(Reading time: 11 - 21 minutes)

“நோ. அது எல்லாம் முடியாது. நான் ஆபீசெர்ல்ந்து வீட்டிற்கு இந்த டைம் கார்லே போவேன். அப்போ தான் என்னாலே பேச முடியும். சோ நீ என் கூடத்தான் பேசறே . ஓகே” என்று கண்டிப்பாக கூறவும், மித்ரா சற்று பயத்துடன்

“சரி “ என்றாள்

அதற்கு பின் சரவணன் அவனை பற்றி சொல்லிக் கொண்டே போக, மித்ரா “ம்” கொட்டிக் கேட்டுக் கொண்டாள். அவளை பேசவே விடாமல் அவனே பேசிக் கொண்டு இருக்க, அவளுக்கு தூக்கம் வரும் போல் இருந்தது. இருந்தாலும் அதை கட்டுபடுத்திக் கொண்டாள். ஒரு கட்டத்தில் சத்தமாக கொட்டாவி விட,

“ஹேய்.. என்ன ஆச்சு? என்று சரவணன் கேட்டான்.

அவனிடம் என்ன சொல்ல என்று எண்ணும்போதே, சரவணனுக்கு வீடு வந்து இருக்க,

“சரி. சரி.. விடு.. நான் வீட்டுக்கு வந்துட்டேன். அம்மா பார்த்துக்கிட்டு இருப்பாங்க. அதனால் போன் வச்சுடறேன்” என்று அவள் பாய் கூட சொல்லவில்லை வைத்து விட்டான்.

மித்ராவிற்கு என்னவோ எதிலிருந்தோ விடுதலை ஆன உணர்வு தான் தோன்றியது.

பிறகு உடனே அவள் ஷ்யாமிற்கு அடிக்க, அவன் அப்போது தான் டின்னேர்க்கு அமர்ந்து இருந்தவன், மித்ரா நம்பர் பார்த்து

“சொல்லு மிதுமா” என்றான்.

“அத்தான். நீங்க சொன்ன மாதிரி அவங்க என்கூட இன்னிக்கு பேசினாங்க” என்று கூறினாள்.

“குட். ஒரு சிலர் முதலில் கொஞ்சம் தயங்குவாங்க. அப்புறம் நல்லா பேசுவாங்க. நீயும் அவர் கிட்டே நல்லா பேசினதானே?

“நீங்க வேற அத்தான்.. நான் வெறும் ஊம் தான் சொன்னேன். அவர் தான் பேசிட்டு இருந்தாரு”

“சரிடா.. முதலில் அவர பத்தி சொல்லிட்டு , அப்புறம் உன்னை பத்தி தெரிஞ்சிப்பார் சரியா”

“ஹ்ம்ம். ஓகே. அப்புறம் அவர் சாயந்தரம் தான் பேசுவாராம். நீங்க அந்த டைம் பேசுவீங்க. அதனால் ஒருமணி நேரம் கழிச்சு பேசுங்க இல்லை நானே பேசறேன்னு சொன்னேன். அவர் கிட்ட தான் பேசணும்னு சொல்லிட்டார்” என்று சொல்ல, கேட்ட ஷ்யாமிற்கு என்னவோ போல் இருந்தது.

சரவணன் மித்ராவை தவறாக எடுத்துக் கொண்டாரா, இல்லை தன்னை தவறாக எடுத்துக் கொண்டாரா என்று அவனுக்கு புரியவில்லை. அஸ்வின் அவரிடம் பேசிய பின் அவர் மாறலாம். அல்லது தன்னை நேரில் சந்தித்த பழகிய பின் அவருக்கு புரியலாம் என்று தோன்றியது. அந்த எண்ணத்தோடு போனை பார்க்கும் போது தான் மித்ரா லைனில் இருப்பது புரிந்து

“சரிடா.. நான் இனிமேல் இந்த டைம் போன் பண்றேன். அவருக்கு வேற வேலை இருக்கும். இல்லை வீட்டில் யாரவது டிஸ்டர்ப் பண்ணிட்டு இருப்பாங்கன்னு அப்படி சொல்லிருப்பார். “ என்று கூறவும்

“சரி அத்தான். அதை சொல்லத்தான் இப்போ போன் பண்ணினேன். நீங்க போய் சாப்பிடுங்க” என்று வைத்து விட்டாள் மித்ரா.

