(Reading time: 9 - 17 minutes)

அவள் முன்பு வேலை செய்த நிறுவனத்தோடு பார்ட்னர்ஷிப் ஏற்படுத்திக் கொண்டு அவளை அங்கே ஒரு டைரக்டர் ஆக்கி இருந்தான் ராம். அதனால் அவளும் அங்கே சென்று வருவாள்.

ஷ்யாம் மித்ராவை பார்க்க சென்றது அவன் அத்தையான சபரியின் வீட்டிற்கு தான்.

சபரியின் பெண் தான் மித்ரா என்ற மித்ரவிந்தா.. சற்று விதியசாமாக வைக்கலாமே என்று வைத்தார்கள்.

தன் அத்தையின் வீட்டிற்கு ஷ்யாம் சென்ற போது , மித்ரா கோவத்துடன் ஹாலில் அமர்ந்து இருந்தாள்.

“ஹேய்.. மித்ரா.. என்னடா கோவமா இருக்கியா?”

“பின்ன என்ன? நீங்க ஏன் என்னை பார்க்க வரலை? “

“கொஞ்சம் வேலைடா.. அதான்”

“சரி.. சரி.. வாங்க சாப்பிடலாம்”

“நான் சாப்பிட்டேனே.. உனக்குத்தான் உன் மாமாவ பத்தி தெரியுமே.. காலையில் சாப்பிட்டு தான் கிளம்பணும்ன்னு சொல்வாரே”

“ஹ்ம்ம். ஆமாம்.. சரி அத்தான்.. நான் சாப்பிட்டு வரேன்.. “ என்று கூறியவள் தன் ரூமிற்கு செல்ல ஆரம்பிக்க,

“மித்ரா.. சாப்பிட எங்கே போகணும்..?” என்று ஷ்யாமின் குரல் கேட்டவுடன்,

“டைனிங் ஹாலுக்கு” என்று பதில் கூறியவள், பிறகு தான் அவள் போகுமிடத்தை கவனித்து, பின் சாப்பாட்டு அறைக்கு சென்றாள்.

ஷ்யாமிற்கு எப்போதும் மித்ரா ஸ்பெஷல் தான். மித்ரா சுமித்ராவை விட ஒரு வயது பெரியவள்.. சுமித்ரா டாக்டர்க்கு மூன்றாம் வருடம் படித்துக் கொண்டு இருக்க, மித்ரா பி.எஸ்.சி.. ஹோம் சயின்ஸ் மூன்றாம் வருடம் படித்துக் கொண்டு இருந்தாள்.

மித்ரா ஸ்பெஷல் தான் என்றாலும், அவளிடம் ஒரு தோழமையான உணர்வே ஷ்யாமிடமிருந்து வெளிப்படும்.. ராமின் வளர்ப்பு அல்லவா... சுமித்ராவை தவிர மித்ராவை கூட வம்பு இழுத்தோ, அல்லது மரியாதை குறைவாகவோ பேச மாட்டான்..

மித்ரா சாப்பிட்டு வரவும், அவள் காலேஜ் புக்ஸ் எல்லாம் எடுத்துக் கொண்டு வர ரூமிற்கு செல்ல, அவனின் அத்தை சபரி,

“ஷ்யாம்.. இப்போ எல்லாம் அவளின் கேள்விகள் ரொம்ப அதிகமா இருக்கு.. பதிலே சொல்ல முடியல.. “

“பார்த்துக்கலாம்.. அத்தை.. கவலைபடாதீங்க.. அவ முன்னாடி எதுவும் பேசாதீங்க.. கவனமா இருங்க”

“கவனமாதான் இருக்கேன்” எனும்போதே மித்ரா வர,

“அத்தான் ..போகலாம்” என்று வந்தாள்.

ஷ்யாமின் காரில் ஏறியவள், இருவரும் காரில் செல்ல, சற்று நேரம் மௌனமே நிலவியது.

“என்ன ஆச்சு.. மித்ராவிற்கு? ஒன்னும் பேசாமலே வரியே?”

“அத்தான். .நான் கேக்குறதுக்கு எனக்கு பதில் சொல்லுங்க.. “

“கேளு.. தெரிஞ்சா சொல்றேன்.”

“எனக்கு என்ன பிரச்சினை.?” என்று வினவ,

“உனக்கு பிரச்சினைன்னு யாரு சொன்னா?”

“எனக்கே தெரியுது”

“என்ன தெரியுது?”

“நான் மத்தவங்கள மாதிரி இல்லை.. அப்நார்மலா இருக்கேன்னு”

“எதை வச்சி சொல்றே?”

“ஏன்.. ? சுமிக்கும் எனக்கும் ஒரு வயசு வித்தியாசம்... அப்போ நான் படிச்சு முடிச்சு ஒரு வருஷம் ஆகிருக்கணும் இல்லியா? ஆனால் இப்போ தான் மூணாவது வருஷம் படிக்கிறேன்”

“அது உனக்கே தெரியுதே.. அப்புறம் எப்படி நீ அப்நார்மல்ன்னு சொல்றே”

“என் கிளாஸ்மேட் ஒருத்தி சொல்றா.. அன்னிக்கு பிரக்டிகல் கிளாஸ்லே கேக் செய்யும்போது கிரீம் எடுப்பதற்கு பதிலா கெட்சப் எடுத்துட்டு வந்துட்டேன்.. அதுக்கு ஏன் எப்போ பார்த்தாலும் ஒன்ன எடுக்க சொன்ன வேற ஒன்னு எடுக்கற? உனக்கு புத்தி சரி இல்லையான்னு கேக்கறா?”

“அது..”  என்று இழுத்தவன், “ஏதோ தெரியாம நடந்துருக்கும்.. அதுக்கு ஏன் கவலைபடற?”

“இல்லை அத்தான்.. அவ மட்டும் இல்லை. இன்னும் சிலர் சொல்றாங்க.. இதோ இப்போ வீட்டுலே கூட டைனிங் ஹால்க்கு போறதுக்கு பதிலா ரூம்க்கு போறேன்.. யாராவது சொன்னாதானே நான் சரியா பண்றேன்.. அப்போ அது ஏதோ ப்ரோப்ளம்ன்னு தானே அர்த்தம்..”

“இவ்ளோ தெளிவா பேசறியே.. அப்போ எப்படி ப்ரோப்ளம் இருக்க முடியும்?”

“இல்லை அத்தான்.. நான் நெட்லே தேடினேன்.. இந்த சிம்டம் எல்லாம் பார்த்த எனக்கு டோவ்ன் சிண்ட்ரோம்ன்னு தோணுது”

“ஹேய்.. அது எல்லாம் இல்லை.. நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத”

“அப்போ என்னன்னு சொல்லுங்க..?”

“ஹ்ம்ம்..

“நீ கவலபடுற அளவிற்கு கிடையாது.. ஆனால் உனக்கு லேர்னிங் ப்ரோப்ளம் இருக்கு.. அதனால அப்போ அப்போ சின்ன சின்ன மறதி இருக்கும். மற்றபடி நீ நார்மல்தான்..”

“ஓஹ.. “ என்று நிறுத்தியவள்,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.