(Reading time: 20 - 40 minutes)

அவரது ஸ்பரிசமோ பாராட்டோ யாழினியின் மனதில் பதியவே இல்லை. ஏதோ சம்பிரதாயத்திற்கு புன்னகைத்து வைத்தாள். சற்றுமுன் தமிழின்  பார்வையில் கட்டுண்டவள், இப்போதுதான் அவன் வேஸ்ட்டி சட்டையில் அமர்க்கள அழகோடு வந்திருப்பத்தை கவனித்தாள். இருவரின் பார்வையும் தயக்கமின்றி பின்னி பினைவதை முதலில் சுதாரித்து கவனித்தவன் புகழ்தான். தோழிக்கும், அவளது மனம் கவர்ந்தவனுக்கு தனிமை கொடுக்க விரும்பி, மனோன்மணியிடம் பேச்சு கொடுத்து அர்ச்சனை சீட்டு வாங்க துணைவரும்படி அவரை அழைத்துக் கொண்டு சென்றான். யாழினி- தமிழுக்கு தனிமை கொடுக்கவே அவன் இப்படி பேச்சு கொடுக்கிறான் என்பதை உணர்ந்த மனோன்மணியின் மனதில் புகழ் உயர்ந்திருந்தான்.

“ தமிழ்.. ரொம்ப அழகா இருக்கீங்க” காதல் நிரம்பிய குரலில் சொன்னாள் யாழினி. காதலோ,மயக்கமோ, ஊடலோ, கோபமோ எந்த மாதிரி உணர்வாக இருந்தாலும் அதை தமிழிடம் தயங்காமல் உரைப்பது யாழினியின் இயல்பு. “இவன் என்னவன், எனக்கானவன்”என்ற எண்ணத்தோடு அவள் காட்டிடும் காதலில் ஒருவித ஆளுமை இருக்கும். அந்த ஆளுமைக்கு விரும்பியே அடிபணிந்தான் தமிழ்.

“நீயும்தான்,, ரொம்ப அழகா இருக்க சோடாபுட்டி” என்றான் தமிழ்.

“சோடாபுட்டியா? திருந்தவே மாட்டீங்கப்பா நீங்க..கருவாயா” என்று அவனுக்கு புது பட்டப்பெயரை வைத்தாள் யாழினி.

“ஆஹான்.. நான் கருவாயனா இருக்கும்போதே இப்படி மயங்குறியே.. இன்னும்கொஞ்சம் அழகா இருந்தா என்ன பண்ணுவியோ?” என்று தமிழ் கேட்கவும், அவனை செல்லமாக முறைத்தாள் யாழினி.

“அதென்ன இன்னும் கொஞ்சம் அழகு? நீங்க இப்போவே எவ்வளவு அழகு தெரியுமா?” என்று கேட்க அவளை நெருங்கி விழியோடு விழி கலந்தான் தமிழ்.

“ஹ்ம்ம்.. உன் கண்ணுக்குள்ள தெரியுது நான் எவ்வளவு அழகுன்னு!” என்று சொன்னவன், யாழினி சுதாரிக்கும் முன்னரே அவளதுநெற்றியில் திலகிமிட்டிருந்தான். யாழினி ஆச்சர்யமும் காதலும்பொங்கி பார்த்திட அந்த இனிய சூழ்நிலையை தமிழின் செல்ஃபோன் சிணுங்கியே கலைத்தது.

“இரு வரேன்”என்று அவன் அங்கிருந்து நகரவும், “யாழீ என் பர்ஸ் கொடும்மா”என்று புகழ் வரவும் சரியாக இருந்தது.

“என்ன ரொமான்ஸ் ஜாஸ்தியா இருக்கே..”என்றவன் அவளை நெற்றியில் இருந்த குங்குமத்தை பார்த்தான்.

“ஓஹோ .. குங்குமமே வெச்சாச்சா?” என்று நக்கலாக அவன் கேட்கவும்

“எமகாதகன்..எல்லாத்தையும் கண்டுப்பிடிச்சிடுறான்”என்று மனதில் அவனை செல்லமாக வருத்தெடுத்தாள் யாழினி.

