(Reading time: 7 - 13 minutes)

பாரதியும், சாரங்கனும் அறையின் வெளியில் கவலையுடன் காத்திருக்க மதி வந்து சேர்ந்தான்...

“என்னாச்சு மதி சார்... ஆளை பிடிச்சுட்டீங்களா...”

“இல்லை பாரதி... கோர்ட் வளாகத்துல இருந்து சுடலை... வெளிய இருந்துதான் குண்டு பாய்ஞ்சிருக்கு...”

“ஓ எங்க இருந்துன்னு கண்டுபிடிச்சுட்டீங்களா....”

“ஹ்ம்ம் இல்லை பாரதி... இன்ஸ்பெக்டர் போய் செக் பண்ணிட்டு வந்திருக்கார்... நான் சந்திரன் சார் நிலைமையை பார்த்துட்டு அப்பறம்தான் போய் விசாரணை ஆரம்பிக்கணும்....”

“மதி சார்... கேஸ் ஹியரிங் 2 மணிக்கு வருது... மணி இப்போவே ஒண்ணரை ஆகுது...”

“கவலைப்படாத சாரங்கா... இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி டைம் மாத்த சொல்லி இருக்கேன்... பார்க்கலாம்...”

“இங்க சந்திரன் எப்படி இருக்கார் சாரங்கா...”

“தோள்பட்டைல பாய்ஞ்ச குண்டு உள்பக்கம் எலும்புல மாட்டி இருக்குது.... அதுதான் ஆபரேஷன் பண்ணி குண்டை எடுக்க போறாங்க... அப்படியே உடைஞ்ச எலும்பை சரி பண்ணவும் plate வைக்க போறாங்க... எப்படியும் இன்னும் ஒரு மூணுல இருந்து நாலு மாசம் வரைக்கும் சீனியர் கையைத் தூக்கறது கஷ்டம்தான்.....”

“ஹ்ம்ம் ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் நடந்துடுச்சு... இது அந்த நாராயணன் இல்லை நரேஷ் இவங்க வேலையாத்தான் இருக்கும்... ஆள் மட்டும் கைல மாட்டட்டும் அப்புறம் அவனுக்கு இருக்கு கச்சேரி....”

சாரங்கனும், மதியும் பேசிக்கொண்டிருக்க பாரதி தன் கையிலிருந்த அலைபேசியையே பார்த்துக்கொண்டிருந்தாள்...

“என்னாச்சு பாரதி... போனையே பார்த்துட்டு இருக்க...”

“மதி சார்... கோர்ட் வாசலுக்கு வரும்போது சரியா எனக்கொரு மெசேஜ் வந்தது... இதுதான் அது பாருங்க....”, தனக்கு வந்த ராஜாவின் புகைப்படத்தை காண்பித்தாள் பாரதி...

“ஹேய் பாரதி.... இது எப்போ வந்துச்சு... என்கிட்டே காட்டவே இல்லை... அச்சோ இப்போ இவர் எங்க மாட்டி இருக்கார்ன்னு தெரியலையே...”

“பாரதி அந்த நம்பர் கொடு... ட்ரேஸ் பண்ண முடியுதான்னு பார்க்கறேன்...”

மதியிடம் பாரதி நம்பர் கொடுக்க... அது தற்போது உபயோகத்தில் இல்லை என்று வந்தது.... மதி தங்களின் கன்ட்ரோல் ரூமிற்கு அந்த நம்பரை அனுப்பி அது யாருக்கு சொந்தமானது.... அதிலிருந்து வந்த மெசேஜஸ், போன் கால்ஸ் எல்லாவற்றையும் பார்த்து சொல்ல சொன்னான்...

“பாரதி இந்த போட்டோ அனுப்பின ஆளு உன்னைத் தொடர்பு கொண்டானா....”

“இல்லை மதி சார்... போட்டோ மட்டும்தான் வந்தது... அதை பார்த்துட்டே இருக்கும்போதுதான் சந்திரன் சார்க்கு அடி பட்டது...”

“இது எல்லாம் பண்றது ஒரே ஆளா, இல்லை ரெண்டு பேரா தெரியலை... அதே மாதிரி இந்தக் கேஸ் மட்டுமா.... இல்லை வேற ஏதாவது கேஸா... அதுவும் குழப்பமா இருக்குது.... ஏன்னா சந்திரன் சார் எடுக்கற எல்லா வழக்கும் கொஞ்சம் சிக்கலானதுதான்...”

“இல்லை மதி சார்... கண்டிப்பா இவங்க ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர்தான் பண்ணி இருக்கணும்... இல்லை ரெண்டு பேரும் சேர்ந்து பண்ணி இருக்கணும்... ஏன்னா நாங்க இதைப் போல பெரிய ஆளுங்க வழக்கு எடுத்து கொஞ்ச மாசம் ஆகுது....”

“அப்படி சொல்ல முடியாது பாரதி... முன்னாடி நடந்த வழக்குல மாட்டினவன் எவனாவது கூட இப்போ வெளிய வந்து வேலை காட்டாலாம்... எல்லா சைடும் நாம செக் பண்ணணும்...”, இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே புதிய எண்ணிலிருந்து பாரதிக்கு அழைப்பு வந்தது....

தொடரும்

Episode 30

Episode 32

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.