(Reading time: 29 - 57 minutes)

தரை பார்த்து பேசிய திருப்தியுடன் கங்கா வீட்டுக்கு வர, இரண்டு நாள் முன்னே வந்த அக்கா, திரும்பவும் தன்னை பார்க்க வந்திருப்பதை நினைத்து யமுனா மகிழ்ச்சியடைந்தாள். ஆனால் யமுனாவை நேராக பார்த்ததும் கங்காவிற்கு அந்த வீடியோ ஞாபகத்திற்கு வந்தது. அந்த வீடியோவில் யமுனாவை பார்த்து பயந்தாலும், அந்த வீடியோ பொய்யாக தான் இருக்க வேண்டும் என்பது போல் ஒரு நம்பிக்கையில் அவள் இருந்தாள். இருந்தும் தங்கை விஷயத்தில் அண்ணாமலையிடம் தைரியமாக பேசவும் முடியாமல் தான் அவரது முடிவுக்கு அவள் ஒத்துக் கொண்டாள். ஆனால் அந்த வீடியோவில் உடுத்தியிருந்த அதே ஆடையில் யமுனா இருப்பதை பார்த்ததும் கங்காவிற்கு திரும்ப்ச் உடல் நடுங்கியது. யமுனாவை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.

“என்னாச்சு க்கா..”

“ஒன்னுமில்ல யமுனா..’

“ என்னக்கா அதிசயமா.. ரெண்டே நாளில் திரும்ப என்னை பார்க்க வந்திருக்க..?”

“உன்னோட +2 ரிசல்ட் வந்தாச்சு.. நீ அடுத்து காலேஜ்ல்லாம் சேர வேண்டாமா? அது விஷயமா தான் நான் வந்தேன்.”

“கண்டிப்பா க்கா.. என்னோட டீச்சர்ஸ்ல்லாம் இந்த வருஷம் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, அடுத்த வருஷம் என்னை காலேஜ்ல சேர சொன்னாங்க.. ஆனா வீட்ல இருந்தா போர்க்கா.. என்னோட உடம்பு இப்போ நல்லா தான் இருக்கு.. நான் இந்த வருஷமே காலேஜ்ல ஜாயின் பண்றேன் க்கா..”

“ஆமாம் உன்னை இந்த வருஷமே காலேஜ்ல சேர்த்துடலாம்.. நீ சீக்கிரம் டீச்சர் ஆகனும்.. அப்போ தான் அம்மா ஆசை நிறைவேறும்..”

“எனக்கு முன்ன நீதானே டீச்சர் ஆகப் போற..” என்றதும் கங்காவின் முகம் மாறியது. யமுனாவிற்கும் ஏதோ புரிந்தவளாக தான் சொன்னதை நினைத்து வருந்தினாள்.

யமுனாவின் முகம் மாறியதும் கங்கா இயல்புக்கு வந்தாள். “யமுனா நீ இந்த வருஷம் கண்டிப்பா காலேஜ் சேரப் போற.. ஆனா இந்த ஊர்ல இல்ல.. அதேபோல நீ என்கூடவும் இருக்கப் போறதில்ல..”

“எனக்கு தெரியும் க்கா..”

“தெரியுமா? என்ன தெரியும்?”

“அக்கா நீயா சொல்லாட்டியும் உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு தெரியாத அளவுக்கு நான் சின்ன பொண்ணா.. உன்கூட என்னை வச்சிக்க மாமா வீட்ல ஒத்துக்க மாட்டாங்க தானே? எனக்கு தெரியும் க்கா, என்னோட ப்ரண்ட் ஒருத்தி, அவங்க அப்பா இறந்ததும் அவளோட அக்கா என்னோட ப்ரண்டையும் அவங்க அம்மாவையும் அவங்களோடவே கூட்டிட்டு போய் வச்சிக்கிட்டாங்களாம். ஆனா அதுல இருந்து அவளோட அக்கா, மாமாக்கு டெய்லி சண்டை நடக்குமாம். இவங்களால தான் சண்டைன்னு என்னோட ப்ரண்டோட அம்மா புரிஞ்சிக்கிட்டு அவளை கூட்டிக்கிட்டு தனியா போயிட்டாங்களாம்.. அதுல இருந்து எந்த ப்ராப்ளமும் இல்லையாம்..

