(Reading time: 12 - 24 minutes)

ம்ம் சரி நீ வேணா தூங்கு நிரும்மா..எனக்கு ஒண்ணும் ப்ராப்ளமில்ல..என அவன் கூற மறுப்பேதும் கூறாமல் விழி மூடிக் கொண்டாள்..

அதிகாலையிலேயே சென்னையை அடைய தமிழ் சோர்வாய் சோபாவில் அமர்ந்தான்..இருங்கப்பா காபி போட்டு தரேன் சாப்ட்டு போய் தூங்குங்க..

“அட உனக்கு காபி போடலா தெரியுமா பரவால்லையே நா பொழச்சுக்குவேன்”, என சிரிக்க,

“உங்க அளவுலா இருக்காது சுமாரா போடுவேன்”, என்றவாறு கிட்சனுக்குச் சென்றவள் காபி கலந்து கொண்டு வந்தாள்..வாங்கிப் பருகியவன்,

“ நினைச்சதவிட நல்லாவே இருக்கு தேங்க் யூ நிரு..செம்ம தூக்கம் வருது கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துட்டு டிபன் பண்ணி தரேன் ஓ.கே யா??”

ஒண்ணும் அவசரமில்லங்க நீங்க போய் தூங்குங்க முதல்ல..என அனுப்பிவிட்டு குளித்து முடித்து சரோஜா அவர்களுக்காக கொடுத்து விட்டிருந்த தோசை மாவை எடுத்தவள் இட்லி தயார் செய்தாள்..டப்பாக்களை தேடிப்பிடித்து இட்லி பொடியை எடுத்து டேபிளில் வைத்தவள் வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்..பாச்லர் வீட்டிற்கே உரிய கோலத்தில் காட்சிளித்த வீட்டை ஓரளவு மாற்றியமைத்தாள்..அனைத்து கர்டன்களையும் எடுத்து துவைக்க மெஷினில் போட்டு வீட்டை பெருக்கி முடிக்கும் போது மணி காலை ஒன்பதை தொட்டிருந்தது..

தூங்கி எழுந்து வந்தவனின் கண்கள் மாற்றங்களை கவனினிக்க,

“அடடா ஒரு நாலு மணி நேரம் தூங்கிட்டு வர்றதுக்குள்ள வீடே மாறிடுச்சு..ஏன் ஸ்ட்ரெயின் பண்ணிக்குற நானும் ஹெல்ப் பண்ணிருப்பேன்ல..”

“பரவால்லைங்க தூக்கம் வரல அதான்..சரி நீங்க குளிச்சுட்டு வரீங்களா சாப்டலாம்..இட்லி பண்ணிருக்கேன்..”

“அடடா என்னதிது நா உனக்கு சமைச்சு போட்டு இம்ப்ரஸ் பண்ணலாம்நு பாத்தா இப்படி பண்றியே நிரு..சரி விடு லஞ்ச் அசத்திருவோம்”, என அவன் எழுந்து செல்ல வழக்கம்போல் அவன் வருவதற்குள் அவனுக்கான அனைத்தையும் எடுத்து வைத்தவள் டைனிங் டேபிளில் அவனுக்காக காத்திருந்தாள்..

இருவருமாய் பேசியபடியே காலை உணவை முடிக்க தமிழ் மதிய உணவு தயார் செய்ய ஆரம்பித்தான்..அவள் காய் நறுக்கிக் கொடுப்பதும் பாத்திரம் தேய்த்து வைப்பதுமாய் தன்னால் முடிந்ததை செய்து கொடுத்தாள்..இருவருமாய் கெட் டூ கெதருக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக ஷாப்பிங் செல்ல முடிவு செய்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினர்…இருவருமாய் கலந்து பேசி பாதி நாள் ஷாப்பிங்கிலேயே கழிய நிர்பயாவும் ஓரளவு பழைய நிலைக்கு வந்திருந்தாள்…

மாலை வேளையில் ஹரிஷ் ஷாலினியோடு வந்திருக்க பேச்சிற்கு குறைவில்லாமல் பொழுது கழிந்தது..

“இப்போ எப்படியிருக்கீங்க அக்கா..”

“ம்ம் பரவால்ல நிர்பயா..நா இவரை கல்யாணத்துக்கு போக சொன்னேன் இவருதான் பயந்துட்டு போமாட்டேன்னு சொல்லிட்டாரு..”

“ஷாலு உன்னை இப்படி விட்டுட்டு அங்க வந்திருந்தாலும் அவன் நிம்மதியா இருந்திருக்க முடியுமா சொல்லு..”

“ம்ம் அதுவும் கரெக்ட் தான் அண்ணா..இரண்டு வாரத்துக்கே நிர்பயா ஒரு சுத்து பெருசான மாதிரி இருக்காளே செம கவனிப்பா??”

“ஐயோ நீ வேற என்னை கூட இத்தனை வருஷத்துல இப்படி பாத்துகிட்டது இல்ல..மாமியாரும் மருமகளும் என்னமா கொஞ்சிட்டு இருந்தாங்க தெரியுமா..”

“டேய் நீ ஒருத்தனே போதும் குடும்பத்தை பிரிக்க..ஏன்மா ரொம்ப படுத்துறானா சொல்லு ஒரு வழி ஆக்கிடுவோம்”, என ஹரிஷ் சிரிக்க,

“இப்போதைக்கு பரவால்லண்ணா இதுக்கப்பறம் கண்டிப்பா சொல்றேன் “,என நகைத்தவளை ஷாலினி ஆச்சரியமாய் பார்த்தாள்..அதன்பிறகும் வெகுநேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்ப நிர்பயா தமிழுக்கு இரவு உணவை பரிமாறினாள்..கிட்சனை க்ளீன் செய்து நிர்பயா வர ஹாலில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பக்கத்தில் கைகாட்டி அமர சொல்ல வந்தமர்ந்தாள்..

“நிரு இன்னைக்கு ஷாப்பிங் நல்லா போச்சுல..வேற எதுவும் வாங்க வேண்டியது இருந்தாலும் நோட் பண்ணிக்கோ நாளைக்கு போய் வாங்கிக்கலாம்..”

ம்ம் சரிப்பா..மெதுவாய் தன்னவளின் தோள் சுற்றி கை போட்டவன் ஆதரவாய் தோள்பற்றி தன்னோடு சாய்த்து கொண்டான்..இன்னுமா உங்க மாமியாரை மிஸ் பண்ற??என குறும்பாய் கேட்டான்..

“கிண்டல் பண்ணாதீங்க..”

“நா ஏன் கிண்டல் பண்றேன் நீ தான் பேக்ரவுண்ட்ல வயலின் வாசிச்சுட்டே சுத்ற..சென்னை வந்ததும் மறுபடியும் என் அழுமூஞ்சி பொண்டாட்டி வந்துட்டா போலேயே..”

“சாரிங்க..டூ டேஸ்ல சரி ஆய்டுவேன் ஏன்னு புரில நா ஏன் இப்படி இருக்கேன்னும் தெரில..”

“ரிலாக்ஸ் டேக் யுவர் டைம்..பட் டூ டேஸ் தான் நா குடுக்குற டைம்”, என கண்ணடித்தவன் சரி ரொம்ப லேட் ஆச்சு தூங்கலாமா என கேட்க அவனை விட்டு வேகமாய் எழுந்தவளை இடைபிடித்து தூக்கி தனதறைக்குச் சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.