(Reading time: 12 - 24 minutes)

"வெல். இந்த சாக்லேட் கம்பெனி ரொம்ப பாரம்பர்யமானவங்க. முப்பத்தைந்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் சின்ன பசங்க இவங்க கம்பெனி சாக்லேட்டை சாப்பிடாம வளந்திருக்கவே மாட்டாங்க. ஆனா காலப்போக்குல இந்த கம்பெனி நஷ்டத்தை சந்திச்சு மேற்கொண்டு நடத்த முடியாம மூடிட்டாங்க. இப்போ திரும்பவும் அந்த கம்பெனி சாக்லேட் தயாரிக்க ஆரம்பிச்சிருக்காங்க"

"சரிங்க சார்"

"இந்த சாக்லேட்டுக்கு விளம்பர கதையை தயார் செய்ய முடியுமா?"

"நிச்சயமா சார்"

"நீ நேரம் எடுத்துக்க. நீ சொல்லுற கதை எனக்கு திருப்தியா இருந்தா நீ தான் இந்த விளம்பரத்தோட டைரக்டர்"

"சார்!". வசந்த் ஆச்சர்யத்தில் கண்களை அகல விரித்தான்.

"ஆமா வசந்த். இந்த வாய்ப்பை உனக்கு ஏற்படுத்தி கொடுத்தது இவங்க தான்" என மாடல் பெண்ணை காட்டினார் டைரக்டர்.

"தேங்க் யூ மேடம்"

"நீ சாக்லேட் கதையை பத்தி யோசிச்சு உன்னுடைய ஐடியாவ சொல்லு"

"சரி சார்"

நீண்ட நாள் கண்ட கனவு கையில் கிடைத்துவிட்டதை போல் உணர்ந்தான் வசந்த். அவன் மனம் சொல்ல முடியா பூரிப்பில் பூத்து குலுக்கியது. அந்த சந்தோசத்தை எப்படி கொண்டாடுவது. சாதித்துவிட்டதைப் போல் வானை நோக்கி கைகளை காட்டினான் வசந்த்.

"என்னடா பாத்ரூம் போக சிரமப்படுறவன் மாதிரி என்னலாமோ செஞ்சிட்டு இருக்க. என்ன விஷயம்?" என்று ஜான் கேட்டான்.

"என் கனவு நிறைவேற போகுது. இதுக்காக நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன்"

"விஷயத்தை சொல்லு"

வசந்த் நடந்தவற்றை சுருக்கமாக சொல்லி முடித்தான்.

"சூப்பர்டா. சாதா வசந்தா இருக்குற நீ இனி டைரக்டர் வசந்த். அந்த சாக்லேட் கம்பெனி பேரு என்ன?"

பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டினை ஜானிடம் கொடுத்தான் வசந்த்.

"ஓ! இந்த சாக்லேட்டா"

"இதுக்கு முன்னாடி இந்த சாக்லேட்டை நீ சாப்பிட்டு இருக்கியா?"

"இல்லையே"

"அப்போ ஏன் எல்லாம் தெரிஞ்ச போல இதுவான்னு கேட்ட?"

"பெரிய மனுஷங்கன்னா அப்படி தான். எல்லாம் தெரிஞ்ச போல நடந்துக்கணும். அப்போ தான் மதிப்பாங்க. வரலாறுல கடவுள் பத்தி ஏகப்பட்ட கட்டு கதையிருக்கு"

"புரியலையே"

"அதோ ஜெஸிகா வரா. நடக்கிறத வேடிக்கை பாரு"

"வசந்த் கங்கிராட்ஸ்டா. இப்போ தான் கேள்விப்பட்டேன்"

"தேங்க் யூ ஜெஸ்ஸி"

"என்ன ட்ரீட் தரப்போற"

"எதுக்கெடுத்தாலும் ட்ரீட். ஐ திங்க் வசந்த் இந்த ட்ரீட் என்ற வார்த்தையை சொந்த காசுல செலவு செய்ய விரும்பாத ஒரு கஞ்ச கூட்டம் தான் கண்டுபிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்"

"அடுத்தவங்க விஷயத்துல எப்பவும் தலையிடுற அரைவேக்காட்டு மடையனுங்களை விட கஞ்ச கூட்டம் எவ்வளவோ பரவாயில்லை ஜான்"

"அட நீ ஏம்மா என் மேல கோச்சுக்குற. நான் மகான் சொன்னதை சொன்னேன்"

"எந்த மகான்?"

"1530 ல சீனாவுல வாழ்ந்த ஜாங்கிலி என்ற மகான் சொன்னதை சொன்னேன்"

"என்ன சொன்னாரு?"

"அடுத்தவங்க சந்தோஷத்துல பங்கு கேக்குற மக்கள் கூட்டம் துக்கமான நேரங்கள்ல விலகியே நிக்குது. வாழும்போது கூட்டத்தோடு வாழ்கிறான். இறந்த பின் தனியாக செல்கிறான். அவன் எங்கு செல்கிறான் என்று யோசிக்கவும் மாட்டார் இந்த மதிகெட்ட மனித கூட்டம்"

"ரொம்ப அருமையா இருக்கு ஜான். சூப்பர். எப்பேர்ப்பட்ட கருத்து. அவர் பேரு என்ன?"

"ஜாங்கிலி"

"மனித வாழ்க்கையை எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டார் அந்த ஜாங்கிலி மகான்" என்றபடி ஜெஸிகா அங்கிருந்து நகர்ந்தாள்.

"யாருடா அந்த ஜாங்கிலி?"

"யாருக்கு தெரியும்? சும்மா அடிச்சு விட்டேன்"

"என்னடா சொல்லுற?"

"இதே கருத்தை தான் கொஞ்சம் உல்டா செஞ்சு கஞ்சக்கூட்டம்னு சொன்னேன் மடையன்னு சொன்னா. ஜான் என்ற பேரை எடுத்துட்டு ஜாங்கிலின்னு போட்டேன். மாமேதைன்னு பாராட்டிட்டு போறா. இந்த மக்கள் இருக்காங்களே, அவங்க சொன்னவனை தான் பாப்பாங்க சொற்களை இல்லை"

"அது என்ன ஜாங்கிலி?"

"எனக்கு ஜாங்கிரி ரொம்ப பிடிக்கும் ரி ஐ தூக்கிட்டு லி ஐ போட்டுட்டேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.