(Reading time: 8 - 16 minutes)

சிறிய தலை அசைப்புடன் ககன் அவரின் பின்னே செல்ல... டாலி புன்னகையுடன் சமையல் அறைக்குள் சென்றாள்.. ககனின் தந்தை, அவரின் பார்வையின் அர்த்தத்தை புரிந்துக்கொண்டு இவர்களை அமரவைத்து அவர்களை பற்றி கேட்காமல், பொதுவாக பேச தொடங்க... உதய் மட்டும் சற்று சத்தமாக “ஹே பிசாசு... எனக்கு ஒரு ஸ்ட்ராங் காபி....” என்றான்.

அதற்கு பதிலாக டாலி சாதுவான ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு செல்ல... அதன் பின்னே உள்ள விஷமத்தை புரிந்துக்கொண்டவன்... “எக்ஸ்க்யூஸ் மீ லேடீஸ்... ஒ சாரி.. கேர்ள்ஸ்... சாரி அகைன்.. அங்கிள்...”என்று வாய்க்கு வந்ததை கூறிவிட்டு டாலியின் பின்னால் ஓடினான்.

ககனின் தாயின்.. ஒரு வார்த்தையிலும் ஒரு பார்வையிலும் உள்ள அர்த்தத்தை மற்றவர்கள் அனைவரும் புரிந்துக்கொண்டு செயல்பட்டதை, பிரமிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தானர் சகோதரிகள் இருவரும்... இந்த மாதிரி ஒரு ஆளுமையுடன்கூடிய அமைதியான.. கலகலப்பான பெண்மணியை அவர்கள் இதுவரை பார்த்ததில்லை..

ரண்டு நிமிடம்(!!) ஆகியும் வெளிவராத... அந்த பெண்ணின் பின்னாலேயே ஓடிய... உதய்யை நினைத்து காவ்யாவுக்கு கோபம் தான் வந்தது ஏன் என்று புரியாமலே... ‘அப்போ அந்த பிசாசு நான் இல்லையா...!!’ என்ற ஆறுதலுடனும் ஏமாற்றத்துடனும்.!

“ஆன்ட்டி சூப்பர் அங்கிள்....”என்று தாரா பேசிய முதல் வார்த்தையிலேயே... தாரா அவளாக இருப்பின் ‘பிக் யெஸ்’ தான் என்று முடிவு எடுத்துவிட்டார் ககனின் தந்தை.

“ஹ்ம்ம்.... சௌமி இஸ் ஆல்வேஸ் ஸ்வீட்....”என்று ரசனையுடன் கூறினார், அவர்.

“ஆன்டி நேம் சௌம்யா வா அங்கிள்.?” என்று காவ்யா வினவ...

“ஹ்ம்ம்.. ஆமாம் ஆமாம்.. ஹா ஹா ஹா... ஆனா... ஹா.. ஹா.. ஹா....”என்று அவர் பொங்கி பொங்கி சிரித்தார்.

அந்த சிரிப்பிற்கும் ‘சௌம்யா’ என்கிற பேருக்கும் சம்பந்தம் இருக்கும் போல என்று நினைத்து காவ்யா விட்டுவிட... தாராவிற்கு அது என்ன என்று தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அதிகம் ஆகியது... பிறகு பொறுமையாக கேட்டுக்கொள்ளலாம் என்று அவள் அப்போதைக்கு டீலில் விட்டாள்.

உதய் கைகளில் காபி கப்புடனும், டாலி ஒரு டிரே நிறைய ஜூஸ் கிளாசுடனும் சிரித்துக்கொண்டே வந்தார்கள்.

டாலி நீட்டிய கிளாசில்.. சில்லென்ற இளநீருடன்... சிறிய அளவாக வெட்டப்பட்ட இளம் தேங்காய் துண்டுகள் மிதந்துகொண்டிருக்க... ஒரு கண்ணாடி கிண்ணியில் ஸ்ட்ராபெர்ரிகள் இருந்தன...

“வாவ்... இம்பிரெசிவ் ப்ரஹ்மி...” என்றபடி காவ்யா ஆசையாக வாங்கிக்கொள்ள... தாராவும் புன்னகையுடன் நன்றி கூறிவிட்டு வாங்கிக்கொண்டாள். 

“ஸ்ட்ராபெர்ரி கொஞ்சம் புளிக்குமே.. இது ஸ்வீட்டாக இருக்கு...”என்று ரொம்ப முக்கியமான சந்தேகத்தை காவ்யா முன் வைக்க...

“எங்க வீட்டு செப் தான் ஏதேதோ பண்ணி வைப்பார்... இது ஹனில சோக் பண்ணின பெர்ரிஸ்...”என்று டாலி பெருமையாக கூறிவிட்டு உதய்யை கிண்டலான பார்வை பார்த்தாள்...

“இப்போ எதுக்கு இந்த லுக்கு... “என்று உதய் புரியாமல் கேட்க...

“லுக்கா... அப்படிலாம் ஒன்னும் இல்லையே....”என்று மீண்டும் கிண்டலாக கூறிவிட்டு அவளின் மாமாவின் தோள்களில் சாய்ந்தவாறு அமர்ந்தாள். தோள்களை குளுக்கிகொண்டு காப்பி மீது கவனம் சலுத்தத் தொடங்கினான் உதய்.

தாரா, மாமா மருமகளுடன் ‘ப்ரஹ்மி...’ என்பதின் விளக்கத்துக்காக பேசத்தொடங்க..  உதய்யின் மீது காவ்யாவின் கவனம் தானாக சென்றது... இரண்டு முறை சந்தித்தும் கவனிக்காத அவனின் முகவடிவை இப்பொழுது ஆராய ஆரம்பித்தாள், காவ்யா.

றைக்குள் நுழைந்த அம்மாவும் மகனும் அருகருகே நாற்காலியில் அமர்ந்துக்கொண்டனர்...

“இப்போ சொல்லு ககி... நீ என்ன நினைக்கற... உன் மனசுல என்ன ஓடிட்டு இருக்கு.. எனக்கு என்னவோ இந்த பொண்ண உன் மனசுல நினைச்சிட்டு தான் டாலிய பார்த்தப்போ தயங்கினியோன்னு தோணுது... “என்று இழுக்க...

“ஆமாம் அம்மா... முதல் முதல்ல தாராவோட முகத்த பார்க்காமலே அவளோட குரல் தான் என்னை ரொம்ப ஈர்த்துது ம்மா.. அப்போலேர்ந்து அவ நினைப்பு வந்து வந்து போச்சு... அப்பறம் அவளை பார்க்கவே முடில........”என்று அன்று தொடங்கிய அவனின் மனப் போராட்டங்களையும்... இன்று எடுக்க முடிந்த அவனின் முடிவையும் விளக்கமாக கூறினான்...

“வெரிகுட்... நீ ஒரு முடிவுக்கு வந்தது நல்ல விஷயம்... தாராவோட பதில் என்ன..? அவ கிட்ட பேசின தான... ஓகே சொல்லிட்டாளா.... என்று யோசனையுடன் கேட்க...

“அது வந்து....... இன்னும் அவ கிட்ட பேசல ம்மா... ஆனா அவளுக்கும் இஷ்டம் தான்னு எனக்கு தெரியும்... அவ கண்ணே சொல்லிச்சு ம்மா....” என்று வெட்கத்துடன் திணறலாக சொன்னான், ககன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.