(Reading time: 12 - 24 minutes)

வசந்தும் அமேலியாவும் அவ்விடத்தை அடைந்தனர். அவர்களை ஒரு முறை நோக்கிய ஜான், "என் காரை எடுத்துட்டு போய் நாசம் பண்ணது மட்டுமில்லாம ஜாலியா கடல்ல குளிச்சிட்டு வேற வருதுங்க" என்று பொருமினான். அவர்கள் இருவரின் ஆடைகளும் நனைந்திருந்ததை ஜெஸிகாவும் கவனித்தாள்.

"ஜான், கார் ரெடி ஆயிடுச்சா?"

வசந்தை எரித்துவிடுவதை போல் முறைத்தான் ஜான்.  

"நான் வேணும்னா சரி செஞ்சு கொடுக்கட்டுமா? எனக்கு மெக்கானிசம் தெரியும்"

"எனக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறியா?"

"அதுல என்ன சந்தேகம்?"

"அப்போ இந்த இடத்துல நிக்காத. மறுபடியும் போய் ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க"

"அமேலியா கடல்ல தவறுதலா விழுந்துட்டா. காப்பாத்தி கொண்டு வந்திருக்கேண்டா"

"மெக்கானிசம் தான் தெரியும்னு சொன்ன, ஹீரோயிசமும் தெரிஞ்சு வச்சிருக்க"

"இது நல்லவர்களுக்கு இருக்கிற உணர்வு"

"இரண்டு பேரும் நடுக் கடல்ல கொஞ்ச தூரம் வாக்கிங் போயிட்டு வர வேண்டியது தான?"

"காமெடி நல்லாவே இருக்கு. ரொம்ப டயர்டா இருக்குடா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்.....என்னடா வீடு இப்படி இருக்கு?"

"இப்படியாச்சும் இருக்கே"

"புயல் உன் வாழ்க்கையையே புரட்டி போட்டிருக்கு"

"நண்பர்களும் தான்"

"நாங்க உன் நல்லதுக்கு தான் யோசிப்போம்"

"காரை பாத்தாலே தெரியுது. மெக்கானிக்கு கால் பண்ணனும். என்னுடைய செல்போனை கார்ல வச்சிருந்தேன். பாத்தியா?"

"என்கிட்ட தாண்டா இருக்கு. உன் காரை டேமேஜ் பண்ணாலும். செல்போனுக்கு எந்த சேதாரமும் இல்லை" என்று பாண்ட் பாக்கெட்டில் கைவிட்டு செல்போனை எடுத்த வசந்த், "சாரிடா, கடல்ல இறங்கினேன்ல, போன் நனைஞ்சு போயிடுச்சு" என்று கொடுத்தான்.

"நன்றி". அந்த போனை வாங்கிய ஜான் வசந்தை பார்த்துக்கொண்டே போனை வீசி எறிந்தான்.

"நீ என் மேல கோபப்பட்டாலும் நான் உனக்கு ஒரு நல்லதை செஞ்சிருக்கேன்"

"விஷயத்தை சொல்லு. அதுக்கு அப்புறம் யாருக்கு நல்லதுன்னு நான் சொல்றேன்"

"உன்னை விட்டு பிரிஞ்சு போக முடியாம ஜெஸிகா அங்க உக்காந்துட்டு இருக்கா பாரு"

ஜான் சலித்துக்கொண்டான். 

"என்ன?"

"இங்கிருந்து பஸ் ஸ்டாண்டுக்கு போறதுக்கு கார் வேணும். அதுக்காக வேற வழியில்லாம உக்காந்துட்டு இருக்கா. ஒண்ணு தெரியுமா வசந்த், காருக்கு கிடைக்குற மரியாதை கூட எனக்கில்லை"

"உன் கார் சரியாகாம இருக்கிறது தான் நல்லது"

"ஏன்?"

"ஜெஸிகா இங்கிருந்து போக முடியாதே. அவ இங்கயே இருந்தா அவ கூட மனசு விட்டு பேச உனக்கு வாய்ப்பு கிடைக்குமே"

"ஐயா சாமி, என் ஆசை என்ன தெரியுமா?"

"சொல்லு"

"இந்த காரை எப்படியாச்சும் ரெடி பண்ணி உங்க எல்லாரையும் இங்கிருந்து கூட்டிட்டு போயி கடாசிட்டு வரணும்"

"அடப்பாவி!"

"உங்களை வீட்டுக்குள்ளே அனுமதிச்சு, நான் தான் நடு தெருவுல நிக்குறேன்"

வசந்த் அமைதியாக அங்கிருந்து சென்றான். ஜான் காரை சரி செய்வதில் மும்முரமானான். "கடக்முடக் டிங் டிங்" என்ற சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. இன்ஜினில் தலையை விட்டு டியூப் ஒன்று பிடுங்கியபோது, ஆயில் அவன் முகத்தில் பீய்ச்சி அடித்தது.  

"அட கன்றாவி! நீ கூட என்னை மதிக்க மாட்டுறியா. உனக்கு எத்தனை லிட்டர் பெட்ரோல் ஊத்தியிருப்பேன்" என்று புலம்பினான் ஜான்.

வசந்தும் ஜெஸிகாவும் அவனை கண்டுகொள்ளாமல் அமைதியாக இருந்தார்கள். அமேலியா மட்டும் அவன் மேல் பரிதாபம் கொண்டு, சுற்றும் முற்றும் பார்த்தவள் துண்டு ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள்.

"ஈராக்ல இருந்து வந்த ஜீவன் பரிதாபப்படுது. இவங்களும் இருக்காங்களே" என்று நொந்தபடி மீண்டும் காரை பழுது பார்த்து ஒரு வழியாக இஞ்ஜினை உசுப்பினான்.   

எதைப் பற்றியோ சிந்தித்துக்கொண்டிருந்த ஜெஸிகா ஜானை நோக்கினாள். அவள் இதழில் புன்னகை அரும்பியது. "அப்பாடா! எப்படியோ ரிப்பேர் செஞ்சிட்டான்" என்றபடி அவனை நோக்கி சென்றாள். வண்டி ஸ்டார்ட் ஆனது ஜானிற்கே சற்று மலைப்பாகத்தான் இருந்தது.

"ஜான் கிளம்பலாமா?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.