(Reading time: 25 - 50 minutes)

விளையாட்டுதனமும் அதே சமயம் மிகவும் பொறுப்பானவளாக வளம் வந்தவளை எது மாற்றிபோட்டது? சரயூ, தன் கற்பை இழந்ததாக யஷ்விதா சொன்னது உண்மையா? நான் என் சரயூவை பழிவாங்குவேனா? ஏன் அப்படி சொன்னாள்?

எத்தனை முறை யஷ்விதா சொன்னாலும், கனவு அவனை அச்சுருத்தினாலும் அவனால் சரயூ கற்பை இழந்திருப்பாள் என்று கற்பனையிலும் நினைக்க முடியவில்லை!

தூக்கமில்லாது நடை பழகிக்கொண்டிருந்தவன், திடீரென கேட்ட சரயூவின் அலறல் சத்தத்தில் அடித்துபிடித்து அவளறைக்கு ஓடினான்.

கையையும் காலையும் உதைத்து, படுக்கியிலிருந்து ஒரு அடிக்கும் மேலாக உடலின் நடு பகுதியை வளைத்து தூக்கிபோட்டு, ஏதேதோ அறற்றினாள்.   

அவளிடமாக தாவி, “சரூ என்னடா செய்யுது?” அவள் துடிப்பதை காணசகியாது மார்போடு அணைக்க... முறுக்கேறியிருந்த உடலை சமாளிப்பது சுலபமாயிருக்கவில்லை.  இன்னும் ஆக்கிரோஷமாய் அவனை நெட்டி தள்ள... தடுமாறி தரையில் விழுந்தவன் செவிகளில் சேர்ந்த வார்த்தைகளில் உடைந்து போனான்.

“ஏய் என்னை விடுடா... என்ன செஞ்சாலும் நீ நினைக்குறது நடக்காது.... நான் அதுக்கு விடமாட்ட... விடுடா என்னை”

தன்னையும் அறியாமல் கண்களில் நீர் திரையிட அவளையே பார்த்திருந்தவனுக்கு எப்படி உணர்கிறானென்றே தெரியவில்லை! உள்ளத்தின் குமுறலையும், வேதனையையும் வார்த்தைகளில் கோர்த்திட முடியாத நிலையது. 

சற்று நேரத்தில் சுயத்துக்கு திரும்பியவன், இம்முறை அவளை தன்னோடு சேர்த்தணைத்து, அவளின் கால்களை தன் கால்களால் வளைத்து இறுக்கி கொள்ள....அவனை காயபடுத்த ஆரம்பித்தாள்.  தலைமுடியை இழுத்து, முதுகில் கீறியென கால்களை அசைக்க முடியா வெறியையும் சேர்த்து அவள் கைகளில் காட்டினாள்.  அவளை கட்டுபடுத்த அணைப்பை இறுக்கி, கைகளையும் சேர்த்து பிடித்தான்.  கனவில் தன்னை காத்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தவள் கடைசி ஆயுதமாக பற்களை உபயோகிக்க... அது ஜெய்யின் தோளை பதம் பார்த்திருந்தது.

நேரம் செல்ல செல்ல அவளுடைய சீற்றம் அதிகரித்ததே தவிர குறைந்த பாடில்லை.  அவளை கட்டுபடுத்தும் வழி தெரியாது திகைத்தவன், பேச தொடங்கிவிட்டான்.

“சரூ! நான் சொல்றதை கேளுடா.... இது நிஜமில்லை! நீ கனவு கண்டு பயந்து போயிருக்க... கண்ணை திறந்து பாரேன்...நீ நம்ம வீட்ல இருக்க... உனக்கு ஒரு பிரச்சனையுமில்லைடா! நான் உன் பக்கத்துலயே இருக்க... கண்ணை திறந்து பாருமா சரூ...” நிறுத்தாது பேசிக்கொண்டிருக்க... முதலில் பயனில்லாத வார்த்தைகளுக்கு சற்று நேரத்திற்கெல்லாம் மாற்றம் தெரிய... கொஞ்சம் கொஞ்சமாக அடங்கினாள் சரயூ.

அவளை விலக்கி, படுக்கையில் கிடத்தியவன், தண்ணீரை புகட்டினான்.  கண்கள் மூடியிருக்க அதை விழுங்கியவளின் முகத்தில் களைப்பும் சோர்வும் தெரிய... அவளறையின் ஃப்ரிட்ஜை திறக்க, அதில் தண்ணீர் தவிர வேறேதும் இருக்கவில்லை. 

