(Reading time: 28 - 55 minutes)

“நம்ம பொண்ணுக்கு இந்தக் கல்யாணத்தில் முழு சம்மதம் தானே. ஏன் கேக்குரேனா, எனக்கு என்னமோ அவ வெளியே சிரித்து சந்தோஷமா இருந்தாலும் அவளிடம் ஏதோ ஒன்று குறைகிறது” என்றார் ராஜ சேகர். அவளைப் பெற்றவர் அல்லவா, அவளின் அழுகை சிரிப்பு மகிழ்ச்சி கோபம் என எல்லாத்தையும் பார்த்தவர். இது மட்டும் எப்படி அவர் கண்களில் இருந்து தப்பும்.

“அட என்னங்க, நம்ம பொண்ணு சம்மதம் சொல்லிதானே திருமண ஏற்பாட்டையே செய்தோம். என்னதான் கல்யாணம் சந்தோஷம் தர விஷயமா இருந்தாளும், ஒவ்வொரு பொண்ணுக்கும் தன் பெத்தவங்களை விட்டு பிரியிரது ஒரு வலிதாங்க. அதுதான் நம்ம பொண்ணுக்கும். எல்லாம் கொஞ்ச நாளுல சரியாகிடும். அப்பறம் பாருங்க நீங்க எதிரில் போய் நின்னா கூட யாரு நீங்க நு கேட்பா” என்று கூறி கிண்டலாகச் சிரிக்க, “அதெல்லாம் என் பொண்ணு என்னை அப்படி மறக்க மாட்டா” என்று தன் மிசையை முறுக்கியவாறே கூறினார் ராஜ சேகர்.

அதற்குள் யாரோ அழைக்க அங்கிருந்து ராஜ சேகர் செல்ல, தன் மகளையே பார்த்துக் கொண்டிருந்த பார்வதி மனதிற்குள் தன் கணவர் கேட்ட கேள்வி தன் மனதிற்குள்ளும் வெகு நாட்களாக இருப்பதையும் அதை திவ்யாவிடம் கூறி வருத்தப் பட்டதையும் எண்ணி பார்த்துக் கொண்டார்.

நேரம் செல்ல செல்ல விஷ்ணுவின் மனதில் வலி அதிகம் ஆனது. அவள் திருமணத்தை எளிதில் கடந்துவிடலாம் என்று எண்ணியவனுக்கு அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று புரிய வந்தது. அவன் எவ்வளவுதான் தனக்கு தானே சமாதானம் கூறினாலும் அவன் மனம் அமைதியானதாகத் தெரியவில்லை.

மண்டபத்தில் எங்குப் பார்த்தாலும், சிரிப்பு சத்தமும், பாடலும் ஆடலும் என மகிழ்ச்சியால் நிரம்பி இருந்தது, இரு மனங்களைத் தவிர. அனுவிற்கு இருக்கும் ஒரே தைரியமும் தெம்பும் திவ்யாதான். அந்த மொத்த மாலை வேலை முழுவதும் அனு திவ்யாவை தன் அருகிலையே இருக்குமாறு கூறி இருந்தாள்.

திவ்யாவிற்கும் ஏதோ ஒன்று சரியில்லை என்பது தெரியும் ஆனால் அதற்கு என்ன செய்வது என்றுதான் தெரியவில்லை. நடப்பது நடக்கட்டும் என்று இருந்தாள்.

இரவு வேளை நெருங்க நெருங்க, திருமண அழைப்பிற்கு வந்தவர்கள் வீடு திரும்பினர். மறுநாள் காலையில் முகுர்த்தம் என்பதால் இரவு பத்து மணிக்கெல்லாம் மண்டபம் விரிச் சோடி காணப்பட்டது.

திபக்கும் அனுவும் சேர்ந்து இரவு உணவை முடித்து விட்டு தங்கள் அறைக்குச் சென்றனர்.

விஷ்ணுவிற்கு ஏனோ மனம் இருப்பு கொள்ளவில்லை. இதற்கு மேல் சொல்லாமல் இருக்க முடியாது என்று முடிவு செய்துவிட்டான். வேகமாக அனு இருக்கும் மணமகள் அறைக்குச் சென்றான்.

அதுவரை கூடவே இருந்த திவ்யா, அப்போதுதான் எங்கோ சென்றிருந்தாள். அனு மட்டும் தனியாக, அலங்கார மேஜை மீது இருந்த பெரிய கண்ணாடியில் பித்து பிடித்தவள் போல் தன் உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் (வேறு என்ன செய்ய முடியும் அவளால்).

வேகமாக அனுவின் அறைக்கு வந்தவன், கதவு திறந்திருக்க, அவள் உருவத்தைக் கண்ணாடியில் பார்த்து சிறிது நேரம் அப்படியே நின்றுவிட்டான். அவளுக்கு அவன் அங்கு இருப்பது தெரியவில்லை.

அவளின் கவனத்தை கலைப்பதற்காகக் கதவை மெல்லமாக தட்டினான். அவளிடம் இருந்த எந்த அசைவும் இல்லை.

“அனு” என்று மெல்லமாக அவள் பேரை சொல்ல, தாயின் குரலை உணரும் பிள்ளை போல் அவன் குரலை கண்டறிந்தவள் தன் நினைவிற்கு வந்து, அவன் பக்கம் திரும்பினாள். அவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. இருவரும் ஒருவரை ஒருவர் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அனைத்து உணர்ச்சிகளும் செத்தவனாய் நின்றிருந்தான் அவன். அவன் உள்ளத்தின் வலியை, அவன் முகம் கண்ணாடி போல் காட்டியது. ஆனால் அவன் வலியை உணர்ந்து கொள்ளும் நிலைமையில் அவள் இல்லை. இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டதே தவிர அவை பேசிக் கொள்ளவில்லை.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு “நான் போறேன் அனு. இனி மேலும் என்னால் இங்க இருக்க முடியாது” என்று தன் வலிகளை எல்லாம் அடக்கிக் கொண்டு கூறிய விஷ்ணு.

“ஏன் விஷ்ணு, என்ன ஆச்சு” என்று பதறி போய் கேட்டாள் அனு.

“இல்ல அனு நான் கிளம்புறேன். இதற்கு மேல் என்னால் தாங்க முடியாது. ஆனால் போறதுக்கு முன்னாடி” என்று இழுத்தான் விஷ்ணு.

என்ன என்பது போல அவனைப் பார்த்தாள் அனு.

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் என்று “ அனு, ஐ லவ் யு. நீங்கனா எனக்கு ரொம்ப பிடிக்கும். இப்ப இத சொல்றதால என்ன ஆகும் என்று எனக்குத் தெரியாது. ஆனா நா போறதுக்கு முன்னாடி இதை சொல்லனு னு தோனுச்சி. அதான் சொல்லிடேன். தப்பா இருந்தா என்ன மன்னிச்சீடுங்க” என்று தன் மனதில் இருந்த அத்தனையையும் அவளிடம் போட்டு உடைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.