(Reading time: 7 - 13 minutes)

“சார்… அனிதா தான் மாடலிங்க்னு முதல்லயே எனக்கு தெரிஞ்ச மாதிரி, அவளுக்கும் தெரிஞ்சிருக்கும்னு நான் நினைச்சேன் சார்… ஆனா அவளுக்கு நான் தான் டைரக்டர்னு தெரிய வந்ததும், கடைசி நேரத்துல, அவ கோச்சிட்டுப்போய், இப்போ ஷூட்டிங்க் நின்னு… சே… எல்லாமே என்னால தான் சார்…”

விக்கி கௌஷிக்கிடம் தன் நிலையை வெளிப்படுத்த, கௌஷிக்கிற்கு விக்கியின் மனநிலை புரிந்தது…

“இதுல உங்க தப்பு எதுவுமே இல்ல விக்கி… ஜஸ்ட் ரிலாக்ஸ்….”

“முடியலை சார்… எத்தனையோ நாட்கள் இந்த மாதிரி வாய்ப்புக்காக தான் காத்திருந்தேன்… இப்போ அந்த வாய்ப்பு கை நழுவி போகுறப்போ, தாங்க முடியலை சார்…”

“எதுவுமே கை நழுவி போகலை விக்கி… ப்ளீஸ் பீ ஸ்டிராங்க்….”

“இன்னும் இரண்டு நாள்ல எடிட்டிங்க் எல்லாம் பார்த்து அட் அ முடிச்சி குடுக்குறதா சுரேஷ் சார் கிட்ட சொல்லியிருக்குறேன் சார்… இப்போ என்ன சார் நான் பண்ணுறது?...”

“யூ டோண்ட் வொரி விக்கி… நான் சுரேஷ் சார் கிட்ட பேசுறேன்…” என கௌஷிக் போனை எடுத்து சுரேஷிடம் பேச,

“ஆல்ரெடி நிறைய டிலே ஆகிட்டு கௌஷிக்… இன்னும் டூ த்ரீ டே-ல நம்ம ப்ராண்ட் அட் மார்க்கெட்டுக்கு வந்தாகணும் கௌஷிக்….” என்றார் அவரும் நிலைமையை விளக்கி…

“ஓகே… தென் அரேஞ்ச் சம் அதர் மாடல்…”

கௌஷிக் சுரேஷிடம் இலகுவாக சொல்லிட, அது இந்நேரத்தில் எளிதல்ல என்று எடுத்துரைத்தார் சுரேஷ்…

“சார்… என்னால தேவை இல்லாம உங்களுக்குள்ள ப்ராப்ளம் வேண்டாம் சார்… என்னால நினைச்ச நேரத்துல அட் அ எடுக்க முடியலைன்னு சொல்லி நானே விலகிக்கிறேன் சார்...”

“டேய்… விக்கி என்னடா இது?...”

தீபன் இடையிட்டு பேச, அவனை வேகமாக தடுத்தவன், “இல்லடா உடனே ஒரு மாடல் அரேஞ்ச் பண்ணுறதும் ரொம்பவே கஷ்டம்… ஏன்னா அனிதா என்னைப் பத்தி சொல்லி யாரையும் வரவிடமாட்டா… சோ இரண்டே நாள்ல அட் அ மார்க்கெட்டுக்கு கொண்டு வர்றது இம்பாசிபில்…” என உறுதியாக கூறிட,

“இட்ஸ் பாசிபில்…” என்றான் கௌஷிக்…

“எப்படி சார்?....” விக்கி கேள்வியுடன் கேட்டிட,

“உங்க கான்செப்ட் என்ன விக்கி?...” என கேட்டான் கௌஷிக்…

“லவ் பிட்வீன் தி கபில்…”

“ஓகே… தென் கேன் யூ சேஞ்ச் தி கான்செப்ட்?...”

கௌஷிக் கேட்டிட, சில மணித்துளிகள் எடுத்துக்கொண்ட விக்கி, “யெஸ் சார்… ஐ கேன்…” என கூறிட,

“என்னோடது ஜஸ்ட் ஒரு சஜெஸன் தான்… லவ் பிட்வீன் ப்ரெண்ட்ஸ் ஆர் ப்ரதர்ஸ் வைக்க முடியுமா?...”

கௌஷிக் சொல்லவருவது புரிந்திட “ஷூயர் சார்…” என்ற விக்கி சற்று நேரத்திலேயே, “சார்… அப்போ அந்த சாங்க்?...” என இழுத்திட,

கௌஷிக் அதனைப் பற்றிய யோசிக்காது கூறிடுவானா என்ன?... அவன் மனதிலும் அந்த எண்ணம் இருக்கத்தான் செய்தது…

“விக்கி நானே நடிக்கிறேன்… நீ அட் ரெடி பண்ணு….”

தீபன் சட்டென கூறிட, கௌஷிக்கின் விழிகளில் லேசான வியப்பு தென்பட, விக்கியோ என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தான் அமைதியாக…

“என்னடா சொல்லுற?...” என இழுத்த விக்கியும் தீபனின் உறுதி தெரிந்து சரி என்றான்…

பின், “நீ ஒருத்தன் தானடா இருக்குற?... உன்னை மட்டும் வச்சு எப்படி?...” என விக்கி யோசித்திட,

“நீ கௌஷிக் சார் சொன்ன அட் கான்செப்ட் ரெடி பண்ணு… நான் நம்ம ப்ரெண்ட்ஸ் கிட்ட விஷயத்தை சொல்லி வர சொல்லுறேன் அட் ல நடிக்கிறதுக்கு… சரியா… நான் இப்போ வந்திடுறேன்…”

தீபன் சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர விக்கியோ அடுத்து என்ன நடக்கும் என்ற யோசனையில் மூழ்க, கௌஷிக்கின் மனமோ சிந்தனையில் ஆழ்ந்தது… 

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 06

Episode # 08

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.