(Reading time: 10 - 19 minutes)

“அவங்களையும் யாருன்னு கண்டுபிடிக்க முடியலை... அவ எந்த ஏரியால இருக்கான்னு தெரிஞ்சா டக்குன்னு கண்டுபிடிச்சுடலாம்....”

“அவ புகார் கொடுத்த போலீஸ் ஸ்டேஷன்ல கேக்க வேண்டியதுதானே.... ஒரு வேளை அந்த ஏரியா ஆளுங்களா இருந்தா அவங்களுக்கு தெரிஞ்சிருக்குமே...”

“கேட்டுட்டேன் தலைவா.... நான் அவளைப் பார்த்த உடனேயே என்னோட போன்ல போட்டோ எடுத்துட்டேன்... அதைப் பார்த்துட்டு அந்த போலீஸ்காரர் தெரியாதுன்னு சொல்லிட்டாரு....”

“போட்டோவைக் காட்டு.... எனக்குத் தெரிஞ்சவங்களா பார்க்கிறேன்.....”,நரேஷ் கேட்க, லோகேஷ் தன் அலைபேசியில் ராணி, மற்றும் அவளுடன் வந்த இருவரின் புகைப்படத்தையும் காண்பித்தான்.  நரேஷும் வித வித ஆங்கிளில் வைத்து அவர்கள் தனக்குத் தெரிந்தவர்களா என்று யோசித்தான்....

“என்ன தலைவா இதுல இருக்கறவனுங்களைத் தெரியுதா....”

“பார்த்தா மாதிரி தெரியலை... ஆனா ராணி அப்படியே அன்னைக்கு எப்படி இருந்தாளோ அதே மாதிரி தளதளன்னு இருக்கா....”

“தலைவா உங்க தலை மேல கத்தி தொங்கிட்டு இருக்கும்போது கூட தளதளப்பை பத்தி பேசறீங்க பார்த்தீங்களா.... உங்களை என்ன சொல்ல....”

“ஐயோ ஞாபகப்படுத்தாத... இப்போ என்னய்யா பண்றது... இன்னைக்கு ரெண்டு மணிக்கு எனக்கு சங்குதானா... வெறும் கிசுகிசுன்னு சொன்னா ஏன் முன்னாடியே சொல்லலைன்னு என் பொண்டாட்டி மூஞ்சி மேலையே குத்துவாளே...”

“தலைவா எனக்கு ஒரு ஐடியா தோணுது... பேசாம போய் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிடு... அப்போ இன்னைக்கு வாய்தா வாங்கிடலாம்... எப்படியும் இன்னும் ரெண்டு, மூணு வாரம் கழிச்சுதான் அடுத்த முறை கூப்பிடுவாங்க.... அதுக்குள்ள அவங்களை நம்ம வழிக்கு கொண்டு வந்துடலாம்....”

“யோவ் நான் என் பொண்டாட்டிக்கு தெரியக்கூடாதுன்னு சொல்றேன்.... நீ ஹாஸ்பிட்டல் போக சொல்ற...”

“என்னாத் தலைவா இவ்ளோ பெரிய ஸ்டாரா இருக்க.... உனக்குன்னு பொய் சொல்ல ஒரு டாக்டர் கூடவா இல்லை... அவரை விட்டு நெஞ்சு வலி, மண்டை வலின்னு ஏதோ ஒரு வலியை சொல்ல சொல்லு....”

“அந்த மாதிரி டாக்டர் எல்லாம் நிறைய பேரைத் தெரியும்... ஆனா என் பொண்டாட்டி எனக்கு உடம்பு சரியில்லைன்னா உடனே அவங்க குடும்ப டாக்டர்க்கிட்ட மட்டும்தான் காட்டணும்ன்னு சொல்லுவா... அந்தாள் மொதல்ல என் மாமனார்க்கு போன் பண்ணிட்டுதான் என்னைய உள்ளயே கூப்பிடுவான்.....”

