(Reading time: 25 - 50 minutes)

சாரதாவின் சந்தோஷத்திற்கும் எனெர்ஜிக்கும் காரணம் புரிய இருவரின் முகத்திலிருந்த கோபம் மறைந்து புன்னகை குடிகொண்டது.

“இதென்னமா கேள்வி! அப்பா சொன்னாங்களேனு இத்தனை நாள் சும்மாயிருந்தோம்.  இப்போ எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் போக நினைக்கிறது நியாயமா?” அவர் கேட்டதை முழுதாக கவனிக்காமல் ராகுல் போர் கொடி பிடிக்க...

“அய்யோ ராகுல்! அவசரமா நடக்குறாங்கனு அத்தையை கோவிச்சிக்கிட்டீங்க...இப்போ நீங்க என்ன செய்றீங்களா?” மைத்ரீ கேட்கவும் ஒன்றும் புரியாமல் முழிக்க, “அத்தை என்ன கேட்டாங்கனு கவனிச்சீங்களா...இல்லையா? அவங்க என்னால வரமுடியுமானு கேட்குறாங்க” என்ற விளக்கம் கொடுக்க..

“ஸாரிமா! சரயூவை பார்க்க போறோம்... நாங்க வரோமானா கேட்கவும்.. நீங்க கேட்டதுக்கான காரணத்தை கவனிக்கலை!” என்றவன் மனைவியிடம் திரும்பி, “ஸாரி மையூ! உன்னை பத்தி யோசிக்கலை.  உனக்கு முடியலைனா பரவாயில்லை.... வீ வில் ஸ்டே பேக்”

“ஐ ம் பெர்ஃபெக்ட் ராகுல்! நாம போகலாம்... ரெண்டு பேரையும் பார்த்து ரொம்ப நாளாச்சு”

அவள் எளிதாக சொல்லிவிட்டாலும், “ஆர் யூ ஷுயர்? உன்னால மேனெஜ் பண்ண முடியுமா?” இந்த சமயத்தில் மனைவியால் அவ்வளவு தூரம் வரமுடியுமா என்ற சந்தேகம்.

“ராகுல்! என்னை கார்லதானே கூட்டிட்டு போவீங்க?” கேட்க,

“இதென்ன கேள்வி மையூ?”

“பின்ன என்ன? நான் கார்ல உட்கார்ந்தா, அதுதான் என்னை சுமக்க போகுது.  நீங்க யோசிக்கிறத பார்த்தா, என்னவோ நான்தா காரை தூக்கிட்டு வர மாதிரியிருக்கு” அவள் சொன்ன விதத்தில் எல்லோரும் சிரித்துவிட்டனர்.

த்தனை முறை ட்ரை பண்ணாலும் நாலு காயின்ஸும் கண்டுபிடிக்க முடியலையே! அதுக்காக அப்படியே விட்றுவேன்னு நினைக்காதே...இந்த முறை கண்டிப்பா எல்லா காயின்ஸும் கண்டுபிடிச்சு லெவெலை க்ளியர் செய்துருவா சரயூ’

மூன்று நிமிட கால அவகாசத்தில் நான்கு மயில்சின்னம் பொரித்த காயின்களை கண்டுபிடிக்க வேண்டிய ஆட்டத்தில், இரண்டு நாட்களாக திரும்ப திரும்ப தோற்றிருக்க.... அந்த கேமை முடித்துவிடும் வேகத்திலிருந்தவளுக்கு, ஜெய் தனக்காக வைத்துவிட்டு சென்ற அவகோடா ஜூஸ் மறந்துவிட்டது.

உடலுக்கு பல நன்மைகள் தரும் அவகோடா ஜூஸை சரயூக்கு பிடிக்காத போதும் வறுபுறுத்தி குடிக்க வைப்பவன், இப்போதும் குடித்தாளா இல்லையா என்று பார்க்க வந்தால், அரை மணிக்கு முன்னால் அவன் வைத்துவிட்டு போன மாதிரியே இருந்தது க்ளாஸ்.

‘ஒவ்வொரு நாளும் இதே வேலையா போச்சு’ என்று சலித்து...

