(Reading time: 6 - 12 minutes)

“அப்படின்னு எல்லோரையும் சொல்ல முடியாதுடி. இப்போ உள்ள காலத்துலே அது எல்லாம் நடக்காது.

“ஏன் நடக்காது ? எனக்கு எல்லா விஷயத்திலும் ஷ்யாம் அத்தான் தான் ஆலோசகர். ஷ்யாம் அத்தானே மைதிலி அத்தை சொல்றத தாண்டி எதையும் செய்ய மாட்டங்கதானே. அப்போ இவங்களும் அந்த மாதிரிதானே இருக்காங்க. அப்புறம் ஏன் சமாளிக்க முடியாது?

இதற்கு என்ன பதில் சொல்ல என்று சைந்தவிக்கு தெரியவில்லை. அவளின் எண்ணமும் அவளுக்கு புரியவில்லை. இவள் எதற்காக ஷ்யாம் அண்ணாவை இப்போது கம்பேர் செய்கிறாள் என்று யோசித்தாள்.

அவளால் எந்த அனுமனத்திற்கும் வர முடியாததால் நடப்பது நல்லவையாக இருக்கட்டும் என்று விட்டாள்.

கௌசல்யா தங்கள் வீட்டிற்கு சென்று ராம் , மைதிலி இருவரிடமும் கூற, அவர்களுக்கும் ஏன் இந்த அவசரம் என்ற கேள்வியே எழுந்தது.

“ஏம்மா.. அப்படி என்ன அவசரம் மித்ராவிற்கு கல்யாணம் செய்ய ? அவள் மேலே படிக்கலாமே. இல்லை என்றால் தனியாக அவள் சமாளிக்கும் அளவிற்கு அவள் திறமைகேற்ற வேலைக்கு செல்ல பழக்காலாமே “ என்று ராம் கேட்டான்.

மைதிலியும் அதை ஆமோதித்தவள் “அது என்ன. அத்தனை பேர் முன்நிலையில் அந்த பெரியம்மா மித்ராவிடம் சம்மதம் கேட்பாராமா? அவள் முரளி அண்ணன், சபரி அண்ணியை மனதில் கொண்டு, பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும் பதில் சொல்ல முடியாதே. முரளி அண்ணா ஏன் இதை கண்டிக்கவில்லை?” என்று கெளசல்யாவிடம் கேட்டாள்.

“ஹ்ம்ம்.. மாப்பிள்ளை என்ன செய்வார் பாவம்? அவரும் இரண்டு நாட்கள் கழித்து பதில் சொல்கிறோம் என்று தான் சொன்னார். சம்பந்தியம்மாதான் எல்லாத்திலும் தலையிட்டு குழப்பி விட்டுடாங்க”

“இருந்தாலும் அந்த பெரியம்மா இன்னும் கொஞ்சம் இதமா நடந்து இருக்கலாம்” என்று கூறினாள்

மைதிலியும் மித்ராவுடம் தனியாக மாப்பிள்ளை பற்றிய விவரங்கள் கேட்க, அவரிடம் தனக்கு தெரிந்ததை கூறினாள் மித்ரா.

அவளின் குரலில் துள்ளல், உற்சாகம் எதுவும் இல்லாவிடினும், சோர்வும், சோகமும் இருக்கவில்லை.

“ஒருவேளை அவருக்கு இத்தனை பேர் எதிரில் உன்னுடன் பேசுவதற்கு கூச்சமாக இருக்கலாம் மித்துமா. இரண்டு நாள் கழித்து போனில் உன்னை தொடர்பு கொள்ளுவாரா இருக்கும்” என்று அவளுக்கு இதமாக பேசி வைத்தாள் மைதிலி.

என்னதான் பேசினாலும், மாலையில் சைந்தவியிடம் ஷ்யாமோடு, சரவனைனை கம்பேர் செய்து பேசியதை போல், இப்போது மைதிலியிடம் பேசும்போதும் தன்னை அறியாமல் பேச்சில் ஷ்யாமை இழுத்து இருந்தாள் மித்ரா.

இப்போ மைதிலிக்கும் அந்த சந்தேகம் வந்தது ஏன் மித்ரா, சரவணனை ஷ்யாமோடு ஒத்து பார்க்கிறாள்.

இது சமீபத்திய மாற்றாமா? இல்லை எப்போதுமே இப்படிதான் எண்ணுகிறாளோ என்று யோசனை ஓடியது.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.