(Reading time: 28 - 55 minutes)

“அவன் இங்க இல்ல பா. அவன் போயிட்டானு தான் இங்க மேடம் ஒரே க்ரையிங்” என்று அனுவை சீண்டினால் திவ்யா.

“சீ சும்மா இருடி” என்று திவ்யாவை அதட்டிவிட்டு, “அப்பா, அவர் இங்க இல்ல பா. போயிட்டாறு” என்றாள் தன் தந்தையைப் பார்த்து. அவனைப் பற்றி கூறும்போது அவள் வார்த்தையில் ஒரு சிறு சோகம் இருப்பதையும் ராஜசேகர் கவனிக்கத் தவறவில்லை.

“பாருங்க பா, அதுக்குள்ள விஷ்ணு, அவர் ஆயிட்டான்” என்று மீண்டும் அனுவின் காளை வாரினாள் திவ்யா.

ஒரு முறைப்பை மட்டும் பதிலாய் திவ்யாவிற்கு கூறினாள் அனு.

“விடு டா, என் பொண்ணு பாவம். அனு நீ கவல படாத, விஷ்ணு எங்க இருந்தாலும், உன் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்த வேண்டியது என்னோட பொறுப்பு” என்று ராஜசேகர் கிளம்பினார்.

அதற்குள் அனு “அப்பா அவர் எங்க போயிருப்பாரு னு எனக்குத் தெரியும். நீங்க தப்பா நினைக்களனா நானே போய் கூப்பிட்டு வறேன்” என்று இழுத்தாள் அனு.

ராஜசேகருக்கு தன் மகளின் எண்ணம் புரிந்தது. “அதுவும் சரி இந்த வயசான காலத்துல நான் எங்க அலஞ்சி அவனை, ஸாரி ஸாரி, உங்க அவரை தேடுறது. நீயே போய் கூப்பிட்டு வா” என்று அவரும் அவர் பங்கிற்கு அனு ஓட்டினார்.

“அப்பா நீங்களுமா” என்று அனு சிணுங்க, “ ஸாரி டா சும்மா சொன்னேன். இந்தா என் கார் கீ. பார்கிங்ள வண்டி நிக்குது. பார்த்து பத்திரமா போய்ட்டு சீக்கிர விஷ்ணு வ கூட்டிட்டு வா” என்று வண்டியின் சாவியை அவளிடம் கொடுத்தார் ராஜ சேகர்.

“தேங்ஸ்பா” என்று தன் தந்தையைக் கட்டி அனைத்து முத்தம் கொடுத்தால் அனு.

அதற்குள் திவ்யா, “ஆமா டி அனு, வா சீக்கிரம்ப் போயிட்டு வருவோம். அப்போ தான் சீக்கிரம் தூங்கி  மார்னீங்  ஃப்ரெஸ்ஷ போட்டோக்கு ஃபோஸ் கொடுக்க முடியும்” அனுவோடு கிளம்பத் தயார் ஆனாள்.

“நிறுத்து, நீ எங்க கிளம்புர” என்றாள் அனு.

“உன் கூட தாண்டி, நீ தனியா போறல அதான் துணைக்கு” என்று இழுத்தால் திவ்யா.

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம். நாங்க பத்தரமா போயிட்டு வருவோம்” என்று அவளுக்கு பல்ப் கொடுத்தாள் அனு.

“ஒ அவ்வளவு தூரம் வந்துடுச்சா, பாத்துகலாம் டீ. லவ்வுனு வந்தோன இந்த பிரெண்ட கழட்டி விடுரல” என்று பொய்யாக கோவித்துக் கொண்டாள்.

“நோ டார்லிங், எத்தன பேர் வந்தாலும், நீதான் என்னுடைய பர்ஸ்ட் டார்லிங். அவர கூப்பிட்டுட்டு உடனே வந்துடுறேன். புறுஞ்சிக்க பா” என்று திவ்யாவை அனைத்துக் கொண்டு செல்லம் கொஞ்சினாள் அனு.

“தட்ஸ் மை டார்லிங். போய்டு சீக்கிரம் வந்துடு. இந்த மறக்காம உன் மொபைல எடுத்துட்டு போ” என்று அவளிடம் கைப்பேசியைக் கொடுத்தாள் திவ்யா.

திவ்யாவிற்கு தேங்ஸ் சொல்லி விட்டு, தன் தந்தையிடம் ஆசி பெற்று விட்டு விஷ்ணுவைப் பார்க்க கிளம்பினாள் அனு.

தே சமயம், இங்கு நடந்தது, எதுவும் தெரியாமல், தன் படுக்கையில் சவம் போல் கிடந்தான் விஷ்ணு. மண்டபத்தில் இருந்து நடைப் பிணமாக வந்தவன், விட்டத்தைப் பார்த்தவாறு தன் படுக்கையில் சாய்ந்தவன் மனம் முழுக்க, தன் காதலை கூறிய பின் இருந்த ஜிவன் இல்லாத அவளின் முகம்தான்.

அவனைச் சுற்றி நடப்பது எதுவும் அவனுக்குத் தெரியவில்லை. அவனது கைப்பேசி அலறிக் கொண்டிருந்தது. அதன் சத்தம் கூட அவன் காதில் விழவில்லை.

அதற்குள் அனு அவன் வீட்டை அடைந்தாள். காரை நிறுத்திவிட்டு, விஷ்ணு என்று அவன் பெயரை அழைத்துக் கொண்டே ஓடி வந்தாள்.

அதுவரை மரமாய் கிடந்தவன், அவள் குறளை கேட்டவுடன் படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தான்.

அவள் ஓடி வந்து கதவை திறக்கவும், நின்று கொண்டிருந்த விஷ்ணு  மறையவும், எதிரே தொங்கி கொண்டிருந்த கடிகாரம் காட்டிய மணி 12.

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும் . . .

Episode # 18

Episode # 20

{kunena_discuss:906}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.