Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Chillzee KiMo TEN (Tamil - English - Novel) Contest 2019


1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகா - 5.0 out of 5 based on 4 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகா

Aathibanin kaadhali

பால்கனியில் நின்று கொண்டிருந்த ஆதிரா தன் கடந்த கால நினைவினால் அவள் கண்களிலிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.

பால்கனியில் வீசிய குளிர் காற்றினால் அவளின் உடலும் மெல்ல நடுங்க ஆரம்பித்தது.

எதேச்சையாக கீழே உள்ள முற்றத்திற்கு வந்த பாட்டி ஆதிரா பால்கனியில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகி அவசர அவசரமாக மாடியேறி அவளிடம் வந்தார்

”என்னம்மா என்னாச்சி ஏன் இங்க நிக்கற”

என கேட்க அவள் அழுது கொண்டே பாட்டியை கட்டிக்கொண்டாள் ஆதிரா அழுவது எதற்கு என புரியாமல் பாட்டி மனதுக்குள் பேரனை திட்டிக்கொண்டார்.

”இந்த ஆதிபன் எங்க போனான். புது பொண்ணு இப்படி அழுகுற மாதிரி என்னத்த செஞ்சான். இவளை தனியா விட்டுட்டு என்னத்த ரூம்ல செய்றான். கல்யாணம் செய்துகிட்டா மட்டும் போதாது கடைசி வரைக்கும் பொண்டாட்டியை கண் கலங்காம பாதுகாப்பா வைச்சிக்கனும் இப்படி முதல் நாளே அழ வைச்சிட்டானே அவனை இன்னிக்கு ஒரு வழி பண்றேன்”

என நினைத்துக்கொண்டே பாட்டி ஆதிராவின் தலையை வருடிவிட்டு அவள் முகத்தை தூக்கி தன் முந்தானையால் அவளின் கண்ணீரை துடைத்தார்.

”ஏன்மா இப்படி அழற என்னாச்சி உனக்கு”

”எனக்கு இங்க இருக்க பிடிக்கலை பாட்டி நான் அப்பாகிட்ட போகனும்” என அவள் சொன்னதும் உடனே பாட்டிக்கு தன் தந்தையின் நினைவினால் ஆதிரா அழுகிறாள் என புரிந்துவிட்டது.

”உங்கப்பாகிட்டதானே போகனும் அடுத்தவாரம் இரண்டு பேருமா மறு வீட்டு விருந்துக்கு போகலாம். இன்னும் இங்க நிறைய சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் மீதியிருக்கும்மா அவசரமா கல்யாணம் செஞ்சதால முழுசா எதையும் செய்யமுடியல 1 வாரம் பொறுத்துக்கம்மா”

”இல்லை பாட்டி எனக்கு இங்க இருக்க பிடிக்கலை”

அவள் சொல்லிவிட்டு மேலும் அழ ஆரம்பிக்கவும் பாட்டியே அவளை அழைத்துக்கொண்டு ஆதிபன் அறைக்கு சென்றார்.

அங்கு ஆதிபன் குப்புற படுத்து உறங்குவதை பார்த்த பாட்டி கோபத்துடன் அவன் முதுகில் 2 அடி ஓங்கி அடித்தார்.

திடீரென விழுந்த அடியால் திடுக்கென எழுந்த ஆதிபன் ரூமில் பாட்டி கோபமாக இருப்பதையும் அருகில் ஆதிரா அழுது கொண்டிருப்பதையும் கண்டு சட்டென புரிந்துக் கொண்டான்.

இந்த ஆதிரா ஏதோ ஒண்ணு சொல்லி பாட்டியை கூட்டிட்டு வந்திருக்கா என எண்ணியவன் ஆதிராவை கோபமாக முறைக்கவும் அதைப் பார்த்த ஆதிரா மீண்டும் ஓவென அழ ஆரம்பிக்கவும் அதைக் கண்ட பாட்டி உடனே ரூம் கதவை சாத்திவிட்டு கோபமாக ஆதிபனிடம்

”டேய் எதுக்குடா ஆதிராவைப் பார்த்து முறைக்கற”

”பாட்டி என்னாச்சி எதுக்கு இப்ப என்னை அடிச்சீங்க”

”அடிச்சேனா உன்னை கொன்னே போட்டிருக்கனும்”

“நான் என்ன செஞ்சேன்”

”கட்டின பொண்டாட்டி அங்க பால்கனியில நின்னு அழுதுகிட்டு இருக்கா. அவளை இந்த நிலையில பார்க்கறவங்க நம்ம குடும்பத்தை பத்தி என்ன நினைப்பாங்க. அவளை கவனிக்கறத விட்டுட்டு இங்க நீ சுகமா தூங்கறியா”