ற்று நேரம் ஏதோ யோசித்த ஷ்யாம், பிறகு அஸ்வின் அவரிடம் பேசும்போது என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டான்.

ஷ்யாம் சொன்னதற்காக மட்டும் இல்லாமல், ஒரு டாக்டராகவும் சரவணனிடம் பேச தயார் ஆனான் அஸ்வின்.

அவன் சரவணன் நம்பர் வாங்கி பேசும்போது

“ஹலோ.. நான் அஸ்வின் பேசறேன்”

“எந்த அஸ்வின் ? “ என்று கேட்டான் சரவணன்.

“உங்க வுட்பி மித்ராவின் அண்ணன்” என்று கூற,

“ஒஹ். சொல்லுங்க அஸ்வின். என்ன விஷயம்?” என்று கேட்டான்.

“இல்லை உங்ககிட்டே பேசணும். நீங்க ப்ரீயா.?

“நான் எப்போவும் பிஸி தான். நீங்க சொல்லுங்க “ என்று கூறிக் கொண்டே, அங்கே ஆபீசில் யாருடனோ “இந்த அக்கௌன்டஸ் டிடைல்ஸ் எல்லாம் இன்னும் பத்து நிமிஷத்திலே எடுத்துட்டு வாங்க” என்று பேசினான். திரும்பி

“சொல்லுங்க சார்” என்று பிசினஸ் லைக் போல் கேட்டான். என்னடா தன் வருங்கால மனைவியின் அண்ணன் பேசுகிறானே, எதுவும் முக்கியமோ என்ற எண்ணம் எல்லாம் இல்லாமல் வெகு சாதாரணமாக பேசினான்.

“மித்ரா பத்தி பேசணும். நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்கன்னா, வேற டைம் சொல்லுங்க நான் கால் பண்றேன்” என்று மீண்டும் கேட்டான்.

“அது எல்லாம் வேணாம் சார். இப்போவே சொல்லுங்க. “ என்று அவன் சொல்லவே,

“அது.. மித்ரா மத்த பொண்ணுங்க மாதிரி கிடையாது. கொஞ்சம் ஸ்லொவ். நீங்க எதுவானாலும் அவளுக்கு ரெண்டு , மூணு வாட்டி சொல்லி புரிய வசீங்கன்னா, அப்புறம் அவளே அத பாலோ பண்ணிக்குவா. இது எல்லாம் உங்களுக்கு கல்யாணத்திற்கு முன்னாடி தெரிஞ்சா, அவள நீங்க பார்த்துக்க வசதியா இருக்கும். அதான் சொல்லலாம்னு போன் செய்தேன்”

அவன் பேசிய விஷயத்தை சீரியசாக எடுக்காத சரவணன் “அதுக்கென்ன சார் நான் பார்த்துக்கறேன். வேற ஒன்னும் இல்லையே” என்று கூறி வைத்து விட்டான்.

அஸ்வின் எண்ணியது இப்படி ஆரம்பித்தால், அவன் ஏன், எதனால் என்று கேட்பான் அப்போது முழு விவரம் சொல்லி விடலாம் என்று நினைக்க, அவனோ அதோடு போன் வைத்து விட்டான்.

இப்போது அஸ்வினுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சரவணனுக்கு புரிந்ததா, இல்லையா..? அவனின் சுபாவம் என்ன? என்று குழப்பம் ஏற்பட்டது.

தொடரும்

Episode # 07

Episode # 09

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.