(Reading time: 11 - 21 minutes)

“சூப்பர். அத்தான். நீங்க சொல்ற மாதிரி செய்யறேன்”

“அப்புறம் மிதுமா, பாட்டி சொல்றது எல்லாம் பெரிசா எடுத்துக்காத சரியா. இவ்ளோ நாள் நீ எங்க எல்லார் கூட இருந்துட்ட. கல்யாணமானா நீ அவங்க வீட்டிற்கு தனியா தானே போகணும். அங்க போய் நீ கஷ்டப்படகூடாதுன்னு தான் உன் வேலையே நீயே பார்த்துக்கோ. மத்தவங்க சொல்ற மாதிரி வைக்காத அப்படின்னு சொல்றாங்க சரியா? அத நினைச்சு குழம்பாத. “

“ஹ்ம்ம். சரி அத்தான். ஆனால் பாட்டி சொல்லும்போது பயமா இருக்கு”

“அது சரியாயிடும்டா. உன் வருங்கால கணவர் உன்கிட்ட பேசி பழகிட்டார்ணா, உனக்கு புது இடம்ன்னு தோணாது. அதனால் அவர் பேசும்போது நல்லா பேசு. அதே சமயம் அங்க வீட்டில் இருக்கிறவங்களை பத்தி கேட்டு தெரிஞ்சிக்கோ. அது எல்லாம் உனக்கு சப்போர்ட்டா இருக்கும் சரியா”

“ஓகே. அத்தான். நீங்க சீக்கிரம் இந்தியா வாங்க. நீங்க வந்தா எனக்கு இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்”

“கண்டிபாடா.. எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் ட்ரை பண்றேன். ஓகே. பாய்” என்று கூறி போன் வைத்தான்.

அந்த வாய்ஸ் மெசேஜ் கேட்ட போது இருந்த மனநிலை மித்ராவிற்கு இப்போது இல்லை என்று தோன்றியது ஷ்யாமிற்கு. அவளே யோசித்து சரி ஆகி இருப்பாள். இல்லை என்றாலும் அந்த சரவணன் நேற்றைக்கு மீண்டும் பார்த்த பின் அவளுக்கு ஓர் நம்பிக்கை வந்து இருக்கலாம். எது என்றாலும் நன்மைக்கே என்று சற்று நிம்மதி ஆனான்.

பிறகு அஸ்வின்க்கு போன் செய்தான். அஸ்வினிடம் மாப்பிள்ளைக்கு போன் செய்து மித்ராவை பற்றி பேசுமாறு கூறினான. அவனும் அது அவசியமா என்று கேட்க, ஷ்யாம் கட்டாயம் பேசுமாறு கூறவே சரி என்றான்.

ஒரு டாக்டராக அது அவசியம் என்று உணர்ந்தாலும் கூட, ஒரு அண்ணனாக சற்று தயக்கமே. ஆனால் ஷ்யாம் பேசிய பிறகு அது தான் சரி என்று உணர்ந்து சரவணனிடம் பேச சந்தர்ப்பம் பார்த்து இருந்தான்.

ஷ்யாம் மித்ராவிடம் பேசும்போது இரண்டு முறை வேறு கால் வரும் அலெர்ட் கேட்டது. அவன் பேசி முடித்து வைத்ததும், புது நம்பராக இருக்கவே, திருப்பி டயல் செய்வோமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டு இருக்கும்போதே, மீண்டும் கால் வர அட்டென்ட் செய்தாள் மித்ரா.

“ஹலோ “ என

“ஹேய் மித்ரா.. யார் கிட்டே பேசிட்டு இருந்த? எங்கேஜ்டா இருந்தது?

“யார் பேசறது? என்று கேட்டாள்.

“யார் பேசறதுன்னு தெரியலையா? என்று போனில் பதில் கேள்வி கேட்கவே, அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. பொதுவாக அவள் சென்சிடிவ் என்பதால் வீட்டில், நண்பர்கள் யாரும் இப்படி விளையாட மாட்டார்கள். அதனால் அவளுக்கு யார் என்று தெரியவில்லை.

அவள் மீண்டும் “ நீங்க யார் பேசறது? என்று கேட்கவும்.

“ஹேய் . நாந்தான் சரவணன்” என்று கூறவும், இப்போது உதட்டை கடித்துக் கொண்டாள்.

“சாரி. எனக்கு உங்க நம்பர் தெரியாது. அதான் புது நம்பர்லேர்ந்து கால் வரவும் யாருன்னு கேட்டேன்” என்று பேசினாள் மித்ரா.

“என் வாய்ஸ் கூடவா உனக்கு தெரியல?”

“அது” என்று சற்று தயங்கியவள் “எனக்கு கண்டுபிடிக்க தெரியலை” என்று மட்டும் வெளியில் கூறிவிட்டு, மனதில் “என்னமோ ஒரு நாளைக்கு நாலு மணி நேரம் எங்கிட்ட பேசின மாதிரி , வாய்ஸ் தெரியலையான்னு கேக்கறாங்களே. பேசறதே இதான் முதல் தடவை. இதுலே பில்ட்அப் வேறயா.. சப்பா .. இப்போவே கண்ணை கட்டுதே” என்று கவுன்ட்டர் கொடுத்து கொண்டாள்.

“சரி.. நான் அப்போலேர்ந்து ட்ரை பண்றேன்.. எங்கேஜ்டா இருக்கே ஏன்?  என்று மீண்டும் கேட்டான்.

“எங்க அத்தான் ஷ்யாம் பேசினாங்க.” என்று கூற,

“அத்தான்னா யாரு?

“ராம் மாமா பையன்”

“நேத்திக்கு நிச்சயத்தில் பார்க்கலையே?

“அவங்க இங்கே இல்லை ஜெர்மன் போயிருக்காங்க. நம்ம நிச்சயம் தீடிர்னு நடந்ததாலே அவங்க வரலை.”

“ஒஹ்.. அதுக்கு இப்போ ஏன் பேசினாங்க?

“இல்லை. நேத்தே பேச ட்ரை பண்ணாங்க. எல்லோருமே அங்கே பிஸியா இருந்ததால் பேசலை. அதான் இன்னிக்கு பேசினாங்க. “

“ஹ்ம்ம். சரி. நான் இனிமே இந்த டைம் போன் பண்ணுவேன். எங்கிட்ட பேசு . சரியா?

“ஹ்ம்ம் .சரி. ஆனால் அத்தானுக்கு வேற டைம் ஜோன் இல்லையா. அவங்களுக்கு இந்த டைம் வசதியா இருக்கும். நீங்க ஒரு ஒன் அவர் கழிச்சு பேசுங்களேன். இல்லை நானே இவங்க கிட்டே பேசிட்டு உங்களுக்கு கால் பண்றேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.