, ஏதோ சொல்ல வாயை திறக்கும் முன்,

“அய்யோ பெல், நீங்க ரெண்டுப்பேரும் மாம்ஸும் அண்ணாவும் பொண்ணு பார்க்க வந்தப்ப, அவங்கக்கிட்ட தனியா பேசனும்னு சொன்னப்ப, நாங்க தானே உங்களுக்கு ஹெல்ப் செஞ்சோம்… இப்போ எங்களுக்கு நீங்க தானே ஹெல்புக்கு வரனும்.. திடிர்னு ஏதாவது முக்கியமா அவளுக்கு பேச வேண்டியிருக்கும், நீங்களே இப்படி எங்களை தடுக்கலாமா?”

“அய்யோ கலை அத்தை வந்து அருள் எங்கன்னு கேட்டா நான் என்ன சொல்றது?”

“எப்படியாவது சமாளி ஃப்ளவர், என்றப்படி இலக்கியாவும் அருளும் பால்கனி சுவரை எகிறி குதித்து சென்றுவிட்டார்கள்.

வாசலில் வாழை மர பந்தல், வீட்டு முகப்பில் வண்ண விளக்குகள், மொட்டை மாடியில் பந்தல், என்று அந்த இல்லம் விசேஷத்திற்கு தயாராக இருந்ததை ஏக்கத்தோடு பார்த்தப்படி இரண்டு வீடு தள்ளி சுடரொளி நின்றிருந்தாள். இந்த நேரம் அந்த வீட்டிற்குள் சென்றால் அவளுக்கு அழைப்பு எப்படி இருக்கும் என்று தெரியும்.. ஆனாலும் மகிழ் வேந்தனிடம் அவள் பேசியாக வேண்டும்.. என்ன செய்வது என்று குழம்பியப்படி அங்கே அவள் நின்றிருந்தாள்.

ருள்மொழியும் இலக்கியாவும் வீட்டிற்கு பின்னாலிருந்த தோட்டத்திற்கு வந்த பின், ஒரு ஐந்து நிமிடம் கழித்து தான் மகியும் அறிவும் அங்கு வந்தனர், தனியாக பேச வேண்டும் என்று சொன்னதால், இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு, கொஞ்சம் தள்ளி வந்த அறிவு இலக்கியாவிடம் ஊர் விஷயங்களை பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தான்.

மகியிடம் பேச அருள் ஆர்வத்தோடு இருக்க, என்னவோ அவளை நேருக்கு நேராய் சந்திக்க முடியாமல் அவஸ்தையோடு அவள் முன்னே நின்றிருந்தான் மகி..

“என்ன அருள்?? என்ன பேசனும்?” என்று அவளைப் பார்த்து அவன் கேட்க,

“எனக்கு ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் விடை தெரியனும் மகி. அதுக்கு தான் இப்போ நான் இவ்வளவு அவசரமா உன்கிட்ட பேசனும்னு சொன்னேன்..” என்று அவள் பதில் கூறினாள்.

“என்ன தெரிஞ்சுக்கனும்?” அவன் அடுத்த கேள்வியை கேட்க, அவள் பதில் சொல்லும் முன்.. அவனின் அலைபேசி ஒலியெழுப்பியது.. யார் அழைப்பது என்று அவன் அலைபேசியை பார்க்க, அதில் சுடர் என்ற பெயர் மிளிர்ந்தது.

உறவு வளரும்...

Episode # 02

Episode # 04

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.