“ஒரு நிமிஷம் கண்ணை மூடுடா”என்ற புகழ் யாழினியின் நெற்றியில் லேசாய் ஒழுங்கில்லாமை பரவியிருந்த குங்குமத்தை ஊதி விட்டான்.

“சொல்லு உன் ஹீரோகிட்ட, குங்குமம் வைக்கிறது மட்டும் கடமை இல்லை..இப்படி கண்ணுல அது பட்டு கண்கலங்காமல் பார்த்துக்குறதும் அவரோட கடமைதான் “ என்று புகழ் சொல்லவும் அவன் மார்பில் செல்லமாய் குத்தினாள் யாழினி.

“மனசுல உனக்கு கௌதம் மேனன்னு நினைப்பா? விதவிதமா வசனம் பேசுற ? கொன்னுடுவேன்”என்று மிரட்டினாள்.

“ஹா ஹா.. ரிலாக்ஸ் மை டியர் தோழி”என்று புகழ் யாழினியின் தோளில் கை போட்டுக்கொள்ள, அவன் குங்குமத்தை ஓதியபோது அவர்களை கண்ட சுதாகரன் தொடர்ந்து நடந்த காட்சிகளை தூரத்தில் இருந்து பார்த்து தப்பாகவே புரிந்துகொண்டார்.

“என்ன சார்,உங்க வருங்கால மருமகளை காட்டுறென்னு சொன்னீங்களே” என்று ஆர்வமாக கோவில் நிர்வாகி கேட்க, யாழினியை காட்டிடும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, “கூட்டத்தில் எங்க இருக்காங்கனு நானும் தேடிட்டு இருக்கேன்..வரேன்”என்று நகர்ந்துவிட்டார். ஏற்கனவே சலனம் ஏற்பட்டிருந்த சுதாகரனின் மனதினை இன்னும் குழப்பவதுபோல தான் நடந்தது அடுத்த சம்பவம்.

“டேய் சுதா.. சுதா டேய்..” என்று உரிமையாய் ஒருவரின் குரல்கேட்க,குரல் வந்த திசையில் திரும்பினார் சுதாகரன்.

“டேய் சரவணா.. நீ இங்க என்ன பண்ணுற?”

“ம்ம் கோவில் தூணுக்கு பெயிண்ட் அடிக்க வந்தேன்.. கோவிலுக்கு எதுக்குடா வருவாங்க..”

“ஹா ஹா.. தனியாவா வந்த?”

“இல்லடா என் மனைவியும் பொண்ணும் இப்போதான் கார்கு போனாங்க.. நானும் கிளம்பலாம்னு திரும்பினேன் உனை பார்த்துட்டேன்..”

“ஓ..”

“நாம் பேசின விஷயம் என்னடா ஆச்சு?தமிழ்ட்ட பேசிட்டியா? எப்போ பொண்ணு பார்க்க வர?”

“..”

“நம்ம காலம் மாதிரி இல்லடா இப்போ.. பிள்ளைங்க முதல்ல சந்திச்சு பேசட்டும்..நீ தமிழ்ட்ட பேசிட்டு சொல்லு, நான் என் பொண்ணை தமிழ்ட்ட பேச சொல்லுறேன்” என்றார் சரவணன்.

ஒரு பக்கம், பால்யவயது தோழனின் நட்பு, இன்னொரு பக்கம் யாழினி-புகழின் நட்பு என இருவேறு சூழ்நிலைகள் சுதாகரனின் மனதில் மாற்றியிருக்க,

“கூடிய சீக்கிரமே நல்ல செய்தி சொல்லுறேன்டா” என்று தீர்க்கமாய் வாக்கு கொடுத்தார் சுதாகரன்.

அதற்கு அப்பறம் என்ன நடந்திருக்கும்னு யூகிச்சிருப்பீங்க நண்பர்களே. அடுத்து நடந்தவைகளும், இனி நடக்க இருப்பவையும் கோர்வையாக்கி, “தமிழுக்கு புகழ் என்று பேர்” நாவலின் இறுதி அத்தியாயத்தோடு அடுத்த வாரம் சந்திக்கிறேன். நன்றி

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்!

Episode # 24

Episode # 26

{kunena_discuss:994}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.