(Reading time: 12 - 24 minutes)

“ஐயோ என்ன இது நான் வரேன் விடுங்க..”

நீ தான் டூ டேஸ் டைம் கேட்ட நாயில்லயே ஒழுங்கா வா பாக்கலாம் இல்ல கீழே போட்டுருவேன் என குலுக்க சட்டென அவன் கழுத்தை கட்டிக் கொண்டாள்..வழக்கம்போல் தன்னை விட்டு விலக்காமல் அவளை சாய்த்து கொள்ள ஒன்றும் கூறாமல் அப்படியே உறங்கியும் போனாள்..

மறுநாள் சீக்கரமாகவே எழுந்தவள் வீட்டை இன்னுமாய் தன் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தாள்…வீட்டை ஒருமுறை பார்த்தவள் திருப்தியாய் உணர தமிழை எழுப்பச் சென்றாள்..வழக்கம்போல் அவன் அவளை சீண்டியவாறே எழுந்தமர கன்னத்தை காடியவாறு அவளை ஓரப்பார்வை பார்க்க லேசாய் முகம் சிவந்தவள் இதழ்பதித்து வெளியே சென்றுவிட்டாள்…

“வாவ் ரசகுல்லா வீடேயே சூப்பரா மாத்தீட்ட…சரி சொல்லு என்ன டிபன் பண்ணலாம்..”

“வேண்டாம்ப்பா நானே பண்றேன் உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க உங்களை வேலை செய்ய வைக்குறது ஒருமாதிரி இருக்கு..”

“நோ பார்மாலிட்டீஸ் நிரு..”

“ப்ளீஸ்ப்பா..”

சரி உன் இஷ்டம் என்ன பண்ணாலும் சாப்டுறேன்..அண்ட் நானும் ஹெல்ப் பண்ணுவேன் என்றவாறு சமையலை தொடங்க இதற்கு அவனையே சமைக்க சொல்லியிருக்கலாம் எனும் அளவிற்கு அவளிடம் எதாவது வம்பு செய்து கொண்டேயிருந்தான்..

இருவருமாய் சாப்பிட்டு முடித்து பார்ட்டிக்கான மெனு தயார் செய்ய தொடங்க,நான்கைந்து பதார்த்தங்கள் முடிவு செய்து,

“எந்த ஹோட்டல சொல்லலாம்ங்க..இவ்ளோ கம்மியா டெலிவர் பண்ணுவாங்களா??தெரிலயே..”

“ஏன் பண்ணாம தமிழ்செல்வன் மெஸ்ல கண்டிப்பா பண்ணுவாங்க..”

“என்ன??????நீங்க பண்ண போறீங்களா??”

“எதுக்கு இவ்ளோ ஷாக் ஆகுற நிரு??அக்சுவலா நாம இன்வைட் பண்ணிருக்க எல்லாரும் என் பேட்ஜ் மேட்ஸ்தான்..ஒருத்தர் மட்டும் சீனியர் எல்லாரும் வீட்டுக்கு வர்றதே வீட்டு சாப்பாடுக்காக தான்..சோ நோ வொரீஸஸ் அதெல்லாம் ஜமாய்ச்சுடலாம்..”

வலாய் சிறு பயத்தோடு அவள் எதிர்பார்த்த நாளும் வந்தது..காலை முதலே இருவரும் பரபரப்பாய் வேலைகளை கவனிக்க நான்கு மணியளவில் டின்னர் வேலைகளை ஆரம்பித்தனர்..வெஜ் புலாவ்,கோபி 65,பன்னீர் பட்டர் மசாலா,சப்பாத்தியோடு கடையில் வாங்கிய ஜாமூனும் தயாரானது..வேலை செய்த அலுப்பு நீங்க குளித்து வந்தவர்கள் தங்களுக்கான உடையை எடுக்க நிர்பயா அழகான அனார்கலி சுடிதாரை கையிலெடுத்தாள்..

“ரசகுல்லா நா ஒரு டிசைனர் புடவை எடுத்து குடுத்தேனே அதை கட்டிக்கோ ரொம்ப நல்லாயிருக்கும்..”

அது..அதெல்லாம் வேண்டாம்ங்க..சுடிதாரே..என்றவள் அவன் பார்வையை கண்டு வாயை மூடிக் கொண்டாள்..வழக்கம்போல் கண்களை மூடியவாறு அவளுக்கு புடவையை கட்டிவிட தலைக்கு குளித்திருந்ததின் காரணமாய் அவள் தலைமுடி ஈரம் சொட்ட விரிந்திருக்க முந்தானையை சுற்றி எடுப்பதற்காக குனிந்தவனின் முகத்தில் இருதுளி தண்ணீர் சொட்ட தன்னை மறந்து சட்டென விழிதிறந்தவன் தன்னவளின் அருகாமையில் ஒரு நொடி மனம் மறந்துதான் போனான்..

பெண்ணவளோ என்ன செய்வதென அறியாமல் திரும்பிக் கொள்ள அவனின் கரம் அவள் இடைசுற்றிப் பரவியது..இதழ்கள் கழுத்து வளைவில் கவிதை வரைய நடுக்கத்தோடு அவன் புறம் திரும்பியவளின் கழுத்தின் கீழே இருந்த காயத்தை கண்டவன் சட்டென உணர்வு பெற்றான்..

அவள் கண்களின் கண்ணீரை அப்போதுதான் கவனித்தவன் சட்டென விலகி புடவையை சரிசெய்துவிட்டு,

‘ஏ நிரு என்னடி இது கழுத்துக்கு கீழே எப்போ என்ன நடந்தது இப்டி வடுவா மாறியிருக்கு”, என பதற இன்னுமாய் அவள் அழ ஆரம்பித்திருந்தாள்..

எதை நினைத்து அவள் பயந்தாளோ அதை நடத்திவிட்டோமே என்ற குற்றவுணர்வு மேலெழும்ப செய்வதறியாமல் தவித்தவன்,

“சாரி நிரு வேணும்னு பண்ணல ரியலி சாரி..அழறத நிறுத்து முதல்ல அதான் சாரி சொல்றேன்ல..”, என அவன் பாணியில் மிட்ட நினைத்ததை போல் அழுகை மட்டுப்பட்டது..

“முதல்ல நா கேட்டதுக்கு பதில் சொல்லு என்ன காயம் அது???”

“கடவுள் எனக்கு நடந்ந அசிங்கத்திற்கு கொடுத்த வாழ்க்கை பரிசுப்பா..”,என மீண்டும் அழ ஆரம்பித்திருந்தாள்..அவள் கூறியதன் அர்த்தம் புரிந்தவனுக்கு அந்த முகம் தெரியாத அரக்கனின் மேல் கொலைவெறி எழுந்தது..என்ன மாதிரியான ஜென்மம் அதெல்லாம் என வெறுப்பு தோன்றியது..

இதெல்லாம் உங்களுக்கு தேவையா செல்வா..நடந்ததை நீங்களே மறக்க நினைச்சாலும் இந்த காயங்கள் உங்களுக்கு அதை நியாபக படுத்திட்டேதான் இருக்கும்..உடம்பு மொத்தமும் ரணம் செல்வா இதையெல்லாம் உங்களுக்கு நா எப்படி சொல்றது..அதை நினைச்சுதான் மனசுகுள்ள தவிச்சு தவிச்சு நொந்துட்டு இருக்கேன்..என மீண்டுமாய் அவன் மீது சாய்ந்தே அழுது தீர்த்தாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.