(Reading time: 16 - 32 minutes)

றுநாள்,

“எத்தனை தடவை சார் சொல்லுறது?... எந்த அட்லயும் அவ நடிக்க மாட்டா… இனி இது விஷயமா போன் பண்ணாதீங்க… சொல்லிட்டேன்…”

கோபத்துடன் போனை வைத்துவிட்டு சோபாவில் போனை தூக்கி போட்டான் தீபன்…

“ஏண்டா போன் வாங்கி இரண்டு நாள் கூட ஆகலை… அதுக்குள்ள இதையும் உடைச்சிடலாம்னு முடிவு பண்ணிட்டியா?...”

கேலி செய்தபடி அருகில் வந்தமர்ந்த சாருவிடம் எதுமே பேசவில்லை தீபன்…

அவன் பதில் பேசாது இருக்கவே, தீபனின் செல்போன் சிணுங்கியது…

அதை அவன் கண்டுகொள்ளாமல் இருந்திட, அதனை எடுக்க முயற்சித்த சாருவிடமும், எடுக்காதே என்றான் தீபன்…

காரணம் கேட்டவளிடம், “கௌஷிக் சார் கூட நீ பண்ணின அட் ஹிட் ஆனதுல இருந்து உனக்கு நிறைய ஆஃபர் வந்துச்சு… ஆனா நீ எதுவும் மாட்டேன்னு சொன்னதால உன் விருப்பம்னு நானும் விட்டுட்டேன்… இப்போ என்னடான்னா, இன்னைக்கு காலையில இருந்து ஒருத்தன் போன் போட்டு, உன்னை அட் ல நடிக்க வைக்க சம்மதம் கேட்குறான் எங்கிட்டயே…” என்றான் தீபன் கடுப்புடன்…

“சரி விடு… இதெல்லாம் எதிர்பார்த்தது தான… நீ இதெல்லாம் வொரி பண்ணாத…” என்றவள்,

தமையனைப் பார்த்து சிரித்தபடி, “உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டா?... அதைக் கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவ…” என பொடி வைத்து பேச,

அவளின் முகத்தில் பல நாள் கழித்து தெரிந்த அந்த புன்னகையில் மனம் கனிந்தவனாய், “சொல்லு…” என்றதும்,

“அது… சஸ்பென்ஸ்… நாளைக்கு நீயே தெரிஞ்சிப்ப…” என அவளும் ஓர் ரகசியம் காத்திட, அவனும் சிரித்தவனாய், வெளியே கிளம்பி போனான்…

கௌஷிக்கின் அலுவலகத்தில்,

“மே ஐ கம் இன் சார்…”

அறைக்கதவை தட்டியபடி திறந்த தீபனை வாவென வரவேற்று அமர வைத்தான் கௌஷிக்…

“வாங்க தீபன்…”

“சார் உங்களை நான் எதும் டிஸ்டர்ப் பண்ணலைல்ல இப்போ?...”

“நாட் அட் ஆல் தீபன்… அன்னைக்கு நீங்க தேடி வந்ததா அம்மா சொன்னாங்க… பட் உங்க கிட்ட தான் பேச முடியாம போயிடுச்சு…”

என்றவனுக்கு அந்த நாளின் நினைவு வர, அவனையும் அறியாமல் அவன் முகம் கடுத்தது…

“சாரி சார்… அன்னைக்கு உங்களை தான் பார்த்து பேச வந்தேன்… ஆனா அவங்ககிட்ட பேசிட்டு போக வேண்டிய நிலைமை ஆகிடுச்சு…”

“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் தீபன்… பட் நீங்க அம்மாகிட்ட கேட்டதை என்னால நிறைவேத்த முடியாது…”

“சரி சார்… அது உங்க விருப்பம்… அதுல நான் தலையிடலை… ஆனா என் சாரு விஷயத்துல நான் யாரு சொன்னாலும், எதிர்த்தாலும் தலையிடுவேன்… அது கடவுளே இருந்தாலும் சரிதான்…”

தீபன் உரிமையோடு தன் தமக்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தை நிலைநாட்ட, தீபனின் வார்த்தைகள் கௌஷிக்கிற்கு புரிந்தது…

“எதும் பிரச்சினையா தீபன்?...”

“பரவாயில்லை சார்… நான் சொன்ன ஒரு வார்த்தையிலேயே பிரச்சினைன்னு புரிஞ்சிட்டீங்க… நீங்க ஸ்மார்ட் தான் சார்…”

“என்ன விஷயம் தீபன்… சொல்லுங்க…”

“சாரு உங்க கூட சேர்ந்து நடிச்ச அட்-கு பிறகு அவளுக்கு நிறைய ஆஃபர் வந்துச்சு… ஆனா அவ எதையுமே அக்செப்ட் பண்ணலை… எனக்கும் அது சரின்னு தான் பட்டுச்சு… பட் இப்போ, அவளை ஒரு அட் ல நடிக்க சொல்லி எனக்கு மார்னிங்க்ல இருந்து போன் வந்துட்டே இருக்கு… அதுவும் வேற வேற நம்பர்ல இருந்து…”

“என்ன சொல்லுறீங்க தீபன்?...”

கௌஷிக்கின் குரலில் தெரிந்திட்ட அந்த கோபம் தீபனுக்கு சற்றே மன நிம்மதியை அளித்தது…

“ஆமா சார்… அத நான் சொல்லுறதை விட, நீங்களே தெரிஞ்சிப்பீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல….”

என சொல்லி முடிக்கும் முன்பே, தீபனின் செல்போன் சிணுங்கிட, தீபன் அதனை அட்டெண்ட் செய்து லவுட் ஸ்பீக்கரில் போட்டான்…

“ஹலோ… எதுக்கு இப்படி மாத்தி மாத்தி போன் பண்ணி இம்சை பண்ணுறீங்க?...”

“நானும் எத்தனை தடவைதான்ப்பா உனக்கு சொல்லுறது?.. உன் அக்காவை இந்த அட் பண்ண சொல்லு… பணம் எவ்வளவு வேணும்னாலும் தரேன்… அவ அழகுக்கு எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கலாம்… இப்போதைக்கு அவ இந்த அட் ல நடிச்சா அது போதும்…”

“ஹலோ… வார்த்தையை அளந்து பேசுங்க…”

தீபன் கோபம் வந்து கத்த,

“என்னப்பா… உனக்கு இவ்வளவு கோபம் வருது?.. அந்த கௌஷிக் கூட நடிக்கும் போது மட்டும் பல்லைக்காட்டின?... அவனுக்கு நாங்க எந்த வித்த்துல குறைஞ்சு போயிட்டோம்?... ஏன் உன் அக்கா அவன் கூட மட்டும் தான் நடிப்பாளா?... அவன் விலைக்கு வாங்கி…..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.