(Reading time: 11 - 22 minutes)

குளிர் அதிகமாக இருந்தது. காபியை மெல்ல பருகினான். அவன் தொண்டையில் இறங்கிய இளஞ்சூடு குளிருக்கு இதமாக இருந்தது. அவன் மனம் ஏனோ படபடப்பாக இருந்தது.

அமேலியாவை எல்லோருக்கும் தெரியப்படுத்தியது தவறான செயல் என எண்ணினான். இருந்தாலும், என்ன செய்ய? விதி அதன் வழியே தானே செல்லும். இரவின் தனிமை அவனை பல எண்ண ஓட்டங்களுக்குள் ஓட வைத்தது. சாத்தியமே இல்லாத வித்தியாசமான கற்பனையெல்லாம் யோசித்தான்.

அமேலியா மேல் அவன் கொண்டிருக்கும் காதல் சரியானது தானா? கிடைக்கவே கிடைக்காத இதுவரை உலகில் கண்டிராத ஏதோ ஒரு பொருளின் மேல் ஆசை வைப்பதை விட அபத்தம் அவள் மேல் தான் கொண்டிருக்கும் காதல்.

சிகரெட் ஒன்றை பற்றவைத்து புகையால் நுரையீரலை நிரப்பினான் வசந்த். அவன் கொண்ட சிந்தனைக்கு அந்த சிறிய போதை லேசாக நிம்மதியளித்தது. மீண்டும் காபியை ஒரு மடக்கு குடித்தான்.

அவன் நினைவுகளில் அமேலியாவின் முகம் தோன்றியது. அவன் கேட்ட கேள்விக்கெல்லாம் விடை கிடைக்காவிட்டாலும் அவளது காதல் வசந்திற்கு தேவைப்பட்டது. தன் காதல் எதுவரை செல்கிறதோ அதுவரை பயணிக்கட்டும். மற்றதை பிறகு பார்த்து கொள்ளலாம். எதுவும் நிரந்தரமில்லாத உலகில் மனித உறவில் உத்தரவாதம் தேடுவது வேடிக்கை.

நடுநிசி கடந்தும் வசந்திற்கு உறக்கமில்லை. புல் வெளியில் போடப்பட்டிருந்த பெஞ்சில் அமர்ந்து வான் நிலவை நோக்கினான். அவன் மனம் லேசாகியது. மெல்ல உறக்கம் தழுவ அங்கேயே படுத்துக்கொண்டான்.

காலை வேளை.

இரவில் நீண்ட நேரமாக விழித்துக்கொண்டிருந்ததால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான் வசந்த்.

"வசந்த்! டேய்! எழுந்துருடா" ஜான் அவனை உசுப்பினான்.

வசந்த் கண்களைத் திறந்தான். மேலும் அவன் உடலைக் குலுக்கினான் ஜான்.

"என்னடா?"

"உன் காதலி என்ன செஞ்சிட்டு இருக்கா பாரு. கூடிய சீக்கிரம் ஜெயில்ல ரூம் புக் பண்ண வேண்டியது தான்"

தொடரும்...

Episode # 44

Episode # 46

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.