(Reading time: 18 - 36 minutes)

அவன் பக்கம் தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்தவள்,

“ஏன் இந்த ஊருக்கும், வீட்டுக்கும் என்ன குறைச்சல்??? உலக அதிசயமா மனுஷங்க இருக்காங்களே.... போதாதா???” என்றாள் அவள் கோபமாக.

ரச்னாவை காப்பது போல முன் வந்து நின்ற பாட்டி, ரச்னா வீட்டினுள் இருப்பதை சொல்லலாமா வேண்டாமா என் யோசித்த அந்த பெண்... என அந்த வீட்டு மனிதர்கள் ரச்னா மீது காட்டிய அக்கறை நினைவுக்கு வரவும், இப்போதும் ரச்னாவின் கோபத்தை புரிந்துக் கொண்டவனாக இறங்கி வந்தான் அவன்...

“நீ சொல்றது சரி தான்... நான் அப்படி கேட்டது தப்பு தான்... சாரி...”

அவன் அப்படி இறங்கி வந்து பேசியதை கவனித்ததாகவே ரச்னா காட்டிக் கொள்ளவில்லை... மேலே எதுவும் சொல்லாமல் நடந்தாள்...

ஒன்றிரண்டு நிமிடங்கள் பொறுமையாக இருந்த ஸ்ரேயான்ஷ், அதற்கு மேல அமைதியாக இருக்க இயலாம

...
This story is now available on Chillzee KiMo.
...

ற டென்ஷன்...”

“ப்ச்... இதுல இருக்க கொஞ்சம் அக்கறையையாவது நான் குழந்தை பத்தி சொன்னப்போ காட்டி இருந்திருக்கலாம்...”

ரச்னா எத்தனை முயன்றும் அவளின் குரல் உடைந்து தான் ஒலித்தது...

அவளின் வலியை உணர்ந்தவனாக,

“ரச்னா.........” என்றபடி அவளின் கையை பற்றினான் ஸ்ரேயான்ஷ்...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.