நானும் உனக்கு தொந்தரவா இருக்க மாட்டேன்க்கா. நீ எங்க சேர்த்துவிட்டாலும் நான் நல்லா படிச்சு, ஒழுங்கா இருப்பேன். ஆனா திடிர்னு ஏன் இந்த கல்யாணம், என்னோட ஆபரேஷன்க்கான பணத்துக்கா, நீ மாமா கூட சந்தோஷமா இருக்கீயா? ஏன் என்னை உன்னோட கல்யாணத்துக்கு கூட்டிட்டு போல அதெல்லாம் எனக்கு தெரிஞ்சாகனும்?”

“இங்கப்பாரு நீ யோசிக்கிற மாதிரில்லாம் ஒன்னுமில்ல.. திடிர்னு கல்யாணம் செஞ்சுக்கிற சூழல் எனக்கு வந்துடுச்சு.. கல்யாணம் முடிஞ்சதும் மாமா வெளிநாடு போயிட்டாரு.. மாமாவோட பேமிலி இங்க குன்னூர்ல இருந்ததால நானும் இங்க இருந்தேன். ஆனா இப்போ எல்லாம் சென்னைக்கு போறாங்க.. உன்னையும் என்னோட கூட்டிட்டு போனா ஒன்னும் சொல்ல மாட்டாங்க தான், ஆனா மாமா இல்லாததால நான் உன்னை அழைச்சிட்டு போக முடியாது.. அதான் நம்ம மதர் இனி இருக்கப் போற சென்னை ஆசிரமத்துக்கு உன்னையும் கூட்டிட்டுப் போக போறேன். அங்க தான் நீ தங்கி படிக்கனும்..’

“சரிக்கா.. நீ சொன்னது போலவே நான் அங்க படிக்கிறேன். ஆனா எனக்கு மாமாவை பார்க்கனும்..”

“மாமா தான் வெளிநாடு போயிருக்காரே?”

“அவர் போட்டோ காமி, மாமாவை பார்க்காம எப்படிக்கா.. ப்ளீஸ் நான் மாமாவை போட்டோலயாவது பார்க்கிறெனே?”

“இப்போ என்கிட்ட போட்டோ இல்ல யமுனா.. நீ இன்னைக்கு மதரோட ஆசரமதுக்கு போ.. நான் அடுத்த முறை உன்னை பார்க்க வரப்போ மாமா போட்டோவோட வரேன் சரியா?”

“மாமா எப்போ ஊர்ல இருந்து வருவாரு? நீ இனி சென்னைல தான் இருக்கப் போறீயா?”

அவளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு கங்கா பதில் சொல்ல திணறினாள். அப்போதைக்கு அவளிடம் ஆமாம் ஆமாம் என்று தலையாட்டியவள், பின் மதரின் ஆசரமத்திற்கு யமுனாவை கூட்டிச் சென்றாள். இவர்கள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மதர் யமுனாவை கூட்டிக் கொண்டு சென்னை புறப்பட்டார். மதியம் பயந்ததுக்கும் இப்போது யமுனாவின் பிரச்சனை தீர்ந்ததில் சற்று நிம்மதியானாள் அவள். வாழ்க்கை போராட்டம் தான் என்றாலும் வாழ்ந்துவிடலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு துளிர்விட்டிருந்தது. ஆனால் வீட்டிற்கு சென்றதும், துளிர்விட்டிருந்த நம்பிக்கை கருகி, சாகும் எண்ணம் வருமளவிற்கு அங்கே பிரச்சனை அவளுக்காக காத்துக் கொண்டிருந்தது.

தடைப் படாத என் சுவாசத்திற்காக...

என் ஜீவன் காத்திருக்கிறது...!!

Episode # 37

Episode # 39

{kunena_discuss:1078}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.