(Reading time: 25 - 50 minutes)

‘அவனுக்கு பூசலாம்னு நினைச்சா...ச்சே கீழ விழுந்து, துணியெல்லா அழுக்காயிடுச்சே! எல்லாம் அவனாலதா..’ இவள் வழுக்கி விழுந்ததுக்கும் அவனையே குறையென்றவள்,

“குளிச்சுட்டு ஃப்ரெஷா வருவயில்ல....என்னை மாதிரியே உன்னையும் மாத்துற” கருவிக்கொண்டே சேற்றை வாரி பாக்கெடினுள் நிரப்பி... அவனறியா வண்ணம் ஒளிந்துகொண்டாள்.

ஜெய்யின் குரல் கேட்டவுடனே அவனை பின்னிருந்து அணைத்து அவள் உடையிலிருந்தை அவனுடைக்கும் அப்பியவள், பாக்கெட்டிலிருந்த சேற்றை அள்ளி முகம், கைகள், மார்பு, வயிறென எல்லா பக்கமும் பூச.... இவனுடைய அமைதி கேள்வியெழுப்பியது.

‘சேறுன்னா அவ்ளோ பிடிக்குமா? இப்படி அசையாம நின்னு பூசிக்கிறா? கையில சிக்காம ஓடுவா.... சதசதனு சேறு ஒட்டியிருக்க துரத்தனுமோனு நினைச்சா இவனென்ன சமத்தா எனக்கு ஒத்துழைக்குறா?’

யோசனையிலிருந்தவளை சட்டென இழுத்து அவன் முன் கொண்டு வந்தவனுக்கு அவளின் அலங்கோலத்தில் சிரிப்புதான் வந்தது. இவன் வாய்விட்டு சிரிக்க... சரயூவும் சிரித்தாள்.

“சரூ! நீயிருக்க ஸ்டைல்ல எனக்கு சிரிப்பு வந்தா... அது நியாயம்.  நீயெதுக்கு சிரிக்கிற?”

‘இவனென்ன லூசா? நான் பூசனுது தெரியாமல நின்னுட்டிருந்தா?’ கேள்வியை தள்ளிவிட்டு,

“முதல்ல குனிஞ்சு பாரு சஞ்சு!” என்றுவிட்டு சிரிக்க..

தன்னையே குனிந்து பார்த்தவனோ, “சரூ! ஏன்டி இப்படி செய்த?”

“என்னை தண்ணில போட்டதுக்குதா இது” என்று அவன் கோலத்தை சுட்டினாள்.

“இது அநியாயம் சரூ! ஜூஸ் கொட்டினதுக்குதா உன்னை தண்ணில போட்ட... இப்போ நீ செஞ்சுவச்சிருக்கிறதுக்கு என்ன செய்றது?”

“ஒன்னும் வேணா! போய் குளிச்சிட்டு வா... அடுத்த ரௌண்டுக்கு நான் ரெடி!”

“அடிக்கழுதை! அடுத்த ரௌண்டா... உன்னை?” என்று துரத்த....ஓடியவள்,

“இன்னைகெல்லா நீ எத்தனை முறை குளிக்குறனு பாரு!” என்றபடி புயலென வீட்டினுள் நுழைய...

“இந்த காஃபியை நம்ம வீட்லயே குடிச்சிருக்கலாம்.  சரயூவை கூட்டிட்டு வரனு போன ஜெய்யும் காணலை! நான் வேணா போயி பார்க்கட்டா?” ராகுல் அன்னையிடம் கேட்க...

இவள் கதவை திறந்த வேகத்திற்கு, அது சுவற்றில் மோதிய சத்தத்தில் எல்லோரும் இந்த பக்கம் பார்க்க.... தன் பெயர் அடிபடவும் அப்படியே நின்றுவிட்டாள்.  

அவளோடு விளையாட்டில் மூழ்கிபோனவனும் வீட்டிற்கு வந்தவர்களை மறந்து பின்னோடு ஓடிவரவும்... வந்தவேகத்தில் இவள் மீது மோத... விழவிருந்தவளை வயிற்றோடு கைகொடுத்து பிடித்து தன்னையும் சமாளித்து நிற்க...

இவர்களை பார்த்த அனைவரும் ஸ்தம்பித்திருக்க...கிளுக்கி சிரித்த குழந்தை யது, “அம்மா! நானு....” அவனும் சேற்றை பூசிக்கொள்ள வேண்டுமென, சரயூவை கைகாட்டி குதிக்க ஆரம்பித்துவிட்டான்.

அதில் கலைந்தவர்களிடம் நமட்டு சிரிப்பும்... பெரியவர்களுக்கு ஒரு வகையான நிம்மதியும்!

யாருடைய முகத்தையும் பார்க்கவிடாது வெட்கம் பிடுங்கி தின்ன, சரயூ ஜெய்யின் பின்னால் மறைந்து கொண்டாள்.

“யது கண்ணா! நம்ம வீட்ல நீ விளையாடுவியாம்...” ப்ரியா வார்த்தையில் நம்பிக்கையின்றி குழந்தை அழ ஆரம்பித்திருக்க...

வடிவுதான், “குழந்தை உங்களை பார்த்துதா விளையாடனும்னு அழறான்.  போங்க போயி குளிச்சிட்டு வாங்க” என்று சொல்ல... ஜெய்யோடு ஒண்டியபடி மேலேறிச் சென்றாள் சரயூ.

மகளைப் பற்றிய பெரும் பாரம் இறங்கிவிட்டிருக்க, தன்னையறியாது சாரதாவின் கண்கள் அவர்களையே தொடர... வெவ்வேறு அறைகளில் நுழைந்தவர்களால் மறுபடியும் சோர்ந்துவிட்டார்.  ஏதைச்சையாக திரும்பிய மைத்ரீ அத்தையை கண்டுகொண்டாள்.

சற்று நேரத்திற்கெல்லாம் குளித்து வந்தவர்களிடம் கிலோ கணக்கில் தயக்கம் கொட்டி கிடக்க... எல்லோரிடமும் பேச வேண்டிய கட்டாயத்தில் திண்டாடினர்.

வெகு நாட்களுக்கு பிறகு தந்தையை காணவும் அவரருகில் சரயூ உட்கார... சாரதா அவளுக்கடுத்து அமர்ந்து கொண்டார். 

மகளின் தலையை வருடியபடி, “எப்படிடா இருக்க?”

“நல்லாயிருக்கப்பா! நீங்க் எப்படியிருக்கீங்க?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன சேறோட உன்னை பார்த்தப்பலிருந்து ரொம்ப நல்லாயிருக்கேன்டா!” அப்பா தன்னுடைய குறும்பை கூறுகிறார் என்பதறிந்து புன்னைகையை உதிர்க்க...

“நல்லவங்களுக்கு எப்பவும் நல்லதே நடக்கும்! நீயும் நல்லாயிருப்படா” என்றவரின் குரல் நெகிழ்ந்து கிடந்தது.

சலுகையோடு அவர் தோளில் சாய்ந்துகொண்டாள் சரயூ.

மகளிடம் பேசிட எத்தனையோ இருந்தும் அவளின் தற்போதைய சந்தோஷத்தில், கணவனின் தோளில் சாய்ந்திருந்தவளை ரசித்தது தாயுள்ளம்.

தனித்து நின்றிருந்த ஜெய்யை இழுத்து தன்னோடு இறுத்திகொண்ட ராகுல், “அப்றம் ஜெய்! ஹேர் ட்ரீட்மென்ட் எப்படி போகுது?” என்று வெகு தீவிரமாய் கேட்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.