(Reading time: 7 - 13 minutes)

சுஜாவின் தந்தையைப் பார்க்கப்போகிறேன் என கல்யாணியிடம் சொல்லிவிட்டு சாரு, கௌஷிக்கின் வீட்டை விட்டுக்கூட வெளியே வந்திருக்க மாட்டாள், அவளின் முன்னே சட்டென வந்து நின்றிட்டது ஒரு கார்…

“மேம்… கௌஷிக் சார் அனுப்பினாங்க… உங்களை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக சொன்னார் சார்…”

டிரைவர் இறங்கி வந்து கூறிட, சாருவோ கௌஷிக்கை எண்ணி வியந்தபடி, காரில் ஏறினாள்…

சுஜாவின் தந்தையை வந்து பார்த்திட்டவள், சுஜாவிற்கு ஆறுதலாகவும், உதவியாகவும் இருந்திட்டாள்…

“சாரு… நீ வீட்டுக்கு கிளம்பலையா?...”

“போகணும் சுஜா?...”

“எப்போ?...”

“கொஞ்ச நேரத்துல…”

“லூசாடி நீ?... நீ வந்து எவ்வளவு நேரமாச்சு தெரியுமா?...”

சுஜா முறைத்துக்கொண்டே அவளிடம் கேட்டிட, தன் கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்தவள், வியப்பான பார்வை ஒன்றை செலுத்தினாள்…

“காலையிலேயே வந்த… இப்போ மணி 7 தாண்டிடுச்சு… இன்னும் கிளம்பாம இருக்குற?...”

“நேரம் போனதே தெரியலை சுஜா…”

“அதுசரிதான்….”

“இல்லடி… நீ வேற தனியா இருக்குற இங்க… நான் வீட்டுக்குப் போய் என்ன செய்யப்போறேன்… சொல்லு?... அதான் உனக்குத் துணையா இங்க இருக்குறேன்…”

“துணைக்கு இருக்க வேண்டியதுதான்… அதுக்குன்னு இப்படியா இருப்ப?...”

“சரி விடுடி…” என்ற சாருவையே சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள் சுஜா…

அவளின் பார்வையை கவனித்தவள், என்ன என்பது போல் புருவம் உயர்த்த, சுஜா எதுவோ கேட்க முனைவதற்குள், அங்கே வந்தான் அவளை அங்கே கூட்டிட்டு வந்த டிரைவர்…

“மேம்,…. உங்களுக்கு போன்…” என்றபடி சாருவின் முன் போனை அவன் நீட்ட, அவளோ விழித்தாள்…

“மேம்….” என அவன் அழுத்தி அழைத்தவாறு, போனை அவன் கொடுக்க, அவள் வாங்கி அதனை காதினில் வைத்தாள்…

“ஹலோ…” என அவள் தயங்கி பேச,

“சாரு… நான் கல்யாணி பேசுறேன்ம்மா….” என்ற குரலில் அவளது தயக்கம் நீங்கியது…

“அம்மா…. சொல்லுங்கம்மா…”

“என்ன சாரு?... மதியம் சாப்பிட கூட வரலை?... இன்னும் வர லேட் ஆகுமா?...”

“இல்லம்மா… இப்ப கிளம்பிடுவேன்….”

“நேரமாச்சே… அதான் போன் பண்ணினேன்…”

“சரி சாரு… சீக்கிரம் வா… நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்…”

“சரிம்மா….” என போனை டிரைவரின் கைகளில் கொடுத்ததும், அவன் அங்கிருந்து அகன்றிட,

“சாரு… எனக்கொரு டவுட்… கேட்கலாமா?...” என்றாள் சுஜா…

“கேளுடி… என்ன தயக்கம் உனக்கு?...”

“இல்ல இவ்வளவு நேரம் நீ இங்க இருந்த சரி… ஆனா, இந்த ஆளும் இவ்வளவு நேரம் இங்க எதுக்கு இருக்கணும்?...”

“எனக்கும் அதான் தெரியலை…” என உதட்டை பிதுக்கியவளையே இமைக்காமல் பார்த்திட்டாள் சுஜா…

“என்னடி என்ன அப்படி பார்க்குற?...”

“ஒன்னுமில்லை… நீ கிளம்பு… நேரமாச்சு….”

அவள் கிளம்பு என சொன்னதும், மறுபேச்சு பேசாமல், சாரு அங்கிருந்து கிளம்பி காரில் ஏறினாள்…

சில நிமிட இடைவெளியில், கார் வீட்டினுள் நுழைய, கல்யாணியோ அவள் வீட்டில் நுழைந்த கையோடு சாப்பாடு பரிமாறி சாப்பிட வைத்தார்…

அவள் எழுந்து தன் அறைக்கு செல்லும் வேளையில், கல்யாணிக்கு போன் வந்திட்டது…

“கௌஷிக்… கண்ணா… எப்பப்பா வருவ?...”

எதிர்முனையில் பேசுவதற்கே இடம் கொடாது அவர் கேட்டிட, சாருவின் கால்கள் அவன் பேரை கேட்டவுடன் அப்படியே நின்றிட்டது…

தாயின் கேள்விக்கு, அவன் என்ன பதில் சொன்னானோ, “சரிப்பா… பார்த்து வா….” என்ற பதிலோடு போனை வைத்திட்டார் கல்யாணி…

அவர் போனை வைத்த்தும், அவரிடம் என்ன ஏது என்று கேட்கலாமா என்று யோசித்த சாரு, அந்த எண்ணத்தை அப்படியே கைவிட்டுவிட்டு, தனதறைக்குச் சென்றாள்…

அவள் அங்கு சென்றது தான் தாமதம் என்பதுபோல், அவளது கைப்பேசி சிணுங்கியது….

போனில் தெரிந்திட்ட பெயரில், முகமெங்கும் புன்னகையுடன் போனை சட்டென அட்டெண்ட் செய்து தன் காதுக்கு கொடுத்தாள் சாரு…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 23

Next episode will be published on 28th May. This series is updated weekly on Monday mornings.

{kunena_discuss:1162}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.