வழக்கம் போல் ஜூஸை குடிக்க வைக்க அவளை நெருங்கியவன், மொபைலை பறிக்க... இன்னுமென்ன வெற்றிதான் என்ற நிலையில் மொபைல் அவன் கையிற்கு மாறியிருக்க...

“ப்ளீஸ்... ப்ளீஸ்... நான் ஜூஸை குடிச்சுட்ற, கேமை கொஞ்ச பாஸ் (pause) பண்ணு சஞ்சு...ப்ளீஸ்!” என்று கெஞ்சியவளின் கையிலிருந்தது க்ளாஸ்.

“சரி... சரி... நீ குடி! நான் பாஸ் பண்ற” சொன்னவனுக்கோ பாஸ் பட்டனை காணவில்லை.

“பாஸ் ஆப்ஷனே இல்ல சரூ.... எப்ப...” அவன் ஏதோ சொல்லி முடிப்பதற்குள் அவகோடா, ஜெய்யின் தலையிலும் முகத்திலும் வழிந்தது.

ஆட்டம் முடிய பதினைந்து நொடிகளிருந்த போது கடைசி காயினை கண்டுபிட்டித்தவள், அதை தொடவிருந்த சமயத்தில் தான் ஜெய் வந்தது.  அதனால் தானே இன்று அவனோடு மல்லுக்கு நிற்காமல் ஜூஸை கையிலெடுத்து, கேமை பாஸ் செய்ய சொன்னது.  அவன் பாஸ் செய்யுமுன்பே மூன்று நிமிடம் முடிந்துவிட்டிருக்க, அந்த ஆப்ஷன் மறைந்துவிட்டிருந்தது.

இரண்டு நாட்களாக கேமில் மூழ்கியிருந்தவளுக்கு, அவன் பாஸ் ஆப்ஷன் இல்லை என்று சொன்னதும் புரியாதா என்ன?! மீண்டும் ஆட்டத்தில் தோற்றுவிட்டது... அடுத்த நொடி அவகோடாவால் ஜெய்யிற்கு அபிஷேகம் நடத்தியிருந்தாள்.

சற்று தள்ளி சென்று மறுபடியும் அந்த கேமை ஆடத்துவங்க..

“கேம் ஆடுறதே அடிக்ஷன்.. இதுல ஜூஸை வேற வீணாக்கியிருக்க...” ஜெய்யின் குரலில் நிமிர்ந்து பார்க்க... இன்னமும் ஜூஸ் வழிய, அவன் இவளிடமாக வந்து கொண்டிருந்தான்.  அடுத்து என்னவாக இருக்கும் என்று யூகித்தவளாக அங்கிருந்து ஓடினாள்.

மேலும் கீழுமாக வீட்டை சுற்றி இவள் ஓட அவன் துரத்த.. சோர்ந்து போனவள், “சாரி சஞ்சு! இனிமேல் இப்படி செய்யமாட்ட.. சமத்தா நீ கொடுக்குற விஷத்த... ச்சீ இல்ல... அவகோடவை குடிக்கற”

“ஜூஸ் உனக்கு விஷமா?! எவ்ளோ ஓடுவ... எங்கிட்ட மாட்டிதான ஆகனும்...அப்ப இருக்கு” ஜெய்யும் விடாமல் துரத்த, வீட்டின் பின்பக்கமாக ஓடி நீச்சல் குளத்திடம் வந்தவளின் வேகம் குறைந்துவிட... எட்டி பிடித்துவிட்டான் அவளை!

“சஞ்சு ப்ளீஸ்! இந்த ஒருமுறை உன்னோட சரூவை மன்னிக்க கூடாதா?” மூச்சு வாங்க, கண்களை சுருக்கி அவள் கேட்க...

அவளின் உன்னோட சரூவில் சருக்கிய மனதை கட்டுபடுத்தி, “இந்த பப்பி ஃபேஸை (puppy face) வேறெதுக்காச்சும் ட்ரை பண்ணு சரூ! இன்னைக்கு உனக்கு தண்டனை நிச்சயமுண்டு!” என்றான் கறாராக.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.