(Reading time: 7 - 14 minutes)

வள் விழவும், அவனும் கலைவாணியும் பதறிபடி அவளுக்கு என்ன ஏது என்று பார்த்திட, கலைவாணி தன் மகளான மருமகளை மடிதாங்கிட, ப்ரசனின் தந்தை உள்ளிருந்து நீர் கொண்டு வந்து கொடுத்தார் மகனிடம்…

அவள் எழாமல் போகவே, காரின் ஓரத்தில் நடப்பதை வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்த சந்தா விரைந்து வந்தாள் அவர்களின் அருகே…

அவள் வரவும், கலைவாணி அவளைப் பார்க்க அவளும் அவரைப் பார்த்திட்டாள்…

“அம்மா… பதட்டப்படாதீங்கம்மா…” என்றவளின் குரலும், அவளது முகமும், அவள் அழுகிறாள் என சொல்லாமல் சொல்லிட,

ஜாக்குலினின் கைப்பிடித்து பார்த்தவள், கலைவாணியைப் பார்த்து, “உங்க மகன் உயிர் இந்த பொண்ணு வயித்துல கருவா இருக்கும்மா…” எனக்கூறிட,

கலைவாணிக்கோ அந்த தருணத்தை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை…

சட்டென சந்தாவினை அணைத்து மளமளவென்று அழுது தீர்த்துவிட்டார் கலைவாணி…

“அழாதீங்கம்மா… இந்த பொண்ணை உடனடியா ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போறது நல்லது… அவங்க மயக்கத்துல இருந்து இன்னும் எழுந்திருக்கலை… அதிர்ச்சி தந்த மயக்கம் தான்ம்மா இது… உடனடியா ஹாஸ்பிட்டல் போகலாம்மா… ப்ளீஸ்…”

அவள் கெஞ்சியவளாய் கூறிட, அவள் சொல்வதில் இருந்த உண்மை கலைவாணிக்கு புரிந்திட,

“ப்ரசன்… ஜாக்குலினை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போகலாம்ப்பா…” என்றார் வேகமாய்…

உடனேயே அவளை அவன் தூக்கி காரினை நோக்கிப் போக, அதற்குள் காருக்குள் அமர்ந்திருந்தார் கலைவாணி…

மருமகளை அவர் மடிதாங்கிக்கொள்ள, அவரின் அருகில் அமர்ந்தாள் சந்தா…

ப்ரசன் காரினை ஓட்ட, அவனின் அருகில் அமர்ந்து கொண்டார் அவனது தந்தை…

மருத்துவமனையில், ஜாக்குலினின் கர்ப்பத்தை உறுதி செய்த டாக்டர், மிகவும் கவனத்துடன் அவளைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறிட, அதே மருத்துவமனையில் போலீஸ் விசாரணைக்குள்ளிருந்த ரஞ்சித்தின் உடல் அனைத்து ஃபார்மாலிட்டிஸும் முடிந்து ப்ரசனின் வசம் தரப்பட, உயிரில்லாத அவன் உடலையும், அவன் கொடுத்த உயிரையும் கனத்த இதயத்தோடு வீட்டிற்கு அழைத்து வந்தான் ப்ரசன்…

வீடு முழுவதும் சொந்தங்களும், உறவினர்களும் கதறி அழுதிட, ரித்தி வந்து ப்ரசனைக் கட்டிக்கொண்டு அழுதாள்…

“ப்ரசண்ணா… ரஞ்ஜூ நம்மளை விட்டு….” சொல்லமுடியாது அவள் அழுதிட, அவள் தலையை ஆதரவாக கோதிவிட்டவன் அவளுக்கு தெரியாமல் அழுதான் வெகுவாய்…

யாருக்கும் தெரியாமல் அழுதவன் தன் விழிகளை துடைத்தபோது, அங்கு ஜாக்குலின் அருகே அவளுக்கு ஆதரவாய் அமர்ந்திருந்த சந்தா தெரிந்திட, அவளருகில் போனான் அவன்…

“சாரிங்க… உங்களை ரொம்ப நேரம் இங்க காக்க வச்சிட்டேன்… வாங்க உங்களை வீட்டுல விட்டுடுறேன்…”

அவன் அந்நிலைமையிலும் அவளை அழைத்துச் செல்கிறேன் என்று கூற, அவனை திடுக்கென நிமிர்ந்து பார்த்திட்டாள் அவள்…

“பரவாயில்லைங்க… நான் இருக்குறேன்… வீட்டுக்கு போன் போட்டு சொல்லிட்டேன்… நான் அப்புறமா போறேன்… ஜாக்குலின் பாவம் அழுதுட்டே இருக்குறாங்க… நான் அவங்க கூட இருக்குறேன்…”

“இல்லங்க… நீங்க சொன்னதே போதும்… உங்களுக்கும் உடம்பு அவ்வளவு சரியா இல்லை… இந்த நிலைமையில இப்படி சூழ்நிலையில நீங்க இருந்தா, மேலும் உங்க உடம்பு பாதிக்கும்…”

“பரவாயில்லை… எனக்கு இப்போ ஒன்னும் இல்லை… நான் நல்லா தான் இருக்குறேன்… ஜாக்குலின் கூட நான் இருக்குறேன்…”

மகனும் சந்தாவும் பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த கலைவாணி, சந்தாவின் அருகே வந்து, அவள் தோள் மீது கைவைத்தார்…

“நீ ஜாக்குலினை முன்ன பின்ன பார்த்தது கூட கிடையாது… ஆனா அவளை இந்த நிலைமையில விட்டுட்டு போக கூட நீ நினைக்கலை… இதுக்கெல்லாம் உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போறேன்னு தெரியலைம்மா…”

அவளின் கைப்பிடித்து அவர் அழுதிட, “அவ சின்னப்பொண்ணும்மா… வாழ வேண்டிய வயசில வாழ்க்கையை இழந்துட்டு இருக்குறா… அதுவுமில்லாம, கணவனை இழந்த வலி எப்படி இருக்கும்னு….” மேலே சொல்லிட முடியாது அவள் விம்ம,

தன்னை சமாளித்துக்கொண்டு நிமிர்ந்தவள், “அவ நிலைமையும் என் நிலைமையும் வேற வேற இல்லம்மா…” என கூறிட,

சட்டென்று அவளை அப்போது தான் முழுமையாக பார்த்திட்டார் கலைவாணி…

அவளின் வெள்ளைப்புடவை, அணிகலன் எதுவுமே அணிந்திடாத அவள் தேகம்… அனைத்திற்கும் மேல் அவளது வாடிய முகம்… அனைத்தும் அவருக்கு ஒரு நொடிப்பொழுதில் அவளது நிலையினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்திட,

“அம்மாடி….” என தன்னை மீறி அவளை அணைத்துக்கொண்டு மௌனமாக கண்ணீர் வடித்தார் கலைவாணி…

எழில் பூக்கும்...!

Episode # 18

Episode # 20

{kunena_discuss:1122}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.