(Reading time: 16 - 32 minutes)

மேற்கொண்டு எதிர்முனையில் இருப்பவன் பேசும் முன்பு,

“டேய்… இனி ஒரு வார்த்தை பேசின, பேச நாக்கு மட்டும் இல்ல… உடம்புல உயிரும் இருக்காது… சொல்லிட்டேன்…” என உறுமினான் கௌஷிக்…

“என்ன தம்பி.. பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு?... நான் யாருன்னு தெரியுமா?...”

“நீ எவனா இருந்தா எனக்கென்னடா?... இன்னொரு முறை அட் மண்ணாங்கட்டின்னு போன் வந்துச்சு, நீ ஆள் அட்ரஸே இருக்கமாட்ட…”

கௌஷிக் கிட்டத்தக்க வெறிகொண்டவனாய் பேச,

“என்னையே மிரட்டுறியாடா நீ?... உன் அக்காவும் நீயும் எப்படி நிம்மதியா வாழுறீங்கன்னு நானும் பார்த்துடுறேன்…”

“அட சீ… வைடா போனை…”

“சின்னப்பையன்னு பொறுமையா போனா, ரொம்ப ஓவரா பேசுறடா நீ… முதல்ல அந்த கௌஷிக்கை தீர்த்துக்கட்டிட்டு அப்புறம் உன்னையும் உன் அக்காவையும் கவனிச்சிக்குறேண்டா…”

“என்னை நீ தீர்த்துக்கட்டப்போறீயா?...”

வேங்கையாய் கௌஷிக் கேட்டிட, எதிர்முனையிலிருப்பவனுக்கு தொண்டை அடைத்தது…

“டேய்… யா… யாரு…டா… நீ?...”

“நீ யாரை தீர்த்துக்கட்டப்போறேன்னு சொன்னீயோ… அவனே தான்… கௌஷிக்…”

“நீயா?............”

குரலில் உச்சக்கட்ட அதிர்ச்சி தெரிய, மேற்கொண்டு பேச வார்த்தை வராது தத்தளித்தவன்,

“தீபனுக்கு உன் சப்போர்ட் அட் ல மட்டும் இல்ல, லைஃப்லயும் இருக்குன்னு இப்போ புரியுதுடா… இனி என்ன பண்ணனுமோ அதை நான் பண்ணுறேண்டா… பாரு…”

“அதை செய்ய நீ இருக்கணுமே….”

கௌஷிக்கின் குரலில் ஒரு உறுதி தெரிய,

“டேய்….” என கத்தியபடி எதிர்முனை துண்டிக்கப்பட, கௌஷின் தனது இருக்கையில் பொத்தென்று அமர்ந்தான்…

சில நிமிட்த்திற்குப் பிறகு,

“சாரி சார்… இதை என்னாலயே சால்வ் செய்ய முடியும்… பட் இன்னைக்கு எனக்கு வந்த கால், உங்களுக்கும் நாளைக்கு வரலாம்… அதுவுமில்லாம இது என் அக்கா சம்பந்தப்பட்ட விஷயமும் கூட… அந்த அட் அ வச்சு தான் அவங்க பேசுறாங்கன்னும் போது, உங்களுக்கும் இது தொடர்பா பிரச்சினை வரக்கூடும்னு தோணுச்சு… அதான்… வந்தேன்…”

“சாரி தீபன்… என் அட் ல நடிக்கப்போய்த்தான உங்களுக்கு இவ்வளவு சிக்கல்… இனி இதுபோல கால் எதுவும் வராம நான் பார்த்துக்குறேன்… வெரி சாரி…”

“இதுல உங்க தப்பு என்ன இருக்கு சார்?... எதுக்கு மன்னிப்பெல்லாம்…”

“உங்க அக்காவுக்கு இந்த விஷயம் தெரியாதுல்ல?...”

கௌஷிக்கின் குரலில் இருந்திட்ட ஆதங்கம் தீபனுக்கு புரிந்தது…

இருந்தும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல், “இல்ல சார் தெரியாது… அட் விஷயமா கால்னு மட்டும் சொன்னேன்…” என கூறிட,

“நல்ல வேளை செஞ்சீங்க தீபன்... தேங்காட்…”

கௌஷிக் மூச்சை அழுந்த இழுத்து வெளிவிட்டபடி கூற,

“நாளைக்கு அவார்ட் பங்க்ஷன்… நீங்க?...”

“இல்ல தீபன்… என்னால வர முடியாது… ப்ளீஸ்… டோட் கம்பெல் மீ…”

“அதான் அன்னைக்கு உங்க அம்மாவும் சொன்னாங்க… பட் உங்களுக்காக, உங்க அட்ல நடிச்சு, முன்ன பின்ன தெரியாதவன் எல்லாம் பேசுற அளவுக்கு ஆளான ஒருத்தி, தான் அசிங்கப்பட்டது கூட தெரியாத ஒருத்தி வாழ்க்கையில முதல் முதலா கிடைக்கப்போற விருது… அதை விருதுன்னு சொல்லுறதை விட அங்கீகாரம்னு சொல்லலாம்… அது நாளைக்கு அவளுக்கு கிடைக்கப்போகுது… உங்களுக்காக தன் இசைப்பயணத்திலிருந்து விடுபட்டு, நடிக்க சம்மதிச்சாலே… அதுக்காகவது வரணும்னு உங்களுக்குத் தோணலையா சார்?...”

“………”

“ஏன் கேட்குறேன்னா?... இதோ இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி நீங்க அவளை ஒருத்தன் தப்பா சொல்ல ட்ரை பண்ணதும் பட்ட கோபம் ஒன்னு போதும்… அவ மேல நீங்க வச்சிருக்குற மதிப்பும் மரியாதையும்… இவ்வளவு அன்பு இருந்தும், ஏன் அவளோட சக்ஸஸ்ல கலந்துக்க நீங்க விரும்பலை?.. எனக்கு நிஜமாவே புரியலை சார்…”

“………..”

“நான் யார்கிட்டயும் இப்படி எல்லாம் கெஞ்சினது இல்லை… என் அக்காவை மதிக்காத இடத்துக்கு நான் போகவே மாட்டேன்… ஆனா, நீங்க என் சாருவை மதிக்குறீங்க… ஆனா அவளோட சந்தோஷத்துல கலந்துக்க தயங்குறீங்க… இதுவும் ஒரு விதத்துல அவளுக்கு அவமதிப்புதான சார்… சொல்லுங்க?...”

“…………”

“அப்படி என்ன தப்பு என் அக்கா பண்ணிட்டா?... உங்களுக்காக நடிச்சு, இன்னைக்கு கண்டவன் கிட்ட எல்லாம் பேச்சு வாங்கியிருக்கா?... இந்நேரம் என் இடத்துல வேற எவனாவது இருந்திருந்தா, உங்ககிட்ட சண்டைக்கு போயிருப்பான்… நான் அப்படி எதாவது செஞ்சேனா?.. சொல்லுங்க?... உங்க மேல எனக்கும் பெரிய மதிப்பு இருக்கு சார்… என் அக்காவைப் போல…”

சொல்லிவிட்டு தீபன் வெளியேற, யோசனையில் ஆழ்ந்தான் கௌஷிக் ஆழமாய்…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 17

Episode # 19

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.