(Reading time: 28 - 55 minutes)

தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு அவனிடம் “ஒண்ணும் இல்ல விஷ்ணு. லைட் ஃபிவர் தான்”  என்று கூறும் போதே அவள் உதடுகள் நடுங்கின.

அவள் கூறி முடிப்பதற்குள், அந்த அறைக்கு வந்த பார்வதி “லைட் ஃபிவரா, 102 டிகிரி பா காய்ச்சால்” என்றார்.

“102 ஆ” என்று அனுவின் நெற்றி தொட முயன்றான் விஷ்ணு. ஆனால் அவன் கை படாமல் விலகினாள் அனு.

அனு தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்று அவனும், அவனிடம் இனி சிறிது இடை வெளியுடன் தான் பழக வேண்டும் என்று அனுவும், நினைத்துக் கொண்டனர்.

விஷ்ணு, அவளிடம் ஏதோ கூற வாய் எடுக்க, அதற்குள் அங்கு வந்தாள் திவ்யா. “ஏய் லூசு என்ன டி ஆச்சு, இப்படி உட்காந்து இருக்க” என்று பதற்றமாய் கேட்க, அவளுக்குப் பதில் கூறக் கூட தெம்பு இல்லாமல் அமர்ந்திருந்தாள் அனு.

“ஃபிவர் திவ்யா. 102 டிகிரியாம்” என்று திவ்யாவிற்கு பதில் அளித்தான் விஷ்ணு.

“ஃபிவர் வர அளவுக்கு என்ன டீ பண்ண” என்று அவளை தன் தோளில் அணைத்தவாறே கேட்டாள் திவ்யா.

“அதொலாம் ஒண்ணும் இல்ல டி. நான் ரூமுக்கு போகனும். கொஞ்சம் ஹெல்ப் பன்றியா?” என்று கேட்டுவிட்டு, திவ்யாவின் பதிலுக்காகக் காத்திருக்காமல் எழ முயன்றவள் தடுமாறி விழ, அவளைத் தாங்கி பிடித்தான் விஷ்ணு.

ஆனால் அனுவோ சட்டென்று அவன் கையை உதறி விட்டு சோபாவில் அமர்ந்தாள். அவள் செய்கையால் விஷ்ணுவின் முகம் வாடியது.

திவ்யாவும் அதைக் கவனிக்காமல் இல்லை. ஆனாலும் அங்கே எதுவும் கேட்க வேண்டாம் என்று விட்டு விட்டாள். அனுவை தாங்கியவாறு பிடித்துக் கொண்டு, அவள் அறைக்கு அழைத்து வந்தாள்.

அவன் கண்ணில் இருந்து அவள் மறையும் வரை அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் விஷ்ணு. ஆபத்தில் நண்பனாக உதவக் கூட தகுதி இல்லாதவன் ஆகிவிட்டேனே என்று அவன் மனம் வருந்தியது. அதற்கு மேல் அங்கு இருக்க அவன் மனம் ஒப்பவில்லை, கண்களின் ஓரம் கண்ணீரோடு அங்கிருந்து நகர்ந்தான்.

அனு அவள் படுக்கையில் சாய்ந்தவாறு அமர, அவள் அருகில் உட்கார்ந்தாள் திவ்யா.

“என்ன டீ பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்” என்று கீழே நடந்த நிகழ்வைப் பற்றி கேட்டாள்.

தான் விஷ்ணுவிடம் இருந்த விலகியதை திவ்யா பார்த்திருப்பாள் என்று அனுவிற்கு தெரியும். அந்தக் கேள்வியும் அனு எதிர் பார்த்ததுதான்.

ஆனாலும் தன் நிலைமையை விளக்கிக் கூறுவதற்கான தெம்பும், சுழலும் அது இல்லை என்று நினைத்தவள் “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை திவ்யா” என்று மட்டும் கூறிவிட்டு தன் கண்கள் முடிக் கொண்டாள்.

கண்டிப்பாக எதோ சரியில்லை என்று திவ்யாவிற்கு தெரியும், ஆனாலும் அனு தற்போது இருக்கும் நிலைமையில் அதைப் பற்றி மேலும் பேச வேண்டாம் என்று தோன்ற, திவ்யா அதோடு தன் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

அதற்குள் அனுவின் உடல் நிலையைப் பற்றி அறிந்து கொண்ட திபக் அங்கு வந்தான். அனுவின் வாடிய முகத்தைப் பார்த்தவனின் மனமும் வாடியது.

திவ்யாவிற்கு செய்கையால் “ஹய்” சொல்ல, நாகரிகம் கருதி திவ்யா எழுந்து நின்றாள். அனுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்த தீபக், “அனு” என்று அவளை அழைக்க, அவனின் குறளை உணர்ந்து கொண்டவள் கண்களைத் திறந்தாள்.

திபக்கை கண்டவளுக்கு மனம் முழுக்க குற்ற உணர்ச்சியே மேலோங்கி இருந்தது. அவளை அறியாமலே அவள் கண்களில் கண்ணீர் கசிய ஆரம்பித்தது.

அதைக் கண்ட திபக், பதற்மாய் “என்ன அனு. என்ன ஆச்சு” என்று கேட்டு கொண்டிருக்கும் போதே அனு மயக்கமாகிப் படுக்கையில் சாய்ந்தாள்.

அவளுக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை, ஆனால் தன்னை சுற்றி பேச்சுக்களும், ஆள் நடமாட்டமும் இருபதை மட்டும் உணர முடிந்தது. மெதுவாகக் கண்களை திறந்தவள் முன்னால் அனைவரின் கவலை தோய்ந்த முகங்களும் தெரிந்தன. எழுந்து உட்கார முயன்றவள், அப்போதுதான் தன் கைகளில் வாயிலாக குல்கோஸ் ஏறுவதைப் பார்த்தாள்.

அவள் அருகில் அமர்ந்திருந்த ராஜ சேகர் “ ஒண்ணும் இல்ல டா. நீ கொஞ்சம் வீக் ஆ இருக்க நு டாக்டர் சொன்னார், அவ்வளவுதான்”. என்று பரிவாக அவள் தலையை வருடியவாறே.

அனு எதோ கூற முயல அதற்குள் "அனு நீங்க எதுவும் பேச வேண்டாம், ரெஸ்ட் எடுங்க" என்று அக்கரையோடு திபக் கூற அதைச் சரி என்று ஆமோதித்தனர் அனைவரும்.

திபக்கிற்கு கிளம்ப மனம் இல்லை என்றாலும் அதற்கு மேல் அங்கு இருப்பது சரி இல்லை என்று தோன்ற, அனைவரிடமும் கூறிவிட்டு கிளம்பினான்.

இரவில் மருந்து கொடுக்க வேண்டும் என்பதால் அனுவுடன் திவ்யா தங்குவதாக ஏற்பாடு ஆனது. அனுவிற்கு உணவு கொடுத்து விட்டு அவள் பெற்றோர் சொல்ல திவ்யாவின் மடியில் தலை வைத்த வாரே படுத்திருந்தாள் அனு.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.