(Reading time: 19 - 37 minutes)

ஏன் அப்படின்னு கேட்டதுக்கு, உன் கல்யாணத்துலே உன்ன விட எனக்கு முக்கியம் கொடுப்பாங்க.. நீ சொல்லாட்டாலும், உன் சொந்தகாரனுங்க எவனாவது ஒன்னு உன்னை மட்டம் தட்ட இத சொல்லுவானுங்க.. இல்லையா என்னை உசத்த இத செய்வாங்க.. எதுக்கு இந்த வம்பு எல்லாம்..? நீ நல்லபடியா கல்யாணம் செஞ்சு , உன் குடும்பத்தோடு சந்தோஷமா இருன்னு வாழ்த்தினார். அப்ப்றேபட்ட மனுஷன் அவரு..

இது மட்டும் இல்லை நான் உங்ககிட்ட இந்த கல்யாணத்துக்கு பேச காரணம்.. இதை விடவும் இருக்கு என்றவர்,

‘எங்க கல்யாணம் முடிஞ்சு ரொம்ப நாள் குழந்தை இல்லாம இருந்தப்போ, காரையார் கிட்டே ஒரு கோவிலிலே போய் வேண்டிக்க சொல்லி சிலர் சொன்னங்க.. அங்கே போனப்போ திரும்பவும் நான் ஐயாவ பார்த்தேன்..

என்ன ஐயா இந்த பக்கம்?

என் ரெண்டு மகனுங்களுக்கும் கல்யாணம் ஆகி வருஷம் ஆகிட்டு.. ஆனாக்க ரெண்டு மருமவளும் உண்டாகலை.. ரொம்ப வருத்தபடுறாங்க.. இங்கன அந்த கோவில் பத்தி சொன்னாங்க.. அவங்க கிட்டே சொன்னா, பாவம் விசனபடுவாங்க.. அதான் நானே வந்து கும்பிட்டு போலாம்னு வந்தேன்.. நம்ம குடும்பத்துக்கு யார் வேண்டினாலும் அந்த கடவுள் கொடுப்பார்.. ஆமா நீ எங்கே இந்த பக்கம்?’

“எங்களுக்கும் இன்னும் குழந்தை இல்லீங்க ஐயா..? என் பொஞ்சாதி பாவம் அப்பிராணி..ஊர்லே சொல்லுறத எல்லாம் கேட்டுட்டு நிக்குது.. அதான் நம்ம பங்குக்கு நாமளும் ஏதும் பன்னுவோமே வந்தேங்க ஐயா’”

“சரி.. சரி.. விசனபடாதே.. சீக்கிரம் அந்த குமரன் உனக்கு வழி கொடுப்பான்.” என்று கூறினார்.

நாங்க காரையார்லேர்ந்து வெளிலே வர, படகு சவாரி தான். அப்படி வந்துட்டு இருக்கும் போது படகு கவிழ்ந்துச்சு.. இருந்த எல்லோரும் ஓரளவு நீச்சல் அடிச்சு வெளியில் வந்துட்டோம்.. ஆனா ஐயா மட்டும் வரல.. என்னனு பார்த்தா அவருக்கு மயக்கம் போட்டுருக்கு.. நான் உடனே மறுபடி குதிச்சு அவர காப்பாத்தி கரையில் சேர்த்தேன்.. உடனே சில முதலுதவி செய்யவும், கண் விழிச்ச்சவர்,

“ரொம்ப நன்றியா.. என் உசுரை காப்பதினதுக்காக கூட இல்லை.. இந்த கோவில் பிரசாதம் கொண்டு கொடுத்தா என் மருமவளுங்க குறை தீரும்.. அதுக்காக என் உசுரு எனக்கு வேணும்.. “

“ஐயா.. உங்களுக்கு ரொம்ப பெரிய மனசுங்க.. எனக்கு பொண்ணு பொறந்தா உங்க வீட்டுலே வந்து வாழனும். அது பேராசைதான்  ஆனாலும் எனக்கு அது ஆசைங்க...” அப்படின்னு சொன்னேன்..

“எம்லே அப்படி சொல்லுத.”

“உங்க அந்தஸ்து , கவுரவம், மரியாதை எல்லாம் எங்க..? பஞ்சம் பொழைக்க வந்த என் தகுதி எங்க?”

“மனுஷ உசுருக்கு மிஞ்சினது எதுவும் இல்லை,.. அத நீ காப்பாத்தி கொடுத்து இருக்க, இத விட என்ன தகுதி வேனும்லே.. இப்போ சொல்லுதேன் .. கேட்டுக்கோ.. எனக்கு பொறக்க போற பேரனோ, பேத்திகோ, உனக்கு பொறக்க போற மவனோ, மவளோ தான் அந்த ஆண்டவன் மனசு வச்சா ஜோடி.. இது நடக்கும்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு”

அந்த நல்ல மனுஷனோட, இன்னிக்கு நான் இப்படி ஒரு ஆளா நிக்கிறேன்னா, அதுக்கு காரணமா இருக்கிற அவரோட வாக்கு பொய்க்க கூடாதுன்னு நினைக்கேன்.. இது தப்பா?”

என்று முடித்தார் சிவஞானம்..

தொடரும்!

Episode # 41

Episode # 43

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.