(Reading time: 12 - 24 minutes)

“நான் +2 படித்து கொண்டு இருந்த பொழுது, என் தோழி ரம்யாவின்  அக்காவும், உங்க நண்பரும் காதலித்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு நேரத்தில் அது அவர்கள் வீட்டிற்கு தெரிந்து, ரொம்ப பெரிய சண்டையாகி,  ரம்யாவோட அக்காவை வீட்டிலேயே அடைத்து வைத்து விட்டார்கள். அதன் பின் அவருக்கு வேறு ஒரு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயமும் செய்து விட்டார்கள். அந்த நேரத்தில் தான் நீங்கள் முன் நின்று, உங்கள் தோழர்களை சேர்த்து, அவர்கள் இருவருக்கும்  ஓரு கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தீர்கள். அதற்கு நானும் ரம்யாவுடன் அங்கு வந்திருந்தேன்.” என உத்ரா கூறிய பொழுது...

“எனக்கு நியாபகம் வந்து விட்டது. கல்யாணம் முடித்த பின் தான் உன்னையே பார்த்தேன். +2 தேர்வு நேரத்தில் வீட்டில் அமர்ந்து படிக்காமல், இப்படி சுற்றிக் கொண்டு இருகிறாயே என்று கோபம் வந்து தான் திட்டினேன்டா.  படிப்பு முக்கியம் இல்லையா?” எனக் கேட்டான் அபி.

“அதை விட, உங்களைப் பார்ப்பது தான் முக்கியமாகப்பட்டது எனக்கு. ஓரமாக நின்று கல்யாணத்தைக் கூட பார்க்காமல், உங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தால், கல்யாணம் முடித்ததும் என்னைப் பார்த்த நீங்கள் என அருகில் வந்தீர்கள். நானும் சந்தோசமாக உங்களைப் பார்த்தால், வந்து ஒரே திட்டு எனக்கு, படிக்காமல் என்ன ஊரை சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என்று. முதலில் அழுகை  தான் வந்தது. பின் வீட்டிற்கு வந்து யோசித்ததில் நீங்கள் என் மேல் உள்ள அக்கறையால் தான், அப்படி கூறினீர்கள் என்று தெரிந்து, அன்று முதல் உங்கள பிடிக்கும் என்ற அளவு அதிகமாயிற்று.”

இருவரும் பேசிக் கொண்டே வெள்ளை மாளிகையின் முன் வந்து நின்றனர்.  முன் என்றால் அருகில் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அது எங்கோ தூரத்தில் இருந்தது.

“இதை இங்கு வந்து பார்பதற்கு, கூகுளில் இன்னும் நன்றாகப் பார்க்கலாம்” என்று உத்ரா அலுத்துக் கொண்டாள்.

அடுத்து நதி ஓரம் அமைந்து இருந்த ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றான் அபி. நுழைவு வாயில் இருந்த பூங்காவின் வரை படத்தை பார்த்து விட்டு, “ ஹையோ.... என்னால் இவ்வளவு தூரம் நடக்க முடியாது அபி. நேற்றே கால் ரொம்ப வலித்தது.” என்றாள் உத்ரா.

“நடக்க வேணாம்டா, இங்கு வாத்து ஊர்தி என்று ஒன்று உள்ளது. அதில் ஏறி இந்த பூங்காவை சுற்றிப் பார்க்கலாம்.” என்றான் அபி.

“வாத்து ஊர்தியா, அப்படி என்றால்?”

“அது, பஸ் போன்ற அமைப்பில், நிலத்தில் பஸ்ஸாக ஓடும், அப்படியே சென்று இந்த நதியில் படகாக மாறி நீந்தியும் செல்லும். அதில் இந்த பூங்கா முழுவதையும் சுற்றி வரலாம்.’ என்று விளக்கினான் அபி.

அந்த வாத்து ஊர்தியில் ஏறி அந்த பூங்கா முழுவதையும் சுற்றி வந்து, அதிலேயே ஓர் படகு பயணமும் மேற்கொண்டனர்.

மதியம் ஓர் இந்திய உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, “உத்ரா, நீ சாப்பிட்டு முடித்து இங்கு காத்திரு, ஒரு நண்பரை பார்த்து வருகிறேன். சீக்கிரம் வந்து விடுவேன்” என்று கூறி அவளது பதிலுக்கு காத்திராமல் கிளம்பிச் சென்றான் அபி.

என்னவாக இருக்கும் என்று யோசித்து ஓன்றும் புரியாமல் காத்திருந்தாள் உத்ரா. அரை மணி நேரத்திற்குள்ளாக திரும்பி வந்து போகலாம் வா என்றான்.

இருவரும் அங்கிருந்து கிளம்பி, ஆபிரகாம் லிங்கன் நினைவிடத்தை பார்க்க வந்தனர். அங்கு நடந்து கொண்டே “சொல்லுடா, அடுத்து என்ன நிகழ்ச்சி என்னைப் பற்றி நியாபகம் உள்ளது.” என கேட்டான் அபி.

“நானே உங்களைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கேன். உங்களுக்கு என்னைப் பற்றி ஒன்றும் நியாபகம் இல்லையா?” என திருப்பிக் கேட்டாள் உத்ரா.

“சாரிடா, எதோ சொந்தகாரங்க வீட்டு விசேஷத்தில் உன்னை பார்த்திருப்பேன். எனக்கு நியாபகம் கூட இல்லை. உன்னை முழுதாக பார்த்ததே, நம் கல்யாண தினத்தில் தான்.” என்ற அபியிடம்...

“சரி , சாரி கேட்டதால் பிழைத்துப் போங்க.  முன்னால் எப்படியோ, கல்யாணத்திற்கு பின் என்னை நல்லா தான் பார்த்துக் கொள்கிறீர்கள். அதனால் மன்னித்து விட்டேன்.” என்றாள் உத்ரா.

“உன் மன்னிப்பை விடுடா. அடுத்த கதையை சொல்லு. நான் உன்னை எப்படி இம்ப்ரெஸ் செய்தேன் என்று” என்று கதை கேட்க தாயார் ஆனான் அபி.

அதற்குள் அந்த இடத்தை பார்த்து முடித்து விட்டு, காரில் ஏறியதும், “நாம் வீட்டிற்கு செல்வதற்கு முன், நியு ஜெர்சியில் உள்ள  நாராயணா மந்திர்க்கு போகப்   போகிறோம்” என்று கூறினான்.

“அது நம்ம பிளானில் இல்லை தானே, நான் அம்மா, அப்பா வரும் சமயம் போகலாம் என்று நினைத்தேன்.” என்றாள் உத்ரா.

“அப்பொழுதும் ஒரு முறை போகலாம், இப்பொழுது ஒரு முக்கியமான வேலை அங்கு உள்ளது. அங்கு போனதும் உனக்கே தெரியும் “ என்று பூடகமாக கூறினான் அபி.

“என்ன சஸ்பென்ஸ் அது?” என்ற உத்ராவின் கேள்விக்கு

“அங்கு போனதும் உனக்கே தெரியும், இப்போ நான்கு மணி நேர பயணத்திற்கு உன் கதையை சொல்லு என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.