”பாட்டி அவளாவது நேத்து தூங்கினா நான் நேத்து முழுக்க தூங்கலையே பாட்டி. கண்ணு அதுவா இழுத்துகிட்டு போச்சி என்னை என்ன செய்ய சொல்றீங்க”

”அதுக்காக ஆதிரா பக்கத்தில இருக்காளா இல்லையான்னு கூடவா பார்க்கமாட்ட”

”பாட்டி நான் பார்த்தேன். அவள் அவங்கப்பாவை நினைச்சி அழுதுகிட்டு இருந்தா. எவ்ளோதான் நானும் சமாதானப்படுத்தறது கொஞ்ச நேரம் வெளிய காத்தாட இருந்தா சரியாயிடும்னு நினைச்சி நான்தான் வெளிய அனுப்பினேன் தப்பா”

”பாவம்டா தாயில்லா பொண்ணு அவள் அங்க அழறத பார்த்ததும் என்னுடைய இதயத்துடிப்பே நின்னுப்போற மாதிரி ஆயிடுச்சி தெரியுமா”

”சரி இப்ப என்னை என்னதான் செய்ய சொல்றீங்க பாட்டி”

”நீ ரூம்க்கு வரும் போது நான் என்ன சொன்னேன்”

”என்ன சொன்னீங்க மறந்து போச்சி”

”மறந்து போச்சா அடப்பாவி 12.30 வரைக்கும் நல்ல நேரம் இருக்கு அதுக்குள்ள சாந்தி முகூர்த்தம் முடிக்க சொல்லி சொன்னேனா இல்லையா”

என பாட்டி சொன்னதும் பொய்யாக அழுது கொண்டிருந்த ஆதிரா சட்டென அழுகையை நிறுத்தி அதிர்ச்சியோடு பாட்டியையும் ஆதிபனையும் மாறி மாறி பார்த்தாள்.

ஆதிபனோ அவள் அதிர்ந்து போய் இருப்பதை கண்டு பாட்டியிடம்

”அதுக்கென்ன செய்ய முடியும் பாட்டி. காதலிக்கிறேன்னு அவள்தான் முதல்ல சொன்னா. ஆனா இன்னிக்கி காலையில அவளோட அப்பாவை பார்த்ததும் என்னை பிடிக்கலைன்னு இப்ப சொல்றா பாட்டி நான் என்ன செய்யட்டும்”

அவன் சொன்னதும் பாட்டி ஆதிராவை பார்த்து

Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகாAdharvJo 2018-02-24 15:38
:eek: uncle ninga ippadi anti herovaga martingala facepalm hero sir ninga ena ippadi silent speculator irukinga ethavdhu master plan vachi irukingalo :Q: adhira kula irundha singam enga pochi :Q: indha 5 athaiponnunga imsaiya irukanga pa :P pavam adhira but uncles r angry on her ivanga anga lona ena agumn therindhu kola waiting.... Indha aunties adhira solluradhai misunderstand seithu kolvadhu super :dance: :thnkx: for this interesting update.
Reply | Reply with quote | Quote
# aadharvjosasi 2018-03-02 11:17
நன்றி
ஆதிபனின் குனம் அமைதியானதா இல்லையா ஆதிராவால் வரப்போகும பிரச்சனையை அவன் சரிசெய்வானா என அடுத்து வரும் எபிகளில் படித்து பாருங்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகாChillzee Team 2018-02-23 04:14
Panchayathu kooduma?
Athira enna seiyya poraanga?

Therinthu kolla kaathirukkirom Sasirekha.
Reply | Reply with quote | Quote
# சில்சி டீம்sasi 2018-03-02 11:19
நன்றி
கண்டிப்பாக பஞ்சாயத்து கூடும். பஞ்சாயத்தில் நடப்பதை சுவாரஸ்மாக எழுதியுள்ளேன் அடுத்து வரும் வாரங்கள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 16 - சசிரேகாmadhumathi9 2018-02-22 20:32
facepalm intha aadhiraavirkku entha nerathil enna seivathu endru theriyaatha? Oh my god enna panna poraanga endru kavalaiyaa irukku. :clap: super epi.waiting to read more. (y)
Reply | Reply with quote | Quote
# மதுமதிsasi 2018-03-02 11:14
நன்றி
நீங்கள் கவலைப்படும் அளவிற்கு எதுவும் நடக்காது நடப்பவை நன்மையிலேயே முடியும் பொருத்திருநது படியுங்கள்
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top