(Reading time: 20 - 40 minutes)

இதோ அவரை துரத்தும் அந்நாட்கள், அவரின் அகக் கண்களில்!

மூன்று ஆண்டுங்களுக்கு முன்!

யாழினி- தமிழ் இருவரின் காதலுக்கு நேரடியாகவே எதிர்ப்பு தெரிவித்த சுதாகரன், யாழினி மோகனின் மகள் என்று அறிந்ததும்கொஞ்சம் இறங்கி வந்தார். மோகன், மனோன்மணிக்கு தெரிந்த நண்பர் என்ற ரீதியில் தான் அவர்களது குடும்பத்திற்கு அறிமுகமாகி இருந்தார்.

என்னத்தான் மனோன்மணியே ஒரு ஆசிரியர் என்றாலும், அவரிடம் கல்வி கற்கும்போது, “’தன் அன்னைத்தானே”என்ற அலட்சியம் தமிழுக்கு வந்துவிடுமோ என்று ஐயம் மனோவுக்கு எழுந்தது. சுதாகரன் எப்போதுமே பிசினஸ் பிசினஸ் என்று இருந்ததினால், தமிழ் மோகனின் கண்காணிப்பில் படிப்பதும் வளர்வதுமாக இருந்தான். ஆனால் எல்லாம் கொஞ்சம் காலம் தான்! அதன்பின் தொழிலின் காரணமாக குடும்பத்தினரோடு இடம் பெயர்ந்துவிட்டார் சுதாகரன்.

மோகனின் கண்டிப்பான கறார் சுபாவத்தை அறிந்திருந்த சுதாகருக்கு அவரின் வளர்ப்பின்மீதும் நம்பிக்கை இருக்கத்தான் செய்தது. எனினும் இந்த திருமண விஷயத்தில் மட்டும் ஏனோ அவரால் தீர்க்கமாக அந்த முடிவினை பற்றிக்கொள்ளமுடியால் இருந்தது.

அன்று கார்த்திகை தீபத்திருநாள்! சுதாகரன்- மனோன்மணி, தமிழ் மூவரும் அருகில் உள்ள கோவிலுக்கு செல்வது வழக்கம். இந்த முறை யாழினியும் வந்தால் நன்றாக இருக்குமென தமிழ் பிரியப்பட, மனோன்மணியே உரிமையோடு அவளை கோவிலுக்கு அழைத்துவருமாறு மோகனிடம் கேட்டார்.

“என்னால வர முடியாதும்மா.. நான் யாழினியை புகழோடு அனுப்பி வைக்கிறேன்”என்றிருந்தார் மோகன்.

கார்த்திகேயனின் சந்நிதானம் ! தீப ஒளியில் மிளிர்ந்த கோவிலின் அழகில் மனம் குளிர்ந்து போனான் புகழ்.

“என்னடா வாயை பிளந்துட்டு அப்படியே நிற்கிற? உள்ள போக வேணாமா?”

“கோவிலே எப்போதும் அழகுதான்..அதுவும் இந்த மாதிரி ஸ்பெஷல் நாளில் எல்லாம் இன்னும் அழகா இருக்கு பார்த்தியா யாழீ?”என்றான் அவன்.

“ஹூம்கும்.. உன் கண்ணுக்கு அழகு தெரியுது..என் கண்ணுக்கு கூட்டம்தான் தெரியுது. இந்த கூட்டத்துல புடவையை கட்டிகிட்டு நான் எப்படித்தான் சமாளிக்க போறேனோ தெரியல.. ஆனாலும் நீயும் தமிழும் சேர்ந்து பண்ணுற அநியாயங்கள் இருக்கே.. தாங்க முடியல டா”என்று பொரிந்தாள் யாழினி.

“என்னமோ உனக்கு பிடிக்காத மாதிரி பேசுற? எப்படியும் உன்னை இந்த கெட்டப்ல பார்த்துட்டு தமிழ் வாயை பிளக்க போறாரு.. நீ அதை மனசுக்குள்ள ரசிக்க போற.. கேடி.. உன்னப்பத்தி எனக்குதெரியாதா டீ?”என்று அவள் தலையில் குட்டு வைத்தான் புகழ்.

