(Reading time: 25 - 50 minutes)

“முதல்ல ஸ்பா...அப்றம் ஹேர் ட்ரீட்மென்ட்...இப்போ கடைசியா என்னதது?” ஆதர்ஷ் மாபெரும் சந்தேகத்தை கேலியாக கேட்டிட...

ப்ரியா, “என்ன தர்ஷ்...இது கூட தெரியாம? அது மட் ட்ரீட்மென்ட் இன்வெண்டெட் பை ஜெய் அண்ட் சரயூ” சொல்ல அனைவரும் சிரித்தனர்.

“அது... இன்னைக்கு சண்டே இல்லையா... சோ எல்லாருக்கும் லீவ்... தோட்டக்காரருக்கும் லீவ்... அதனால நாங்க கொஞ்ச செடியெல்லாம் செட் செய்தோமா... அதான் சேறு பட்டிருச்சு” எதையோ சொல்லி சமாளிக்க முயல..

“ஓ.... ஜெய், சொல்றத நாம நம்பனும் தர்ஷ்!” என்ற மனைவிக்கு...

“அப்படியா சொல்ற டார்லிங்க்! ஜெய் ஷர்ட்டை பார்க்கவும்... நானென்னவோ சரயூதா சேறை அள்ளி அவமேல பூசினாளோனு நினைச்ச” என்று நடந்ததை சரியாக ஆதர்ஷ் சொல்லவும்...

ஜெய்யின் முகம் சற்று சிவந்துவிட்டது!

“அச்சச்சோ...இந்த அநியாயத்தை கேட்க ஆளேயில்லையா?” என்று ராகுல் ஜெய்யின் முகத்தை சுட்டிக்காட்டி பொய்யாக அலற...

மைத்ரீ, “நானிருக்க... என் ஃப்ரெண்டை காப்பாத்த நானிருக்க” என்றுவிட்டு, “நீ வா ஜெய்! நாம வெளிய போகலாம்...இவங்களுக்கு ஒரு ஆளு கிடைச்சுட்டா ஓட்டி தள்ளுவாங்க” அவனை காப்பாற்றி அழைத்து சென்றாள்.

ன்னை மன்னிச்சிரு ஜெய்! அன்னைக்கிருந்த மனநிலைல பைத்தியக்காரதனமா நடந்துக்கிட்ட.  கொஞ்ச நிதானாமா யோசிச்சிருந்தா உன்னை புரிஞ்சிருக்கும்.  ஆனா சரயூவோட பயம் மட்டுமே என் மனசுக்குள்ள உட்கார்ந்துக்கிட்டு வேற எதை பத்தியும் யோசிக்க விடலை.   எங்கே ரெண்டு பேரும் வாழ்க்கைய இழந்துருவீங்களோ என்ற பயத்துலதா உங்க கல்யாணத்தை எதிர்த்த.  சரயூகிட்ட வந்திருக்கும் மாற்றத்தை பார்த்தா, கல்யாணத்தை முதலே முடிச்சிருக்கலாம் போல”

இவள் சொல்வதை கேட்டு எந்த பிரதிபலிப்புமின்றி அமைதியாக நின்றிருந்த ஜெய்யை கண்டு தன்னையே நொந்து கொண்டாள்.  அவள் தானே இதற்கு காரணம்.  எத்தனை அழகான நட்பூ....இன்று தடயமில்லாது மறைந்து போயிருந்தது. 

தான், அவன் காதலை பிரிக்க பார்த்ததாக நினைத்துவிட்டானோ?

“ப்ளீஸ்....என்னை தப்பா நினைக்காத ஜெய்! நான் என்னைக்குமே உனக்கும் சரயூக்கும் நடுவில் வர நினைச்சதில்லை” என்றவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது.

அப்போதும் அவன் அசைவின்றி நிற்க...

“இப்போ நல்லா புரியுது ஜெய்! அன்னைக்கு உன்னோட நிலைமை என்னவா இருந்திருக்கும்னு புரியுது.  உனக்கு பக்கபலமா இருந்திருக்க வேண்டிய நானே அதை செய்ய தவறிட்ட” கன்னம் தொட்ட கண்ணீரை துடைத்தபடி வீட்டை நோக்கி நகர்ந்தாள்.

“அவ்ளோ தானா? இல்லை ஏதாவது மிச்சமிருக்கா?” ஜெய்யின் கேள்வியில் அப்படியே நின்றுவிட்டாள்.

‘இதென்ன கேள்வி?!’ குழப்பத்தோடு திரும்பி பார்க்க...

கண்கள் மின்ன, குறும்பு புன்னகையை கண்டு ஒரு நிமிடம் திகைத்தவள், அடுத்த நொடி அவன் தோள் சேர்ந்திருந்தாள்.

“பயந்துபோயிட்டேன்டா எரும! என்னை ஒதுக்கிட்டியோனு...நான் தவிச்ச தவிப்பிருக்கே!”

“லூசு மைதி! உன்னோட அவசர புத்தி தெரியாதா என்ன? நீ கோபபட்டபோ எல்லா, இப்படிதா வந்து அழுவனு நினைச்ச... அதை அப்படியே ப்ரூவ் செய்து என்னை ஜெயிக்க வச்ச இந்த அழுமூஞ்சு மைதிக்கு ஜே ஜே” என்று வலது கையை உயர்த்தி கோஷம் போட...

பழையதை பேச விரும்பாது அவன் நிலைமையை சகஜமாக்க நினைப்பதை அறிந்து, “என்னை அழுமூஞ்சுனு சொன்னது ராகுல்கு தெரிஞ்சது, உன்னை உண்டு இல்லைனு பண்ணிடுவார்!” என்று மிரட்ட

குறும்பை கூட்டி, “கூப்பிடு உன் கையாளை... அவரிட்டயே கேட்டிடுவோம் இந்த அடைமொழி பொருந்துமா இல்லையானு” சவால்விட..

“போடா குரங்கே!” என்று சிணுங்க... வாய்விட்டு சிரித்தவன்,

“தன் புகழ் தனக்கே தெரியுற பெரிய மகாத்மாவாகிட்டா மைதி!” என்று மேலும் சீண்ட...

“போதும்.... போதும்! இப்போ கொஞ்ச சீரியஸ் டாக்...” என்றதும் விளையாட்டை கைவிட்டவன்,

“சொல்லு மைதி!”

“அம்மாவும் அத்தையும் உங்க வாழ்க்கையை நினைச்சு ரொம்ப கவலை பட்றாங்க ஜெய்! உண்மைய சொல்லனும்னா அவங்க மட்டுமில்லை, எல்லாருமேதா.  உங்களுக்கு கொஞ்ச டைம் கொடுக்கனும்னு, மாமா, மத்தவங்களுக்கு சமாதானம் சொன்னாலும் அவருக்குள்ளும் கவலை இருக்கதா செய்யுது.  உங்களுக்குள்ள எல்லா சரியா போச்சானு தெரிஞ்சுக்க, அம்மாவோட ப்ளான்தா, இந்த சர்ப்ரைஸ் விசிட்டே!” என்று முகம் பார்க்க..

“என் காதல் மேல நம்பிக்கையிருக்கு மைதி! எல்லா கூடிய சீக்கிரம் சரியாகிடும்” அவன் உறுதியளிக்க... இப்போதும் மீண்டும் முகம் பார்க்க...

“வேறேதாவது சொல்லனுமா?” கேட்க... இல்லையென்பதாக தலை அசைந்தாலும் அவளிடமிருந்த தயக்கத்தை உணர்வந்தவன்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.