(Reading time: 8 - 16 minutes)

றையிலிருந்து சிவந்த கண்களுடன் வெளிவந்திட்ட மகனை சற்றே கூர்மையாக பார்த்திட்டார் கல்யாணி…

“கௌஷிக்… கண்ணா…. என்னாச்சுப்பா?...”

பாசத்துடன் வினவியவாறு அவர் மகனின் அருகில் வர, அவனோ ஒன்றுமில்லை என்றான்…

எதுவோ இருக்கிறது என்று அறிந்து கொண்டவர், மகனை சாப்பிட அழைத்திட, பசியில்லை என்றான அவன்…

ஆச்சரியமும் கேள்வியுமாய் அவர் மகனைப் பார்த்திட,

“அம்மா… நான் உங்ககிட்ட…” என ஆரம்பித்தவனை பேச விடாது கணேஷ் வந்து நின்றான் அவனின் முன்…

“வாப்பா கணேஷ்… சாப்பிடுறீயா?...” கல்யாணி வந்தவனிடத்தில் கேட்க,

“இல்லம்மா… நான் சாப்பிட்டுட்டு தான் வந்தேன்… சாருக்கு இப்போ ஒரு அர்ஜன்ட் மீட்டிங்க் இருக்கு… அதான் நினைவுப்படுத்தி சாரை கூப்பிட்டு போகலாம்னு வந்தேன்…” என்றான் அவனும்…

“சரிம்மா… நான் கிளம்புறேன்… நீங்க சாப்பிடுங்க… நான் கொஞ்ச நேரம் கழிச்சு போன் பண்ணி சங்கரன் அண்ணன் கிட்ட கேட்பேன்… சரியா?...”

மகனின் பாசம் அவருக்குப் புரிய, “சரிப்பா… நான் சாப்பிடுறேன்… நீ போயிட்டு வா…” என மகனிடத்தில் கூறிவிட்டு, மகனின் பின்னேயே செல்ல இருந்த கணேஷிடம், கௌஷிக்கிற்கான சாப்பாடை கொடுத்து விட்டார் அவர்…

இரண்டு நாட்களுக்குப் பிறகு,

கௌஷிக் தன் அறையில் அமர்ந்து மும்பை பங்குச்சந்தை நிலவரங்களை பார்த்துக்கொண்டிருக்க, கொஞ்சம் சத்தத்தை அதிகப்படுத்த முனைந்தவன், சட்டென விரல் தவறி அடுத்த சேனலை ஆன் செய்துவிட,

சட்டென சேனலை மாற்றும் எண்ணத்தை ஸ்க்ரீனில் தெரிந்த உருவத்தில் தொலைத்திட்டான் அவன்…

“இவள்…….”

வார்த்தைகள் தன்னை மீறி அவனிடமிருந்து உதித்திட,

ஸ்க்ரீனில் அழகாய் அவள் அங்கே சிரிக்க, இங்கே அவனுக்கும் ஆச்சரியத்தினையும் தாண்டி புன்னகை மிளிர்ந்தது அக்கணமே…

“சொல்லுங்க மேம்… இந்த குறுகிய காலக்கட்டத்துல இவ்வளவு பெரிய உயரம்… எதிர்ப்பார்த்தீங்களா?..”

அவளிடம் கேள்விக்கேட்டு கொண்டிருந்தாள் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவள்…

“நிச்சயமா இல்லை… ஆனா விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தா எட்ட முடியாத உயரத்தையும் எட்டுவதில் ஆச்சரியமில்லைன்னு நம்புறேன்…”

புன்னகையுடன் தெளிவாக அவள் பதில் கூற, கௌஷிக்கின் புருவங்களோ உயர்ந்து சபாஷ் என்றது…

“உங்களோட எதிர்கால திட்டம் என்ன?...”

“இப்போ யூஜில பைனல் இயர்… அப்புறம் எம்.பி.ஏ படிக்கணும்…. சக்ஸஸ்புல் பிசினெஸ் வுமன் ஆகணும்…”

அவளின் அந்த பதிலில் கௌஷிக்கின் கண்கள் அவளிடத்திலேயே இருந்தது… “யூ வில் பீ…” என அவன் இதழ்கள் தானாகவே உச்சரிக்க, அவனுக்கே சிரிப்பு வந்திட்டது ஒருநிமிடம்…

விரல்களால் தலைமுடியை கோதி சிரித்தவன், அடுத்து நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்…

“வெல்… ஸ்டடீஸ் ஒருபுறம் இருக்குறப்போ, இப்படியே தொடர்ந்து உங்க வெற்றியை நோக்கி பயணிக்கிறதா?... இல்ல?..” என அந்த தொகுப்பாளினி நிறுத்திட

“உங்களோட கேள்வி எனக்கு புரியுது… என்னோட இந்த பயணத்தை நான் என்னைக்கும் நிறுத்திட மாட்டேன்… அதுல நான் வெற்றியை மட்டும் சந்திப்பேனான்னு எனக்குத் தெரியாது… தோல்வியும் இருந்தாலும் அதுல இருந்து மீண்டு வருவேன்னு முழு நம்பிக்கை இருக்கு… அதோட என்னோட எம்.பி.ஏ கனவும் கண்டிப்பா நிறைவேத்துவேன்…” என்றாள் அவள் அழுத்தத்துடன்…

“கிரேட்….”

ஒரே நேரத்தில் தொகுப்பாளினியும், கௌஷிக்கும் கூறிட, சாருவோ சிரித்தாள்….

“அப்புறம் உங்க பேரோட ரகசியத்தை இப்போ நீங்க சொல்லியே ஆகணும்…”

“கண்டிப்பா…”

என அவளும் சிரித்திட, இங்கே கௌஷிக்கிற்கோ அவளது பெயரை தெரிந்து கொள்ளும் ஆர்வம் எழுந்தது மலையென அவனுள்…

“சிரிச்சே தப்பிக்கலாம்னு பார்க்குறீங்களா?...”

அந்த தொகுப்பாளினி விடாமல் கேட்டிட,

“பெரிய ரகசியம் எல்லாம் ஒன்னும் இல்லங்க… ஒரு ராகத்தோட பேரு…” என்றாள் அவள்…

“வாவ்…..” என கேட்டவள் குதித்திட,

இங்கே கௌஷிக்கின் கண்களோ சுருங்கியது…

“இவ்வளவு நேரம் இங்க வந்து உங்க டைம் ஸ்பெண்ட் பண்ணினதுக்கு தேங்க்ஸ் மேம்… கடைசியா ஒரே ஒரு ஸ்மால் ரெக்வஸ்ட்… என்னோட ரெக்வஸ்ட் மட்டுமில்ல… உங்க ஃபேன்ஸ் எல்லாரோட ரெக்வஸ்டும் அதுதான்… சோ எங்களுக்காக ப்ளீஸ்?...”

கேள்வி கேட்டவள் தயங்கியபடி நிறுத்த,

கௌஷிக்கோ அவள் எந்த துறையைச் சார்ந்தவளாக இருப்பாள் என்ற ஆர்வத்தில், அவள் சொல்லப்போவதையே கவனித்தவாறு இருக்க,

“ஆ……… ஆ…. ஆ…. நி…….ச… க……ரி…” என ஆரம்பித்ததைக் கண்டு ஸ்தம்பித்து நின்றான் கௌஷிக்…

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.