“அதுமட்டுமில்ல, தமிழோட அப்பா அம்மாவும் வந்துருக்காங்க.. அவங்க முன்னாடி சுடிதார்ல நின்னா நாங்க ஒன்னும் சொல்லமாட்டோம்..ஆனா நீதான் ஒரு வாரத்துக்கு ஃபீல் பண்ணுவ” என்று புகழ் சொல்லவும், அவனைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டாள் யாழினி.

“அப்பா டேய்.. ஏதோ தப்பி தவறி புலம்பிட்டேண்டா.. நீ என்னைப்பத்தி எல்லாம் தெரிஞ்சவந்தான்.. ஒத்துக்குறேன்.. வேணும்னா சொல்லு காதை அப்படியே கழட்டி தந்துடுறேன்.. பட் தயவு செஞ்சு இப்படி ரத்தம் வர அளவுக்கு கடிக்காத”என்று யாழினி அழுது விடுபவள் போல கூறினாள்.

அதைக் கேட்ட புகழோ கொஞ்சமு அசராமல், “ஐ..இது நல்லா இருக்கே.. காதை கழட்டி கொடுடீ” என்றான். அழுதுவிடுவதுதான் மேலென்பது போலயாழினி முகத்தை சுருக்க,

“சரி சரி.. அழாத வா போலாம்”என்று அவள் கையைப் பிடித்துகொண்டு உள்ளே நுழைந்தான் புகழ். புகழும் யாழினியும் கை கோர்த்து வரும் காட்சியை முதலில் கண்டவர் சுதாகரன். இவ்வளவு கூட்ட்த்தின் மத்தில் இப்படி கைக்கோர்த்து நடந்து வருவதை ஆட்செபித்தது அவரின் மனம். ஆனால் அதை எடுத்து சொல்லும் இடத்தில் அவர் இல்லை. கோவில் நிர்வாகி சுதாகரனிடம் பேச வேண்டும் என்று சொல்லியிருந்ததால் அவர்களை அப்பறமாய் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணிவிட்டு அவர் ஆஃபிஸ் அறைக்கு சென்றார். (ஒரு ஐந்து நிமிடம் பொறுமையாய் கவனித்திருந்தால், புகழ் தான் பற்றி வந்த யாழினியின் கரங்களை அழகாய் தமிழின் கரத்தோடு இணைத்த காட்சியை பார்த்திருக்கலாம். ஆனால் விதியின் ஆட்டத்தை அத்தனை எளிதாக நிறுத்திவிட முடியுமா?)

புகழ் சொன்னது முற்றிலும் உண்மைதான் என்று நிரூபிக்கும் வண்ணம் யாழினியை கண்டதும் அசந்துபோய்  நின்றான் தமிழ். “புடவை கட்டினா மட்டும் சின்ன பெண்ணாய் தெரிபவர்கள் யுவதிகளாய் காட்சியளிக்கிறார்களோ?”என்று தமிழ் சிலாகித்து கொள்ள அவனின் உள்மனமோ கேலி செய்தது. “அட பாருடா.,அப்படி எத்தனை பேரை நீ புடவையில் கவனிச்சிருக்க ?”என்று கேட்க, புடவைக்கு இயல்பிலேயே பெண்ணை அப்சரசாய் காட்டும் திறன் உண்டா என்ற ஆராய்ச்சியில் இறங்கினான் தமிழ். தன்மீது படரும் அவனது பார்வையில் லஜ்ஜையுற்றாள் யாழினி.

“நான் சொன்னது சரிதானே?”என்பது போல புருவத்தை உயர்த்தி சிரித்தான் புகழ். தமிழை முந்திக்கொண்டு யாழினியின் அருகில் வந்தார் மனோன்மணி.

“வாடா செல்லம்.. புடவையில் எவ்வளோ அழகா இருக்க தெரியுமா?”என்று அவளை கன்னத்தை வழித்து நெற்றியில் முத்தமிட்டார் அவர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.