“ஓ அப்போ இங்க மட்டும் எப்படி உன்  பொண்டாட்டி உன்னைத் தனியா அனுப்பறாங்க... உன் லீலை எல்லாம் இங்கதானே நடக்குது....”

“கல்யாணம் ஆன புதுசுல அவளும் கூட வந்துட்டுதான் இருந்தா... நான் இங்க வர்றதுக்கு சொல்ற காரணம் அடுத்து நடிக்கப் போற படத்தோட கேரக்டர்க்கு ஏத்தா மாதிரி என்னை தயார் படுத்திக்கன்னு.... அதுக்கேத்தா மாதிரி எப்பவும் ரூம் உள்ள போய் கதவை சாத்திட்டு முழு நாளும் உள்ளவே இருப்பேன்... ரெண்டு, மூணு முறை அவ வந்துட்டு போர் அடிச்சுப் போய் வர்றதை நிறுத்திட்டா....”

“ஹ்ம்ம் செம்ம ஐடியா தலைவரே... சரி உன்னோட அடுத்த ஷூட்டிங் எப்போ....”

“அது இன்னும் கொஞ்ச மாசம் கழிச்சுத்தான்....”

“சரி, நீ இப்போ கொஞ்சம் வலி பொறுத்துப்பியா சொல்லு....”

“டேய் என்னடா செய்யப்போற....”,அவன் நரேஷ் கேட்டுக் கொண்டிருக்கும்போதே அவனின் கையை லேசாக பிடித்த லோகேஷ் ஒரே முறுக்காக முருக்க அது மளுக் என்ற சத்தத்துடன் ஒடிந்தது.... நரேஷின் குரல் உச்சஸ்தாயியில் கேட்டது....

“மன்னிச்சுடு தலைவா... இப்போ என்ன பண்ணற... அப்படியே மெதுவா நடந்து மாடிப்படி இறங்கு.... ஒரு நாலு படி முன்னாடி உன்னைத் தள்ளி விடறேன்... அப்படியே உருண்டு விழு... அதுல கை உடைஞ்சு போச்சுன்னு சொல்லிடலாம்...”, லோகேஷ் சொல்ல அவனை தமிழில் உள்ள  அத்தனை நல்ல வார்த்தையிலும் திட்டியபடியே லோகேஷின் நாடகத்திற்கு ஒத்துழைத்தான் நரேஷ்...

நரேஷ் கடைசி படியை அடைந்தவுடன் லோகேஷ் கூச்சல் போட, நரேஷ் வீட்டின் காவலாளி ஓடி வந்தான்.... அவனும், லோகேஷுமாக நரேஷை தூக்கி காரில் உட்கார வைக்க, லோகேஷ் நரேஷை அவனின் குடும்ப மருத்துவமனைக்கு அழைத்து சென்று அட்மிட் செய்தான்..... நரேஷிற்கு கை எலும்பு முறிந்த இடத்தில் சிறிய ஆபரேஷன் செய்து ப்ளேட் பொறுத்தவேண்டும் என்று மருத்துவர் சொல்ல, அவன் அடுத்த ஒரு இரண்டு, மூன்று நாட்களுக்கு மருத்துவமனையில் இருக்க வேண்டி வந்தது... இதையே காரணமாக வைத்து அவனின் வக்கீல் அவனுக்கு வாய்தா வாங்க அவர்களின் எண்ணப்படியே அவனின் வழக்கின் தேதி அடுத்த ஒரு மாதத்தின் பின் அறிவிக்கப்பட்டது....

தே புதன்கிழமை காலை பாரதியும், சாரங்கனும் நாராயணின் வழக்கு விஷயமாக கோர்டிற்கு வர காலை சுமார் பதினோரு மணி அளவில் அவர்களின் வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று நீதிபதியால் அறிவிக்கப்பட்டதால் இருவரும் வெளியில் வர, நாராயணன் சிரித்தபடியே அவர்களை அணுகினார்.....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.