(Reading time: 25 - 50 minutes)

“ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்...” கைகளை கோர்த்து கெஞ்ச...

“இனிமேல் கலாட்ட செய்யாம ஜூஸை குடிக்கனும்...சரியா?” என்றவனின் கண்களிலிருந்த குறும்பை அறியாது...

‘மனசு மாறிட்டான் போல’ என்று நினைத்த நொடி நீச்சல் குளத்தில் விழுந்திருந்தாள். 

“யூ சீட்! அறிவிருக்காடா உனக்கு? என் துணியெல்லாம் நனஞ்சு போச்சு” என்று சிணுங்க...

“இருக்கே! தண்ணில விழுந்தா துணி நனையும்னு நல்லாவே தெரியும்.  இப்போ சொல்லு எனக்கு அறிவிருக்கா இல்லையானு” பலமாக சிரிக்க..

‘எனக்கு அறிவில்லைனு சொல்லிட்டு சிரிப்பு வேற’ என்று நொடித்து கொள்ள...

“நீ இங்க குளி சரூ! நான் ஷவர்ல குளிச்சிட்டு வர” என்று குறும்பு கொப்பளிக்க சொன்னவன் சென்றுவிட்டான்.

‘குளிச்சுட்டா வர?!...வாடா...இன்னைக்கு நீ எத்தனை முறை குளிக்குறனு பாரு?’ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தாள் சரயூ.

அறைக்கு செல்வதற்காக நுழைந்தவனின் பார்வையில் பட்டது இவர்களை தேடிக்கொண்டிருந்த ராகுல்தான். ஒரு நொடி திகைத்து நின்றாலும்...

இவனிருந்த கோலத்தில் அவனிடம் சிக்கினால் ஓட்டி தள்ளுவானே! மூளை யோசிக்க... வந்த வழியே திரும்பி செல்ல முயன்ற வேளை, “ஜெய்! எங்க போயிட்டீங்க? யாரையும் காணோமேனு பார்த்தா, இங்க என்ன செய்ற நீ?” கேட்டபடி இவனருகே வந்திருந்தான்.

இதற்கு மேலும் திரும்பாவிடில் நல்லதல்ல... திரும்பியவனின் கோலத்தை கண்டு சிரிக்க ஆரம்பித்துவிட்டான் ராகுல். 

‘சிரிச்சதோட போகாதே இது? கேள்வி கேட்பானே’ நினைத்து முடிக்கவில்லை... கேட்டுவிட்டான் ராகுல், “என்னதிது கொழ கொழனு?” என்றவனின் கண்கள் இவனை மேலிருந்து கீழாக அலசியது.

‘சமாளி ஜெய்’, “அது...அது...ஹேர் ட்ரீட்மென்ட்! முடிக்கு நல்லதுனு சரூதா பிடிவாதமா போட்டுவிட்டுட்டா” என்று அசடு வழிய...

“ஹேர் ட்ரீட்மென்ட்?! முகத்துக்குமா?... நம்பிட்ட” என்று வாய்விட்டு சிரித்தவனின் உள்ளத்தில் குறும்பு செய்யும் சரயூவின் முகம் தோன்றியது. 

“வீட்ல எல்லாரும் வந்திருக்காங்க ஜெய்! சீக்கிரமா குளிச்சிட்டு வந்துடு”

ஜெய்யிற்கு அய்யோ என்றிருந்தது.  வரவேற்பறையின் படி வழியாகதான் இவனறைக்கு செல்ல வேண்டும்.  அங்கிருப்போருக்கு என்னென்று விளக்குவது இவனிருக்கும் கோலத்தை!

“ராகுல் ஒரு ஹெல்ப்! கொஞ்ச என்னோட ரூம் வரைக்கும் வர முடியுமா?”

‘எதுக்கு?’ கேள்வியோடு பதிலும் கிடைக்க... “சரி... வா நான் பார்த்துக்குற” என்று அவனோடு நடந்தான்.

கேள்வியும் குழப்புமுமாக எல்லோருடைய பார்வையும் இவன் மேல் படிய,

“அது சண்டே இல்லையா... அதான் வீட்லயே ஸ்பா (spa) ட்ரீட்மென்ட்! இப்போ குளிச்சிட்டு வந்துருவா” என்று இவனை யாரோடும், யாரும் இவனோடும் பேசவிடாது அனுப்பி வைத்தான் ராகுல்.

பத்து நிமிடத்தில் குளித்து தயாராகி வந்தவன், “சாரி! அது... வந்து... ஹேர் ட்ரீட்மென்ட்”

மன்னிப்பில் தொடங்கி எல்லோரிடமும் நலம் விசாரித்து ப்ரியாவிடம் வர, “ராகுல், ஸ்பானு சொன்னாரு... நீ ஹேர் ட்ரீட்மென்ட்னு சொல்ற.... ஏதோ உதைக்குதே! என்ன நடக்குது ஜெய்?” என்று ஆராய்ச்சியாய் பார்க்க..

“சரியா சொன்ன டார்லிங்க்” என்று ஆதர்ஷும் இணைந்து கொள்ள...

“சரூ, பின்னாடியிருக்கா... நான் கூட்டிட்டு வர” அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாது நழுவி செல்ல...

“நீ மறைச்சாலும்... இங்கிருந்து கிளம்புறதுக்குள்ள என்னன்னு கண்டுபிடிக்காம விட மாட்டோம்” ஆதர்ஷின் வார்த்தைகள் பின்தொடர தப்பித்து நீச்சல் குளத்திடம் வந்தவன், சரயூவை தேடினான்.

‘எங்க போன சரூ? எல்லோரும் வந்து உட்கார்ந்திருக்காங்க... என்னதா நம்ம குடும்பம்னாலும், வீட்டுக்கு வந்தவங்களை மரியாதையா நடத்தனும்ல... இந்த நேரம் பார்த்து எங்கடா போன?’

“சரூ எங்க இருக்க?” உள்ளிருப்பவர்களை எட்டாத மெலிதான அழைப்பு. 

அடுத்த நொடி இவனை பின்னிருந்து அணைத்து முகத்தை அலசிய கைகள், மார்பையும் தாண்டி வயிற்றை அடைந்திருந்தது.  

திடீர் அணைப்பில், அவள் கைகள் உடலில் நடத்திய ஊர்வலத்தில், எதற்காக வந்தான் என்பதை மறந்து மயங்கி நின்றான்.

அவன் குளிக்க சென்றதும், தோட்டத்து மண்ணை எடுத்து அவனுக்கு பூசிட வேண்டுமென அங்கு செல்ல... முன்தினம் பெய்திருந்த மழை நீரில் குழைந்திருந்த மண்ணில் இவள் காலை வைக்கவும் வழுக்கி விட்டது.  அடியேதும் படாததால், சமாளித்து எழுந்தவளின் உடலெங்கும் சேறு ஒட்டியிருக்க...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.