(Reading time: 9 - 18 minutes)

“கரெக்ட்..”

“இப்பவாவது ஒத்துக்கிட்டிங்களே..”

“நீ லூசுனு தெரியும், அதுக்குதான் கரெக்ட்னு சொன்னேன்..”

“என்ன..” என கோபமாய் முறைத்தவளை கண்டவன், “உன் கோபத்தை அப்புறம் பார்க்கலாம்.. முதலில் லெட்டரை படி..” என்றான்.. ஏனெனில் அந்த லெட்டரில் இருக்கும் வாசகத்தை அவள் படிக்கும் போது அதை அவளே தன்னிடம் சொல்வதை போல் உணர்ந்தான்.. அதைக்கேட்கும் போது அவன் உடல் சிலிர்த்தது..  எனவே அவளை படிக்க அனுமதித்தான்.. ஆனால் அவனுக்கு தெரியாத ஒன்று, அம்மு தன் மனதில் இருப்பதைதான் இப்போது அவன்முன் சொல்லிக்கொண்டு இருக்கிறாள் என்பது.. அமிர்தாவுக்கு விக்ரமின் பிறந்தநாள் அன்று தன் மனதில் இருக்கும் காதலை அவனுக்கு உணர்த்த விரும்பினாள்.. அதை தன் வாயால் கூறவும் நினைத்தாள்.. அதை தான் இப்போது செய்து கொண்டு இருக்கிறாள் மறைமுகமாக.. அமிர்தா லெட்டரை மறுபடியும் படிக்க ஆரம்பித்தாள்..

விஷ் யூ மெனிமோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே மை ஸ்வீட்ஹார்ட்.. ஐ மிஸ் யூ டா செல்லம்.. உம்மா.. என்று படித்தவள் அதோடு நிறுத்தினாள்.., அவளது இதயம் படபடவென அடித்துக்கொண்டது.. அதற்குமேல் படிக்கமுடியாது என தோன்றியது. எனவே,

“உங்களுக்கு வெட்கம் இருக்கோ இல்லையோ, எனக்கு இருக்கு.. ரொம்ப பெர்சனல்லா இருக்கு நான் படிக்க மாட்டேனப்பா..” என கூறிவிட்டு, லெட்டரை அவன் கையில் திணித்தவள் அங்கிருந்து ஓடினாள் வெட்கப்பட்டு..

விக்ரமுக்கும் அம்மு படித்ததை கேட்டதும் இதயதுடிப்பு அதிகரித்தது.. அவன் லெட்டரை பார்த்தான்.. பின் படிக்க ஆரம்பித்தான்..

சரி டார்லிங்..டேக்கேர் ஆப் யுவர்செல்ப்.. இன்னிக்கு நீங்க எனக்கு பிடிச்ச ரெட் கலர் சர்ட் தான் போடனும்.. பர்த்டே பேபிக்கு என் கிப்ட் பிடிக்காதுனு தெரியும்.. அதனால இன்னிக்கு முதன்முதலாக உங்ககிட்ட போனில் பேச போறேன்.. சோ வெயிட் பார் மை கால் டியர் லவ்..

      பை யுவர்ஸ்

        மதிவிக்ரம்..

என கடிதம் முடித்திருந்ததை கண்டான்.. மதிவிக்ரம் என அந்த பெயரைப் படித்தவன், யாராக இருக்கும் என யோசித்தான்.. ஆனால் இதெல்லாம் அம்முவின் வேலை என உள்ளுணர்வு தோன்றவும், அதை கண்டுபிடிக்க எண்ணினான்.. எனவே மித்ராவை பார்த்தான்..

அவ்வளவு நேரமும் அங்கு நடந்து கொண்டிருந்ததை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் மித்ரா., தன் அண்ணா தன்னை பார்க்கவும்,

“என்கிட்ட கூட சொல்லலையில்ல அண்ணா.. யாருணா அந்த பொண்ணு?..”

“அப்படி எல்லாம் இல்லடா.. நான் நிலாவை தான் லவ் பண்றேனு உனக்கே தெரியும், இது யாருனே தெரியல, எனக்கு என்னவோ இது நிலாவோட வேலையா இருக்குமோனு தோனுது.. இது அவ கையெழுத்தானு நீதான் சொல்லனும்” என்றவன் கடிதத்தை மித்ராவிடம் தர, அதை வாங்கி பார்த்தவள் ஆச்சரியப்பட்டாள், அது அம்முவின் கையெழுத்தே இல்லை.. பின் அவனிடம் கூறினாள்..

விக்ரமும் இது எதிர்பார்த்ததுதான்.. அவனுக்கு தெரியும் அம்மு அவ்வளவு முட்டாள் இல்லை.. தன் கைப்பட இந்த லெட்டரை எழுத.. எனவே அடுத்தகட்டமாக தன் அறைக்குள் சென்று ரெட் கலர் சர்ட் அணிந்தவன் நேராக அம்முவின் அறைக்குள் நுழைந்தான்..

அம்முவோ மகிழ்ச்சியுடன் தன் கட்டிலில் அமர்ந்திருந்தாள்.. கதவு தட்டும் சத்தம் கேட்டு திரும்பியவள் அங்கு விக்ரம் தனக்கு பிடித்த கலரில் சர்ட் அணிந்திருப்பதை கண்டவளுக்கு உடனடியாய் புரிந்து போனது.. விக்ரமும் அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தான்..  

“என்னாச்சு உங்களுக்கு? ப்ளூ சர்ட் தானே போட்டிருந்திங்க.. இந்த கலர் உங்களுக்கு நல்லாவே இல்லை” என அம்மு கூறியதைக்கேட்டு திகைத்தவன் அவளிடம்,

“அப்போ உனக்கு ரெட் கலர் பிடிக்காதா?..”

“ஆமா.. பிடிக்காது..”

“அதிசயமாய் இருக்கே.. ரெட் கலர் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா..”

“ஏன் இருக்கமாட்டாங்களா.. எனக்கு பிடிக்காதுபா..” என்றவளை கூர்ந்து நோக்கியவன்,

“சரி, எனக்கு  பர்த்டே கிப்ட் இல்லையா”

“எதுவும் வாங்கலயே. உங்களுக்கு என்ன பிடிக்கும்னு எனக்கு தெரியாதே..”

“சரி.. விடு.. ஈவினிங் கேக் கட் பண்ணும் போது நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன்.. நீ அதை செய்யனும்”

“என்ன அது..? என்ன செய்யனும்?..”

“வெயிட் பண்ணேன். சரி ஈவினிங் பார்க்கலாம் பை..” என்று அங்கிருந்து சென்றான்.. அமிர்தா தான் ஓரளவு சமாளித்து விட்டதாக தோன்றியது.. விக்ரமுக்கும் ஒன்றும் புரியவில்லை.. அந்த லெட்டரில் இருந்தபடி கால் வரும்போது பேசிக்கொள்ளலாம் என நினைத்து தன் அறையினுள் நுழைந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.