தனதறைக்கு சென்று பழச்சாற்றை எடுத்துக்கொண்டு திரும்ப...  எதிரிலிருந்தோ தப்பித்து ஓடிவந்தவள் போல் இவனோடு ஒட்டிக்கொண்டாள். 

“பயமாயிருக்கு சஞ்சு! எங்கூடவே இரு ப்ளீஸ்...ப்ளீஸ்” என்றபடி அவன் மார்பில் முகத்தை புதைத்துகொண்டாள்.

“பயப்படாதடா! நான் உன் பக்கத்துலியே இருக்க! ஏதாவது கனவு கண்டு பயந்துட்டியா?”

“ம்ஹீம்...” என்றவள் அவன் கழுத்தை வளைக்க...

“ஸ்...ஆ....” சற்று முன் அவள் கடித்திருந்த தோளில் சரயூவின் கைபட்டு வலியில் முணக...

“என்னாச்சு சஞ்சு?” தன்னுடைய பயத்தை பின்னுக்கு தள்ளி, சட்டையை விலக்கி பார்க்க... இரத்தம் துளிதுளியாய் எட்டிபார்த்த பற்களின் தடம்.

“இது...எப்படி....?” கேட்குபோதே புரிந்துவிட்டது... அவள்தான் அவனை கடித்திருக்கக் கூடுமென!

“நீ உட்காரு சஞ்சு!” படுக்கையில் அமரவைத்தவள், அவசரமாக ஃப்ர்ஸ்ட் எய்ட் பாக்ஸை எடுத்து வந்து முதலுதவியில் இறங்கினாள்.

காயத்திற்கு மருந்திட்டு, பஞ்சை வைத்து ஒட்டி... “வலிக்குதா சஞ்சு! ஐ ம் சாரி!” மன்னிப்பு கேட்க...

இல்லையென்பதாக அவன் தலையசைத்தாலும், இங்கிருந்து மறுபடியும் அவனை காயபடுத்திட கூடாதென தன்னறை நோக்கி நடந்தாள்.

தனியாக இரவை கடத்துவதில் அவளுக்கு இருக்கும் பயத்திற்கு சாட்சியான தளர்ந்த நடையும், தனக்கான மனைவியின் அன்பையும் கண்டுகொண்டவன், “இன்னைக்கு மட்டும் எங்கூடவே இருக்கியா சரூ? முடியாதுனு சொல்லிடாதே ப்ளீஸ்!”

அவன் தன் மனமறிந்து தான் இப்படி சொல்கிறான் என்று தெரியாமலிக்க அவளொன்றும் குழந்தையல்லவே!

“சஞ்சு!” என்று அவனை கட்டிக்கொண்டு அழுதாள்.

சிறிது நேரம் அவளை அழவிட்டவன், “அழுதது போதும் சரூ! எதுவாயிருந்தாலும் மனசத்திறந்து பேசுடா... அதுலயே பாதி பாரம் குறைஞ்சிரும்.  உனக்குள்ளயே வச்சு மருகுறது உடம்புக்கு நல்லதில்ல.  ப்ளீஸ் சரூ... பேசுமா”

அழுகை அதிகரித்ததே தவிர அவளிடமிருந்து ஒரு வார்த்தையும் வாங்க முடியவில்லை. 

இன்றும் அவள் வாயை திறக்க போவதில்லை என்பது புரிந்திட ஜெய், இறுக்கமாக அணைத்து கொண்டான்.  வார்த்தைகளில் கூட கிடைக்காத ஆறுதலை உணர்ந்தவளின் அழுகை குறைந்து, பிறகு உறங்கியும் போனாள்.

எபி 26-ல அதர்வோட கம்மெண்டுக்காக சரயூ எல்லாத்தையும் ஒதுக்கிவச்சு ஹாப்பியா இருக்க சீன்ஸ் சேர்த்திருக்க...

அதர்வ், என்ட்போர்ட் போடும் போதுதா சரயூ எல்லாத்தையும் மறப்பானு சொல்ல கூடாதுனு சொன்ன... உனக்காவே இது! smilesmilesmile

Episode 28

Episode 30

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.